தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

மதி

New member
மன்ற உறவுகளுக்கு


எப்போதும் போல் பங்களித்து இது நமது பண்பலை என மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்.
அறிவித்தபடி தீபாவளித்திருநாளில் நமது பண்பலை கோலாகலத் துவக்கம்


துவக்கவிழாவாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இந்திய நேரப்படி மாலை 5 மணி அளவில் துவங்கும்.



நமது மன்ற உறவுகள் மற்றும் நண்பர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியை கேட்கத் தவறாதீர்..



அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!


இங்ஙனம்
தமிழ்மன்ற பண்பலைக் குழுவினர்
 
மன்ற உறவுகளின் ஆர்வமிகு பங்களிப்பினால் இன்றைய தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி மூன்று மணிநேரம் ஆகலாம். ஆகையால் உங்கள் வேலைகளை முடித்துவிட்டு பண்பலையின் அலையில் மூழ்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
பண்பலை கோலாகலத் துவக்கத்திற்காக காத்திருக்கின்றேன்...
 
சரியாக ஐந்து மணிக்கு ஆஜராகி விட்டேன். ஆகா! நிகழ்ச்சி துவங்கிவிட்டது! துவக்க மியூசிக் வெகு ஜோராக இருக்கிறது!
 
துவக்கம் அருமை...

மதியும் மனச்சாட்சியும் அருமை...

தாமரையின் விளக்கம் அருமை...அருமை...!!!
 
மிக அற்புதமான தொடக்கம்...
தாமரையின் தீபாவளி கதைகளும் கருத்தும் அருமை. மனோ அவர்களின் பேட்டி ... பட்டாசை சுட்டுச்சுட்டு போட்டுக்கொண்டிருக்கும் பாட்டு ஆகா ஆகா..
 
தீபாவளி சிறப்பு நிகழ்சிகள் அருமையாகப் போய்க்கொண்டிருக்கின்றன. பங்குபெற்ற அனைவரும் அருமையாக பங்கேற்றுள்ளனர். வாழ்த்துகள்.
 
தீபாவளி சிறப்பு நிகழ்சிகள் அருமையாகப் போய்க்கொண்டிருக்கின்றன. பங்குபெற்ற அனைவரும் அருமையாக பங்கேற்றுள்ளனர். வாழ்த்துகள்.

கலை... உங்கள் குரல் கேட்டேன்...

ஆனால் தெளிவாக இல்லையே...
 
கலை... உங்கள் குரல் கேட்டேன்...

ஆனால் தெளிவாக இல்லையே...

ஹாஹா.. மொந்தையில் கள்ளிருந்தால் ஓடிவரும் பல வண்டாம்.. சிந்தையில் தெளிவிருந்தால் வாக்கினில் ஒளியுண்டாம்..

அது இல்லையோ என்னமோ.. :)

அது ஒன்னுமில்ல ஜெயந்த்.. வயதாயிடுத்தோன்னோ..? அதான் வலிவிழந்து போயிடுச்சு போல..
 
ஹாஹா.. மொந்தையில் கள்ளிருந்தால் ஓடிவரும் பல வண்டாம்.. சிந்தையில் தெளிவிருந்தால் வாக்கினில் ஒளியுண்டாம்..

அது இல்லையோ என்னமோ.. :)

அது ஒன்னுமில்ல ஜெயந்த்.. வயதாயிடுத்தோன்னோ..? அதான் வலிவிழந்து போயிடுச்சு போல..

நம் இருவரின் வயதை ஒருமுறை விவாதித்திருக்கின்றோம் என்று எண்ணம்...
 
மனோ அவர்களின் மைந்தன் புனிதனின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது...

மனமார்ந்த பாராட்டுக்கள்...
 
ஆத்தா நாங்க பரிட்சையில பாசாயிட்டோம் ஜெய்சுட்டோம்னு கத்தனும்போல இருக்கு,

மதி மற்றும் குழுவினருக்கு என் மனதார வாழ்த்துக்கள்.

நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது.

நிருபிச்சுட்டிங்க எனது தம்பிகளே தங்கைகளே

மீண்டும் வாழ்த்துக்கள்

மனோ.ஜி
 
அனைவருடைய பங்களிப்பும் மிக அருமை.

அனைத்து பாடல்களும் மிக அருமை.

பங்கேற்றவர்களின் குரலை கேட்டதில் மிக மகிழ்ச்சி

பங்கேற்ற அனைவருக்கும், நடத்திக்கொண்டிருக்கும் மதி, மதியின் மனசாட்சி, கீதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 
Back
Top