தே மு தி க வின் நிலை ? ..

arun

New member
பிரதான எதிர் கட்சியாக இருந்த தே மு தி க அதை இழந்து விடும் அபாயத்தில் இருக்கிறது ..

ஆம் இது வரை நான்கு பேர் அணி மாற தயாராகி விட்டனர்

என்ன செய்ய போகிறார் கேப்டன் ? ..

எனக்கு என்னவோ கேப்டன் பக்குவமில்லாத மனிதராக தெரிகிறார் அவரது சீறலை டிவியில் பார்த்தபோது அது தான் தோன்றியது

பொறுத்திருந்து பார்ப்போம்
 
தன் கட்சியினரையே அரவணைத்து செல்ல தவறிய தலைவரின் சீறல் கூறுகிறது நானும் இன்னும் படிக்க வேண்டும் இந்த அரசியலில்
 
மின்வெட்டுப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, அம்மையார் நடத்தும் நாடகம் இது. தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன.அதையெல்லாம் விட்டுவிட்டு எதிர்கட்சி M.L.A.க்களை ஆசைகாட்டி இழுப்பதும், அவர்களுடன் நின்று போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதும் மலிவான அரசியலாகும்.
 
மலிவான அரசியல் என்பது வாடிக்கை தானே ! ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை

இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகிறதோ !
 
Back
Top