தீபாவளி வாழ்த்துக்கள்

தமிழ் மன்ற உறவுகள் எல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
 
தீப திருநாள் வாழ்வில் புதிய விடியலாகவும், உங்கள் வீடுகளின் மின் தட்டுபாட்டை நீக்குவதாகவும் அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.
 
தாங்கள் முயற்சி செய்த முதல் கவியரங்கம் என்னாயிற்று?

அதானே ! நல்ல யோசனை..ஜகதீசன் ஐயா சொல்வதுப் போல் முயற்சிக்கலாமே ?
 
தீப ஒளி திருநாளில்,
துன்பங்கள் தொலைய ,
மகிழ்ச்சி பெருக,
ஒளிமயமாக வாழ்வு மலர,
மன்ற அன்பர்கள்,
அவரது உற்றார் உறவினர்
நண்பருடன் , பகையின்றி நீடு வாழ
உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்...
 
வணக்கம் உறவுகளே, வியாழக்கிழமைக்குள்(08/11/12) உங்கள் வாழ்த்தை அனுப்பி வைத்துவிடுங்கள் தோழர்களே, அப்போதுதான் நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய முடியும், அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறோம்

இது நமது பண்பலை, நாமே முன்னடித்திச் செல்வோம்
 
வானம்போல் விரிந்து பரந்திருக்கும் தமிழ் மன்ற வெளியில் மின்னிக் கொண்டிருக்கும் மன்றச் சுடர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்....இந்த நன்னாளிலே உலக மானிடர் அனைவருக்கும் அக இருளும் புற இருளும் அகன்று அருளெனும் ஒளி அன்பெனும் விளக்கினால் எங்கும் படர்ந்து சுடரிட ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்....அனைவருக்கும் இவ்வாய்ப்பினை வழங்கிய தமிழ் மன்ற நிர்வாகிகளுக்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .....வாழ்த்துவது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ரேமா
 
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பு எப்பொழுது...???
 
தீபாவளியன்று மாலை ஐந்துமணியளவில் துவங்கும். விரைவில் அறிவிப்பு வரும் ஜெயந்த் அண்ணா
 
தீபாவளியன்று மாலை ஐந்துமணியளவில் துவங்கும். விரைவில் அறிவிப்பு வரும் ஜெயந்த் அண்ணா


தகவலுக்கு நன்றி மதி...
 
தீபாவளியன்று மாலை ஐந்துமணியளவில் துவங்கும். விரைவில் அறிவிப்பு வரும் ஜெயந்த் அண்ணா

நாளை ஐந்து மணியளவில் மலேசியாவிற்க்கு ஏழரை மணியளவில் , ஓகே , ஓகே, நான் ரெடி பண்பலை அதிகாரபூர்வ ஒலிபரப்பை கேட்பதற்கு, அதோடு தம்பி நிகழ்வின் நிரல் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே. மனோ.ஜி
 
தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்து
உழைப்பே மத்தாப்பு....! உண்மையே பட்டாசு...!
அறவழி வாழ்வும்......அரவணைப்பும்....
அழகாய் சுழலும்.....தரச் சக்கரம்...!
கோபம் குறைப்பது புஸ் வானம்..!
குழந்தை போல் சிரிப்பது சீனி சரம்..!
அன்பாய் பேசினால் அது அல்வா...!
பாசமாய் நேசித்தால் பால்கோவா...!
ரசித்து வாழ்ந்தால் அது ரசகுல்லா...!
இனிக்க நடந்தால் இனிய பாதுசா..!
பூந்தி கேசரி நெய் முறுக்கு - அது
பக்தி சாந்தி மெய் உணர்வு...!- நாம்
கடமையை ஒழுங்காய் செய்வோம் - நம்
கவலைகள் புஸ்ஸாய்ப் போகும்- நாம்
கடவுளை வணங்கி வாழ்வோம் - வரும்
காலங்கள் சக்சஸ் ஆகும்... ! நம்
இதயம் என்பது திரு விளக்கு - நல்ல
நினைவுகள் அதிலே ஒளி தீபம்...! எனவே
நீங்கள் நினைத்தால் தினமும் தீபாவளி...!
நினைவில் ஏற்றுங்கள் நம்பிக்கை தீப ஒளி..!
அனைவருக்கும் எனது
இதயம் நிறைந்த இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..!

நன்றி /
நிலவு
 
Back
Top