கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

மதி

New member
karthikai1.jpg


மன்ற உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்மன்ற பண்பலையின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று நம் பண்பலையில் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி, தாமரையின் "
தீப ஞானம்" இந்திய நேரப்படி மாலை ஐந்து மணியளவில் ஒலிபரப்பாகவுள்ளது.

கேட்டு மகிழுங்கள்.!!

நன்றி!!!

அன்புடன்
தமிழ்மன்ற பண்பலை
 
diwalilamps.gif



என்னுடைய வாழ்த்துக்களையும் ,அனைவருக்கும் தமிழ்மன்ற பண்பலையின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்​
 
எல்லோருக்கும் அன்பு கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்பா....

பகிர்வுக்கு அன்புநன்றிகள் மதி...
 
நேற்று மன்றப்பண்பலையில் ஒலிபரப்பான தீபஞானம் கேட்டு மகிழ்ந்தேன். நேர வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியை முழுவதுமாய்க் கேட்க இயலவில்லை என்றாலும் கேட்டவரைக்கும் சிறப்பு. கார்த்திகை நட்சத்திரங்களைப் பற்றிய உலகளாவியக் கதைகளையும், தீபத்தின் சிறப்பையும் தன் தெளிவான குரலில் அனைவரும் அறிந்துகொள்ள வழங்கிய தாமரை அவர்களுக்கும் நிகழ்ச்சியை இயல்பாகத் தொகுத்து வழங்கிய இன்பக்கவிக்கும் பெரும் சிரத்தையுடன் சென்ற முறை இருந்த சில குறைகளைக் களைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒலியாக்கம் செய்ய பின்னணியில் உழைத்தப் பண்பலை உறுப்பினர்கள் மதி, ஆதி, செல்வா அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
 
நேற்று தீபஞானம் கேட்டு மகிழ்ந்தேன். தீப ஒளி குறித்து பல அரிய செய்திகளைத் தந்த தாமரை அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும். தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள் வழங்கிய அன்பர்களின் பெயர்களையும் தெரிவித்திருந்தால் , இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
 
உண்மை தான் ஐயா.. இனி கவனத்தில் கொள்கிறோம்.
 
ஐயாவின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். வாழ்த்துகளை இணைக்கும் பொழுது அந்த உறவைப் பற்றி ஒரு வரி அவரின் சிறந்த பங்களிப்பைப் பற்றி இருவரி அறிமுகம் சிறப்பாக இருக்கும்.
 
நேற்று தீபஞானம் கேட்டு மகிழ்ந்தேன். தீப ஒளி குறித்து பல அரிய செய்திகளைத் தந்த தாமரை அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும். தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள் வழங்கிய அன்பர்களின் பெயர்களையும் தெரிவித்திருந்தால் , இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நானும் வழிமொழிகிறேன்.
 
Back
Top