அன்புடையீர்!
நமது தமிழ்மன்றத்தின் பண்பலை ஆர்ப்பாட்டமாகத் துவங்கி விட்டு ஆரவம் இல்லாமல் போய்விட்டதே என்ற எண்ணப்பாடு உங்களுக்கு இருக்கும். மன்றப் பண்பலை அடங்கிடவிடவில்லை. அடக்கமாகத் தன் அடுத்த பாய்சலுக்குத் தயாராகி விட்டது. ஆம்! இதுவரை காலமும் குறிப்பிட்ட சில நண்பர்கள் மாறி மாறி நேரம் ஒதுக்கி ஒலிபரப்பை மேற்கொண்டிருந்தனர். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நன்றியுடன் நினைவுகூரும் இவ்வேளையில், ஆதியின் அயராத முயற்சி பண்பலையின் தடையின்றிய பாயச்சலுக்குப் பாதையைத் திறந்து விட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
ஆம்!
சர்வர் மூலம் தன் ஒலிபரப்பை தொடர இருக்கும் பண்பலையில் இனி நிகழ்ச்சிகள் சீராகவும் சிறப்பாகவும் ஒலிவீச வேண்டும். அந்த இனிய தருணம் மலருவதற்காக உங்கள் உதவிக் கரங்களை இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வினாச்சிமிழ்களில் உங்கள் பதில்களை நிரப்புங்கள். விபரமாகச் சொல்ல விரும்பினால் கீழே அறியத் தாருங்கள்.
கதம்பம் என்ற நிகழ்ச்சிக்குள் இருக்கும் பல சுவைகளைப் பற்றியே கருத்துச் சாவிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அவ்வெல்லைக்கு அப்பாலிருந்தும் கருத்துப் பகிரல் வரவேற்கப்படுகிறது.
கருத்துகள் உருவாகும் போது புதிய குருத்துகள் உருவாகின்றன. பசுமைக்கு வழி பிறக்கின்றன. எனவே உங்கள் மனச்சிந்தல்களை இங்கே சிதற விடுங்கள்.
விரைவில் புதிய முகவரியில் நமது பண்பலை வாயிலாக மீண்டும் சந்திப்போம்.
நன்றி.