அன்பு மன்ற உறவுகளுக்கு
இனிதே துவங்கியது நம் மன்ற பண்பலை. நிகழ்ச்சியை அனைவரும் கேட்டிருப்பீர். இதைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை பதியுங்கள். எப்படி நம் பண்பலையையும் ஒலிபரப்பும் தன்மையையும் மெருகேற்றலாம் என்று உங்கள் எண்ணங்களையும் முன் வையுங்கள்..
நன்றி
தமிழ்மன்ற பண்பலைக்குழு
எனது ஒரே ஒரு வருத்தம் என்ன என்றால் சிலர் தமது ஒலிபரப்பு நேரத்தில் மிகச்சரியாக வந்து பின்னர் மற்றவர் ஒலிபரப்பின் சமயத்தில் கழண்டு கொண்டது தான். அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால் இது நேர்கிறது. இது போன்ற சுயநலவாதிகளைக் கண்டு களைவோம். தமிழ்மன்றத்தில் நுழைந்த இத்தகு களைகளைக் களைவோம். ஒன்று முழு உணர்வுடன் கலந்திருங்கள். இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இது தான் அவர்களுக்கு நான் விடும் செய்தி. இதனால் எத்தகு விமர்சனம் வரினும் நான் கவலையுறவில்லை.
தீபாவளிப் பண்டிகைக்குத் தாமரை கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. மதியின் மனசாட்சியாய் வந்த மச்சியின் குரல்வளம் நன்றாக இருந்தது. யார் அந்த மச்சி ? தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி முழுவெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. மதி, ஆதி கீதம், செல்வா மற்றும் வெற்றிக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.இனி பண்பலையில் மன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பதைத் தெரிவியுங்கள்!