ஸ்பிரிட் - (மலையாளம்) - സ്പിരിറ്റ്

தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்த படம். பல இடங்களிலும் 'மிஸ்' ஆகி விட்டது. எப்படியோ நேற்று எங்கள் ஊரில் தொலைக் காட்சியில் காண்பித்ததாக அறிவித்ததும், அதற்கெனவே நேரம் ஒதுக்கி ஸ்பிரிட்-உடன் பார்த்து ரசித்த படம்.

டாஸ்மாக் எந்த விதங்களில் சமூகத்தில் பல நிலகளிலும் வாழும் மனிதர்களைப் பாதிக்கிறது என்பதை கலை நயத்துடன் அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தது ரசிக்கக் கூடியதாக இருந்தது. நல்ல .. மெச்சூரான .. பகுத்தறிவுள்ள ஆடியன்ஸ் இருந்தால் இந்த விதமான ஆஃப் பீட் படங்கள் வெற்றி அடைய முடியும் என்பதை நிருபித்துள்ளது.

ஐந்து மொழிகள் அறிந்த வெரி இண்டலக்சுவல் கதாநாயகன், போதையில் மிதந்தாலும் ஸ்பிரிட் என்ற ரியாலிட்டி ஷோ வெற்றிகரமாக நடத்துவது... விவாகரத்து பெற்றும் மாஜி மனைவியுடனும் அவளது கணவனுடனும் தனது ஊமை மைந்தனுடனும் சகஜமாகப் பழகுவது .. ("ஐந்து மொழி தெரிந்து என்ன பயன்?... மகனுடன் பேச ஊமை மொழி படிக்கவில்லையே" என்ற எக்ஸ்-மனைவியின் நக்கல் டயலாக் தூக்கலாக இருந்தது). சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் காரணம் என்று பலரும் நினைக்க வைத்து பின்னர் 'தெளிவு' பெருவது ... பின்னர் சற்று சினிமாத்தனம் தலை தூக்கினாலும் சமுதாயத்துக்கு ஒரு செய்தியுடன் முடிக்கும் கதை.

அவ்வப்போது படம் பார்க்கும் பலரும் நமது சொந்தச் சாயல்களைச் சில பாத்திரங்களுடன் ஒன்றிணைத்து எண்ண வைக்கக் கூடும்..

ஆர்ட் படம்போல இருந்தாலும் தொய்வு இல்லாமல் செல்வதே கமர்ஷியலாக வெற்றிக்குக் காரணமாக இருக்கக் கூடும்.
 
தங்களின் பார்வை இப்படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை எம்முள் தூவுகிறது.. விமர்சன பகிர்வுக்கு நன்றி பால்ராஜ் அண்ணா..!!:)
 
மலையாளப்படங்கள் இப்படி கலை நயத்துடன் எடுப்பார்கள். உங்கள் விமர்சனம் என்னைப் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது.
 
ஜஸ்ட் மிஸ்ட் ஆரென்...
கடந்த ஞாயிறு ஒரு மணிக்கு வசந்தம் செண்ட்ரலில் காண்பித்தார்கள்..!!
 
ஜஸ்ட் மிஸ்ட் ஆரென்...
கடந்த ஞாயிறு ஒரு மணிக்கு வசந்தம் செண்ட்ரலில் காண்பித்தார்கள்..!!

ஊரில்தான் இருக்கிறீர்களா? அப்படின்னா பார்க்கலாமா? நேரம் கிடைக்கும்போது போன் செய்யவும்.
 
Back
Top