சவுண்ட் வரவில்லை.

M.Jagadeesan

New member
நான் Jetway Motherboard ( Desktop ) பயன்படுத்துகிறேன். விண்டோஸ் 7 ultimate OS நிறுவியுள்ளேன். மானிட்டரில் டாஸ்க் பாரில் Speaker icon திறந்த நிலையில் வருகிறது; ஆனால் சவுண்ட் வரவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் ( சவுண்டு கார்டு போட்டும் ) சவுண்ட் வரவில்லை. மதர்போர்டில் ஜம்பர் செட்டிங் ஏதாவது செய்யவேண்டுமா? அப்படிஎன்றால் எங்கு செய்யவேண்டும் போன்ற விவரங்களைத் தெரியப்படுத்தவும். வல்லுனர்கள் உதவவும்.
 
திடீரென்று சத்தம் வருவது நின்றதா? அல்லது ஏதாவது மாற்றம் செய்யும் போது பிரச்சனை வந்ததா?

sound icon இல் right click > open volume mixer

மற்றும்

right click > volume control options என்பவற்றின் screen shot ஐ இங்கு பகிரமுடியுமா???

காரணம் ஒன்றிற்கு மேற்பட்டவை இருந்தால் எது தெரியப்பட்டுள்ளது என்பதை பொறுத்து தான் சத்தம் வரும்.

உதாரணமாக volume control option இல் 2 இருந்து அதில் A என்பது தெரிந்துள்ளது என்று வையுங்கள். voilume mixer இல் மற்றயது காட்டிக்கொண்டிருந்தால் சத்தம் வராது...

mother board இல் ஒன்றும் மேலதிகமாக ஒன்றுமாக sound card இருந்தால் இந்த பிரச்சனை வரும்...

அல்லது அண்மையில் ஏதாவது மென்பொருள் போட்டீர்களா???
 
OS நிறுவியதிலிருந்தே சவுண்ட் வரவில்லை. அண்மையில் மென்பொருள் ஏதும் போடவில்லை. மதர்போர்டில் சவுண்ட் கார்டும் தற்போது இல்லை. பொதுவாக ஸ்பீக்கர் ஐகான் ஓபனாக இருந்தால் சவுண்ட் வந்துவிடும். ஆனால் இந்த மதர்போர்டில் வரவில்லை. Volume control screen shot எப்படி கொண்டுவருவது என்று தெரியவில்லை.
 
அன்புள்ள ஐயா,
நீங்கள் கூறியதில் இருந்து முறையான “டிரைவர்” கோப்புகள் நிறுவப்படவில்லை என்று எண்ணுகிறேன்.
எனினும் நீங்கள் தந்த விபரங்களில் இருந்து சரியான விளக்கத்தை தர இயலவில்லை. (மதர் போர்ட்டின் எண், சவுண்ட் கார்ட் விபரங்கள் போன்றவை இல்லை..!)
http://www.jetway.com.tw/jw/motherboard.asp
இந்தத் தளத்திற்கு சென்று உங்கள் மதர்போர்டின் சரியான எண்ணை தேர்வு செய்து, அதற்குரிய டிரைவர் கோப்பினை பதிவிறக்கம் செய்து நிறுவிப்பாருங்கள். ஒரு வேளை விண்டோஸ்7க்கு என கோப்புகள் கிடைக்காவிட்டால் விஸ்டாவிற்கான கோப்பினை நிறுவுங்கள். பின்னர் கணினியை மீள இயக்கிப்பாருங்கள்.
 
ஐயா தாங்கள் பயன்படுத்தும் மதர்போர்ட் எண் வகை அதில் எந்த வகையான ப்ரோசசர் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் தெரிவு படுத்துங்கள்...காரணம் வின் 7 ஒ எஸ் பழைய பெண்டியம் 4 போன்ற ப்ரோசசர்களில் பொருந்துவதில்லை இதற்கான டேவைஸ் டிரைவர் கிடைப்பது கடினம்..இந்த விடயங்களை தெரிவு படுத்தினால் இன்னும் எளிதாக இருக்கும் ..மற்றபடி பாரதி அவர்கள் கூறியபடி செய்யுங்கள் ..ஸ்க்ரீன் சாட் எடுக்க volume கன்ட்ரோலை ஓபன் செய்து printscreen எனும் பட்டனை பிரஸ் செய்து mspaint ல் ஓபன் செய்து பேஸ்ட் செய்து save செய்து பதிவிடவும்....
 
என்னுடைய மதர்போர்டின் எண் 131 GM4-L-LF ஆகும். பெண்டியம் D பிராசசர் 3.40 GHZ பயன்படுத்துகிறேன். Dual Core பிராசசர்களும் support செய்கின்றன. பாரதி கூறியதுபோல் எண் மதர்போர்டுக்குரிய Audio Driver களை இணையத்திலிருந்து முன்னமேயே தரவிறக்கம் செய்தும் பார்த்துவிட்டேன். அப்போதும் சவுண்ட் வரவில்லை. Dual Core Processor போட்டால் சவுண்ட் வருமா என்பதைத் தெரியப்படுத்தவும்.
 
தங்கள் மதர்போர்ட் i31 அல்லது 131 என்பதை கவனியுங்கள் ..மற்றொன்று தோழர்கள் கூறியபடி ஸ்க்ரீன் சாட்டினை பதிந்தால் உங்களுக்கு பதில் கூற முடியும்..இந்த மதர்போர்டிற்கு p4 d ப்ரோசசர் ஒத்துழைக்கும் ப்ரோசசர் மாற்றுவதினால் பயனில்லை...
 
அன்புள்ள ஐயா,
உங்கள் கணினியில் கண்ட்ரோல் பேனல் - டிவைஸ் டிரைவரில் சோதித்துப்பாருங்கள். உங்கள் சவுண்ட்-வீடியோ-ஆடியோ டிரைவருக்கு எதிரில் ஆச்சரியக்குறி இருக்கிறதா என்று பாருங்கள். ஆச்சரியக்குறி இருந்தாலும் இல்லையென்றாலும் அதை முறையாக uninstall செய்யுங்கள்.
கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து 138MB அளவுள்ள கோப்பினை பதிவிறக்குங்கள்.
http://www.jetway.com.tw/jw/motherboard_view.asp?productid=635&proname=I31GM4-L

பதிவிறக்கியதை நிறுவுங்கள்.
உங்களுக்கு மேலும் ஏதேனும் ஐயம் இருப்பின் மேலே உள்ள சுட்டியிலேயே இடதுபுறத்தில் Manual என்பதை சுட்டி அந்த ஜிப் கோப்பினை பதிவிறக்குங்கள். அது உங்கள் மதர்போர்டிற்கான pdf கையேடு. அதைப் படித்துப்பாருங்கள். உங்கள் பிரச்சினை விரைவில் தீரட்டும்.
 
அன்புள்ள ஐயா,
உங்கள் கணினியில் கண்ட்ரோல் பேனல் - டிவைஸ் டிரைவரில் சோதித்துப்பாருங்கள். உங்கள் சவுண்ட்-வீடியோ-ஆடியோ டிரைவருக்கு எதிரில் ஆச்சரியக்குறி இருக்கிறதா என்று பாருங்கள். ஆச்சரியக்குறி இருந்தாலும் இல்லையென்றாலும் அதை முறையாக uninstall செய்யுங்கள்.
கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து 138MB அளவுள்ள கோப்பினை பதிவிறக்குங்கள்.
http://www.jetway.com.tw/jw/motherboard_view.asp?productid=635&proname=I31GM4-L

பதிவிறக்கியதை நிறுவுங்கள்.
உங்களுக்கு மேலும் ஏதேனும் ஐயம் இருப்பின் மேலே உள்ள சுட்டியிலேயே இடதுபுறத்தில் Manual என்பதை சுட்டி அந்த ஜிப் கோப்பினை பதிவிறக்குங்கள். அது உங்கள் மதர்போர்டிற்கான pdf கையேடு. அதைப் படித்துப்பாருங்கள். உங்கள் பிரச்சினை விரைவில் தீரட்டும்.

பாரதி அவர்களுக்கு,
தாங்கள் கூறியபடி Device Manager சென்று sound volume cotrollers ல் இருந்த Device Driver-ஐ disable செய்தேன். பிறகு C /Net Download .com லிருந்து Realtek High Definition Audio மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவினேன். இப்பொழுது சவுண்டு வந்துவிட்டது. கடந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டத்திற்கு இன்றுதான் விடிவு கிடைத்தது. ஆலோசனைகள் நல்கிய நண்பர்கள் அன்புரசிகன், ஜெய் ஆகியோருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Back
Top