ஒரு மொட்டை பாலையில்
ஆளரவம்மற்ற தனிமையில்
எவ்வேக்கங்களும்
எத்தேவைகளும் இல்லாமல்
நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்
பாதங்களடியில் நீளும் நிலத்தின் நெடுமையில்
நிரம்புமும் அசையும் இமைகளின் லயமன்றி
தகிப்போ தவிப்போ தத்தளிப்போ இல்லாது
மௌனித்திருக்கும் மனம்
ஆழ் சூன்யத்தில் ஒருபடுகின்றது
அரூப விரல்களால் மீட்டப்படுகிற
நிசப்த சுரத்தில்...
ஏதோ என்னால முடிஞ்சது, பிழைகள் இருக்கலாம் பொருத்தருள்க*
குறிப்பாக இவ்வரிகள் .....நன்றி ஆதி !நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பிள்ளை !!இல்லை இல்லை ஜான்
இக்கவிதையில் நான் பாராட்டுக்குரியவனில்லை!
இதை எழுதிய அந்த ஆங்கில கவிஞர்தான்
என்னை மிகவும் தாக்கம் கொள்ள வைத்தவரிகள்
Covering the vastness
Of the firmament
இக்கவிதையை பதிந்த ரிமாவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
ரிமா அவர்களே
ஒரு பொறிக்கவிதை
எத்தனை இதழ்களை விரித்தது
இந்த தமிழ்தளத்தில்!
கலையழகு பொழிந்த
கலைவேந்தன் வரிகள்!
மனவோட்டத்தை மயக்கிய
ஜானின் ஜாலங்கள்!
ஆதியின் ஆழமான
ஜென்வரிகள்!
ஆன்ம வெளிப்பாடுடைய
ஜானகியம்மாவின் வரிகள்!
எத்தனை முகங்களோடு
எழுந்தது அந்த கவிதை!
எழுதுங்கள் தொடர்ந்து!
மௌனம் எல்லோரையும் பேசவைக்கிறது.........விந்தையாக இல்லை ?