முகம் அழகு பெற..

tnkesaven

New member
முகம் அழகு பெற...
* படுக்கும் முன், கண்களுக்கு விளக்கெண்ணெய் விட்டு கொண்டால், இமைகள் அடர்த்தியாக வளரும்.
* கண்களின் அடியில், பல காரணங்களால் கருவளையம் தோன்றும். தயிர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை மூடி, அரைத்த வெள்ளரி விதையை சேர்த்து, எல்லாவற்றையும் பேஸ்ட் போல் குழைத்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வந்தால், ஒரு மாதத்தில் மறையும்.
* குங்குமம், சாந்து இட்டு ஏற்பட்ட புண்களை அகற்றுவதற்கு, கடுக்காயை சந்தனக்கல்லில் உரைத்துப் போட்டால் நல்ல பலன் இருக்கும்.
* வெயில் வாட்டி எடுக்கும் சம்மர் சீசனிலும், மிகக் கடுமையான குளிர்காலங்களிலும், முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவக் கூடாது. தண்ணீர், முகத்தை மேலும் வறட்சியடையச் செய்யும். அதனால், முகத்தில் பால் அல்லது தயிர் (வறண்ட தோல்காரர்களுக்கு) பூசிய பிறகே, தண்ணீரால் கழுவ வேண்டும்
 
Back
Top