தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்

பண்பலை கேட்டு ரசித்த, மகிழ்ந்த, பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றி. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பின்றி நிகழ்ந்திருக்காது இம்மாபெரும் சாதனை. இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் உழைத்த பண்பலைக்குழுவினருக்கும், வழிநடத்திய ஆதிக்கும், அபரிமிதமான உழைப்பை வழங்கி, நம்மையெல்லாம் அசத்திய மதிக்கும் நம் சிறப்பு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்போம். நிறை குறைகளை அறிந்து, தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சிகள் செம்மையுற நடைபெற நம் பங்களிப்பைத் தவறாது வழங்குவோம்.
 
முதலில் மதிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
இந்த நிகழ்ச்சி வெற்றிபெற முழு முதல் மூல காரணம் அவர் தான்.
எல்லா நிகழ்ச்சிகளையும் சீராக்கித் தொகுத்து ஒலியேற்றி முழுவேலையும் தனியொரு மனிதனாக செய்து முடித்தவர்.
வீட்டில் எல்லோரையும் தீபாவளிக்கு ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு
மன்றப் பணிகளுக்காக தனியாக இருந்து எல்லா வேலைகளையும் செய்து முடித்துள்ளார்.
மிக மிக நன்றிகள் மதி.
மதிக்கு பக்கபலமாக பல பேட்டிகளை எடுத்து உழைத்தவர்கள் கீதம் அக்கா. இருவரும் இல்லையென்றால் தீபாவளி நிகழ்ச்சிகள் இல்லை.
இருவருக்கும் எனது நன்றிகள்.

மன்ற உறவுகளில் இத்தனை பேர் பங்கெடுத்துக் கொண்டது எதிர்பாராத ஒன்று. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து விமர்சனத்திற்கு வருவோம்.
நான் இணையத்தை இணைக்கும் போதே ஆரம்பித்து விட்டது. மதி, மச்சி யோசனை அருமை. ஒருவர் சாதாரணமாகப் பேசுவதும் இன்னொருவர் கலாய்ப்பதுமாக மதியின் மொக்கை மற்றும் கலக்கலோடு போனது நல்லாருந்துச்சு.
மதியின் குரலில் ஆரம்பத்தில் இருந்த சோகரசம் (தூக்க கலக்கமா?) இல்ல தனியா மாட்டிக்கிட்டனேங்கிற ஆதங்கமா ? தெரியல கடைசி வரை இருந்திட்டிருந்த மாதிரி இருந்துச்சு. அதையும் மச்சி கலாய்த்தது அருமை.

பக்திப் பாடல்கள் சேத்திருக்கலாமோ?

மங்கல இசையில் நாதஸ்வரத்தை விட்டுட்டோமே...?

உறவுகள் குரல்களைப் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை அப்படினு ஒரு பட்டியல் தயார் செய்யணும்.

கொஞ்சம் பேட்டிகளுக்கு ஒரே மாதிரி கேள்விகளையே தயார் செய்து விட்டோமோ அப்படினு ஒரு நெருடல் என்றாலும் உறவுகள் ஒவ்வொருவரும் விதம் விதமாய் பதில் கொடுத்து அசத்திவிட்டனர்.

என்னைக் கவர்ந்தவை

மச்சியின் கலாய்ப்பு
மனோ அண்ணா அறிஞர் சந்திப்பு
கீதமக்காவின் தேர்ந்த தொகுப்பு
மதியின் உரைநடை
தாமரையண்ணாவின் விளக்கம்
பேட்டிகளின் பின்னணியிசை
ஜெகதீசன் ஐயாவின் பாடல் தெரிவு
கலையண்ணாவின் காதல்
வியாசனின் பஞ்சாமிர்தம்
ஹேமா அக்காவின் டையரிக் கவிதைகள் (அவற்றை வாசிக்கும் ஆவலில் நானும்)
லியோ அண்ணாவின் கையெழுத்துப் பத்திரிகை
ஜார்ஜ் அண்ணாவின் காது முறுக்கப்பட்ட சம்பவம்
மஞ்சுபாஷினியின் குறையொன்றுமில்லை பாடல் கத்துக்க முடியாத குறை (சீக்கிரமா கத்துகிட்டு பண்பலையில் அந்தப் பாடலைப் பாடுகிறீர்கள் எங்களுக்காக)
புதுவைபிரபா பாடிய பாடல் (அருமையான குரல்வளம் சார் உங்களுக்கு -பண்பலைக்கு ஒரு பாடகர் ரெடி - ஆதி , மதி நோட் திஸ்).
மனோ அண்ணாவின் மகனின் பாடல்கள்.
கலையக்காவின் வாழ்த்து
ஒவ்வொருத்தருடைய பேட்டியிலும் தனித்துவம். கலக்கிட்டீங்க மக்களே.

மன்றத்தில் இசையறிஞர்கள் பலர் இருக்கின்றனர் அவர்களை வைத்து மன்றப் பண்பலைக்கென பிரத்யேக இசைத் துணுக்குகள் கேட்கலாம்.

மொத்தத்தில் இது ஒரு அதிரடி ஆரம்பமே.
இதைத் தக்கவைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

மீண்டும் மதி ஆதி கீதம் கூட்டணிக்கு மிக மிக நன்றிகள் பாராட்டுகள்.
 
ஹாஹா.. மச்சியை கண்டுபிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்துவிடலாமா?:cool:

நான் இந்தப் போட்டியில் கலந்துக்கலாமா?

மதி மச்சி கலந்துரையாடல் தவிர மதி மற்றும் மச்சியின் பேட்டிகளை உன்னிப்பாய் கேட்டால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் நு நெனக்கிறேன்.
 
அசத்தலான நிகழ்ச்சியாக இருந்தது. யார் அந்த மச்சி.. மதி மச்சி கலந்துரையாடல் இயல்பாக பல மன்ற நிகழ்வுகளையும், உறுப்பினர் பற்றிய விவரங்களையும் தந்தது. குரல் ஒலியில் ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும் அனைவரின் பேட்டியும் மிக அழகாகப் பொருந்தி, கேள்வி பதிலை நேரடியாக கேட்டுப் பெறுவது போன்றே அமைந்திருந்தது. ஒரு சில நிமிடங்கள் தவிர, அனேகமாக நான் முழுவதுமாக கேட்டேன், இடை இடையே பட்டாசு சத்தங்களினால் தொல்லைகள் இருந்தது. விருந்தினர் இவ்வருடம் அதிகம் எங்கள் வீட்டில் அதனால் இடை விடாது கேட்க முடியவில்லை. ஆதியின் பேச்சையும் கேட்டுவிட்டுதான் லாக் ஆப் செய்தேன். கலக்கிட்டீங்க மக்களே.. பண்பலைக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
 
இத்தனை பேர் கேட்டதால சொல்றேன். மதியும் நானே மச்சியும் நானே
 
நான்தான் சொன்னேனே... மச்சிக்கு ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கப்படும் என்று. என்னையும் சேர்த்து எத்தனை ரசிகர்கள் பாருங்க.. :)
 
செல்வா கூறியது போல் நாதஸ்வரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் குறைவான நேரமே ஒலிபரப்பப்பட வேண்டும் நேற்று ஒலிபரப்பிய மேளக் கச்சேரி நீண்ட நேரம் ஒலித்தது.
மதியும் மச்சியும் என்ற தொகுப்பு புதுமை. எதிர்பார்க்காததால் ரசிக்க முடிந்தது. (அதிலும் மொக்கை மதி என்ற பெயரின் விளக்கம்) மச்சி நன்றாகவே மதியைக் கலாய்த்தது. ஆனால் மதியின் குரலில் தான் சோர்வு தெரிந்தது. அடுத்த முறை உற்சாகமாகவும் கணீரென்றும் மதி பேச வேண்டும். தொகுப்பாளர் மதிக்குப் பாராட்டுக்கள்!
இது போன்ற ஸ்பெஷல் நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப நிறைய விஷயங்கள் இருக்கும் போது, பிடித்த பாடல் ஒலிபரப்புவதைத் தவிர்க்கலாம் என்பது என் எண்ணம். எந்த நிகழ்ச்சியுமே மூன்று மணி நேரத்தைத் தாண்டும் போது உற்சாகத்தைக் குறைகிறது. மேலும் எல்லாராலும் மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்பதென்பது இயலாத காரியம். அதனால் இறுதியாக ஒலிபரப்பப்படும் சில நல்ல நிகழ்ச்சிகளை உறவுகள் கேட்க இயலாமல் போக நேரிடலாம்.
அடுத்த நிகழ்ச்சியில் இது வரை பேசாத உறவுகளின் குரல்கள் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். (உம்:- அன்புரசிகன், அக்னி, பாரதி, இராசகுமாரன் போன்றோர்) இவர்களுக்குப் பேச விருப்பம் இல்லாவிடினும் இவர்களது குரல்களைக் கேட்க எங்களுக்கு ஆர்வமாயிருக்கிறது.

நேற்று பேசியவர்களில் கீதம், ஹேமா, மஞ்சு இவர்களது குரல்கள் கணீரென்று இருந்தன. இன்பக்கவி இயல்பாகப் பேசினார். செல்வாவின் பேட்டியும் மிகவும் இயல்பாக இருந்தது. தாம்ரையின் விளக்கம் நன்றாக இருந்தது. ஆதியும் நன்றாக பேசினார்.
சிலரின் குரல்களில் ஒலி மிகவும் குறைவாக இருந்தது.
இந்தச் சிறு குறைகளை நீக்கிப் பார்த்தால் முதல் ஒலிபரப்பு வெற்றியே! இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!
 
கலையக்கா.. சில தூக்கமில்லா இரவுகள் காரணமா இருக்கலாம். ஆபிஸில் வேலையெல்லாம் பாக்க சொல்றாங்க.. இனி ஒழுங்கா பேசறேன் வழக்கம் போல:icon_b:
 
மன்ற பண்பலைக் குழுவினருக்கு....
மனமார்ந்த வாழ்த்துக்கள்....!
மதிக்கும்....மச்சிக்கும்....
மலையளவு பாராட்டு மாலைக*ள்...!

உழைத்த* அத்த*னை உற*வுக*ளுக்கும்...
உள*மார்ந்த* ந*ன்றிக*ள்....

மேள இசையுடன்...
இனிய துவக்கம்....

தாமரை அண்ணாவிற்கு...
தகுதியான நல்ல பட்டம்...
நடமாடும் கூகுள்...!

பஞ்சாமிர்தத்தில்...
எந்தப் பழச்சுவை ...
மிகுந்த சுவை...!!
அனைத்தும் மிக அருஞ்சுவை.

நான்கு மணி நேர....
நல்விருந்து-
கேட்டு... உண்டு மகிழ்ந்தோம்.

தித்திக்கும் தீபாவளி நிகழ்ச்சிகள்-
எத்திக்கும் ஒலித்தது...அழகு...அழகு.
மன்ற உறவுகள்...ஒன்றாகக் கூடி...
மகிழ்ந்த உணர்வுகள்...அருமை...அருமை...

சிறப்பான வாழ்த்துக்களுடன்,
சி.கோவிந்த்.
 
கலையரசி அவர்கள் பண்பலை ஒலிபரப்பின் தீபாவளி நிகழ்ச்சிகளின் நிறை குறைகளைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்.

கவனித்து ஆவன செய்யவும்.
 
Last edited:
வணக்கம் உறவுகளே,

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை மிக பெரிய வெற்றியை எட்ட துணை நின்ற அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

உறவுகள் பதிவு செய்த குறைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு எதிர் வரும் நிகழ்ச்சிகளில் குறைகளை களைய முயல்வோம்


அன்புடன்

தமிழ்மன்றப் பண்பலை குழு
 
Last edited by a moderator:
தமிழ்மன்ற பண்பலைக்கு என் மனமார்ந்த பாராடுக்கள், தீபாவளி நிகழ்ச்சிகள் கேட்டான், அருமையான தொகுப்பு, சிறந்த செயல் வடிவம் என ஏற்றம் பலக்கண்டேன், குழுவாக செயல்பட்டு பட்டாசாக பணபலையை வெடித்து கிளப்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும்.
 
பழுதான எனது கணணி இன்றுதான் சரியானது. சிறப்பு நிகழ்சிகளில் ஒருசில மட்டும் அலுவலக கணணியில் கேட்க முடிந்தது. மதியின் மனசாட்சிக்கு ஒரு ரசிகர் மன்றமே உருவாகிவிட்டதென நினைக்கிறேன். செல்வாவின் குரலும் வெகு கச்சிதம். அவரை இன்னும் வேலைவாங்கலாம் என்று தோன்றுகிறது.
குழ்ந்தைகள் தின நிகழ்ச்சியும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. கீதம் வழக்கம் போல மிக சிறப்பாக தொகுத்திருந்தார்கள்.
பண்பலை குழுவுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
சில யோசனைகளும் தோன்றுகிறது. ஒருவேளை இதைப் பற்றி நீங்களும் யோசித்திருக்கலாம்.
1. பண்பலைக்கென்று ஒரு பிரத்யேக வாசகம். அதற்கான இசையோடு உருவாக்கப் படவேண்டும். அது நம் லோகோவாக இருக்க வேண்டும்.[உதா: ’தமிழ்மன்றம் பண்பலை; உங்கள் எண்ணங்களின் குரலலை’]
2. நிகழ்சிகளுக்கு ஒரு அடையாளம்.. அதாவது தலைப்பு.. கதை நேரம், சிரிக்கலாம் வாங்க, கவிஞர் உலகம் ….. இப்படி.. .. யோசிக்கலாம்.
3. அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் மட்டுமே நீடித்திருக்க வேண்டும்.
4. குறிப்பிட்ட தலைப்புடன் கூடிய நிகழ்ச்சி வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் அமைந்தால் நல்லது.
5. மன்றத்தில் இருக்கும் படைப்புகளை ஒலிவடிவமாக்கலாம். உதாரணமாக ராஜாவின் ரவுசு பக்கத்தை நகைச்சுவை நிகழ்ச்சியாக தொகுக்கலாம் இடையே காமெடி பாடல்கள். ஜானகி அவர்களின் தியானம் பக்தி மஞ்சரியாக்கலாம், தாமரையின் பதில்கள் ஒரு அரை மணி நேர நிகழ்ச்சியாகலாம். குறிப்பிட்ட தலைப்பிலமைந்த கவிதைகள் ஒரு நிகழ்ச்சி….
6. நிகழ்ச்சி குறித்த கருத்துகளை பகிர தனியாக நிதந்தரமாக ஒரு திரி.. நிகழ்ச்சியின் முடிவில் கருத்துகளை அங்கே எழுதச் சொல்லலாம். அதை தொகுத்து ஒரு ‘எதிரொலி’ நிகழ்ச்சியாக்கலாம்.

ஓய்வு நாளில் ஏதோ கொஞ்சம் யோசனை வந்துவிட்டது.
பயன்பட்டால் எடுத்துக் கொள்க.
குறிப்பு: மேற்கண்ட உதாரணங்கள் வெறும் உதாரணத்துக்குதான். தங்களை பற்றி குறிப்பிட்டு சொல்லவில்லையே என்று தயவுசெய்து ய்யரும் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
அண்ணா.. மிக்க நன்றி.. உங்க எண்ணங்கள் தற்போது ஆலோசனையில் இருப்பதையே பிரதிபலித்துள்ளது. எதிரொலி நல்ல விஷயம். இதுவரை யோசிக்கவில்லை.
 
Back
Top