குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி

மதி

New member
அன்பு உறவுகளே


வணக்கம். பண்பலைக்கு வழங்கிவரும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் மனங்கனிவான நன்றி.


இன்று குழந்தைகள் தினம்.

உலகமெங்கும் மகிழ்வைத் தழைக்கச் செய்யும் மழலையர்க்கும், குழந்தைகளுக்கும், குழந்தைமனம் மாறா உள்ளங்களுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.


இன்று மாலை இந்திய நேரப்படி 5 மணிக்கு பண்பலையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியாக திரையோசையில் ஒலிக்க இருக்கின்றன சில திரைப்பாடல்கள். தொடர்வது அரும்பும்பொழுது.. குழந்தைமனங்களுக்கான ஒரு இனிய நிகழ்ச்சி.


அனைவரும் கேட்டு ரசிப்பதோடு மன்றப் பண்பலைப் பகுதியில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


வழக்கம்போல் அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.


நிகழ்ச்சி முடிந்ததும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் மறுஒலிபரப்பாகும். விடுபட்டுப்போன கீழைநாடனின் பேட்டியும் ஒலிபரப்பாகும். கேட்டு மகிழுங்கள்!!


இது தமிழ்மன்ற பண்பலை.. இணையத்தின் தமிழ் அலை.


தமிழ்மன்ற பண்பலைக்குழு
 
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..குழந்தைகள் தின நிகழ்ச்சி தொகுப்புகளிநூடே ஒலிபரப்பான குழந்தைகள் தொடர்பான தகவல்கள் பாடல்கள் அருமை...இன்னும் மேம்படுகிறது பண்பலை ..வாழ்த்துக்கள் ..துவங்கி விட்டது மின் வெட்டு ..மீண்டும் இழக்கிறேன் வாய்ப்பினை..
 
இனிய உறவுகளுக்கு வணக்கம். நேற்று குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியை ரசித்த அனைவருக்கும் நன்றி. அரும்பும்பொழுது என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி தொகுப்புச் சிக்கல் காரணமாக குறிப்பிட்டபடி ஒலிபரப்பாகவில்லை. அதற்காக என் வருத்தங்கள். இன்று இந்திய நேரம் மாலை 5.00 மணிக்கு நேற்றைய திரையோசையின் மறுஒலிபரப்பும், தொடர்ந்து அரும்பும்பொழுது நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும் என்று அறிவிப்பதில் மகிழ்கிறேன். அரைமணி நேர இடைவேளைக்குப்பின் அந்த நிகழ்ச்சிகள் மாலை 7.30 மணியளவில் மீண்டும் மறுஒலிபரப்பாகும். அனைவரும் கேட்டு ரசிக்க வாழ்த்துக்கள். நன்றி.
 
Last edited:
நேற்று குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி முழுவதும் கேட்க இயலவில்லை.
கேட்டவரை குழந்தைகள் பற்றிய தகவல்களும் மற்றும் மனங்கவர்ந்த பாடல்களுமாய் அருமையாக இருந்தது.
கீதமக்காவின் தொகுப்பு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருக்கிறது.
 
ஹி ஹி குழந்தைகள் தினத்தன்று சிறுவர் பகுதியில் சில சிறப்புப் பதிவுகளை ஒலிபரப்பி இருக்கலாம்.. ஹி ஹி...
 
Back
Top