தீபாவளி வாழ்த்துக்கள்

மதி

New member
அன்பு மன்ற உறவுகளுக்கு,

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு தன் வாழ்த்தை குரல் மூலமாவும் திரியில் பதிவு செய்தும் நிகழ்ச்சி வெற்றியாக்கி 'இது நம்ம பண்பலைங்க' என்று நிரூபிச்சிட்டீங்க..

இதையே வெற்றியின் முதல்படியாக நினைத்து நம்ம பண்பலையில் உங்களுடைய குரலும் தீபாவளி வாழ்த்துக்களாய் ஒலிக்க வேண்டும். அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை ஒலிக்கோப்பாய் பதிவு செய்து tmantramfm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

குரலைப் பதிவு செய்வதில் சந்தேகம் இருப்பின் இந்தத் திரி உங்களுக்கு உதவும்.

உங்களின் மேலான வாழ்த்துக்களை எதிர்பார்த்து

தமிழ்மன்ற பண்பலைக் குழுவினர்
 
உறவுகளே, ராக்கெட் வேகத்தில் வந்து சர வெடி மாதிரி உங்கள் தீபாவளி வாழ்த்தை சங்கு சக்கிரமா சுழலவிடுங்கள் அவை பூத்தொட்டி போல தீபாவளி அன்று பண்பலையில் பூதூவும்
 
மேலெழுப்புகிறேன்.. வாழ்த்துக்களை அனுப்பிய உறவுகள் இங்கே தெரிவியுங்கள்.. :icon_b:

இந்த வார இறுதிக்குள் அனுப்பி விட்டால் பிண்ணனி வேலைகள் சுலபம்.

அனுப்பிடுவீங்கல்ல...! :cool:

ம்ம்.. அதான்.. கண்டிப்பா அனுப்பணும்..சொல்லிட்டேன்..:icon_rollout:
 
நான் கேள்விகளை எதிர் பார்த்துகிட்டு இருக்கேன்
 
மனோண்ணே கேள்விகள் பரிசீலனையில் இருக்கு. அனுப்பிக்கிட்டே இருக்கேன். :icon_b:
 
அன்பு மன்ற உறவுகளுக்கு,

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு தன் வாழ்த்தை குரல் மூலமாவும் திரியில் பதிவு செய்தும் நிகழ்ச்சி வெற்றியாக்கி 'இது நம்ம பண்பலைங்க' என்று நிரூபிச்சிட்டீங்க..

இதையே வெற்றியின் முதல்படியாக நினைத்து நம்ம பண்பலையில் உங்களுடைய குரலும் தீபாவளி வாழ்த்துக்களாய் ஒலிக்க வேண்டும். அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை ஒலிக்கோப்பாய் பதிவு செய்து tmantramfm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

குரலைப் பதிவு செய்வதில் சந்தேகம் இருப்பின் இந்தத் திரி உங்களுக்கு உதவும்.

உங்களின் மேலான வாழ்த்துக்களை எதிர்பார்த்து

தமிழ்மன்ற பண்பலைக் குழுவினர்

மதி,
ஒலிக்கோப்பாய் பதிவு செய்து அனுப்ப இயலவில்லையென்றால் வெறும் வாழ்த்துக்களை மாத்திரம் பதிவு செய்யலாமா...
 
மதி,
ஒலிக்கோப்பாய் பதிவு செய்து அனுப்ப இயலவில்லையென்றால் வெறும் வாழ்த்துக்களை மாத்திரம் பதிவு செய்யலாமா...

செய்யலாம் அண்ணா
 
என் அன்பினும் அன்பிற்குரிய தமிழ் மன்ற உறவுகளுக்கு என் சார்பிலும் என் குடும்பத்தார் சார்பிலும் மனமார்ந்த இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இத் தீபஒளித் திருநாளில் எல்லாம் வல்ல இறைவன் உறவுகளுக்கு நல்ஆரோக்கியத்தையும், நிறைந்த செல்வத்தையும் மற்றும் குறைவில்லா வளத்தையும் வழங்க வேண்டுகின்றேன். இத்தருணத்தில் தீப ஒளித் திருநாளுக்கு உகந்த பி. சுசீலா அவர்கள் பாடிய "உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட" என்ற "கல்யாணப் பரிசு" படப் பாடலை மன்ற உறவுகளுடன் கேட்க விரும்புகின்றேன்.
 
Last edited:
வணக்கம் மக்கா,

தீபாவளிக்கு வாழ்த்தை ஒலியாக்கம் செய்து அனுப்பவோரும், இங்கே வாழ்த்தை பதிவு செய்கிறவோரும், நவம்பர் 9 தேதிக்கு முன் செய்துவிட்டால் மற்ற வேலைகளை செய்ய வசதியாக இருக்கும்..

அது போல் தீபாவளி வாழ்த்தோடு பண்பலை துவங்குவது பற்றி சில வார்த்தைகளை சொல்லுங்கள் மக்கா, உங்க எதிர்ப்பார்ப்பு, விருப்பம் இப்படி எதையும் சொல்லுங்க, பண்பலைக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறவர்களும் உங்கள் வாழ்த்தை சொல்லுங்கள் மக்கா

வேறு எந்த சந்தேகம் இருந்தாலும் மதியை அணுகவும் :)
 
ஒரு கவிதை அரங்கம் வைத்து சிலரின் கவிதைகளை வாசிக்கச்சொல்லி அரைமணி அல்லது ஒருமணி நேர ப்ரோகிராமை வைக்கலாமே.. சரின்னு சொன்னா என் கவிதை ரெண்டு மூணு நாளில் எழுதி வாசித்து ஒலிப்பதிவு செய்து அனுப்புகிறேன். ஆதி கவனிங்கப்பா..
 
ஐயா
எல்லாவற்றையும் ஆலோசித்தோம். முதல் முயற்சி என்பதாலும் பண்பலையில் நமக்கு அனுபவம் இல்லாமையாலும் கவியரங்கத்தை பின்னொரு நாளில் செய்யலாமென்று முடிவு செய்தோம். பொங்கலுக்கு செய்துடலாம் கலைவேந்தரே.
 
மன்ற உறவுகளுக்கு எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இந்த தருணத்தில் ரமணா படத்தில் வரும் வானும் அதிரவே வானம் வெடிக்கலாம் ரோசி ரோசி என்ற பாடலை ஒலிபரப்ப வேண்டுகிறேன்
 
வானலை வருவோம் -
மத்தாப்பாய் தமிழ் மன்றம் வாழ்த்து வெடித்து
வானலையில் மகிழும்......

எங்கள் தமிழுறவு
எங்கும் என்றும் எதிலும்
ஓர் அணியாய்
வேர் பிடிக்கும் ....

ஓங்கி வளரும் எம் சமுதாயம்
நம் தமிழர்
நாம் தமிழர் என்றுரைத்து
தலை நிமிர்வார்..........

தீபத்திருநாள் சிறப்பு வாழ்த்துக்கள் மன்றம் வரும் உறவுகளுக்கு உரித்தாகட்டும்.......எல்லோரும் வாழ்க!
 
மருள் எனும் இருள் நீங்கி

அருள் எனும் வரம் தங்கி - மெய்ப்

பொருள் எனும் ஒளி காண

தீப ஆவளி ஏற்றி வைப்போம், வாரீர் !

உற்சாகம், உல்லாசம் மத்தாய்ப்பாய்ப் பூரிக்க,

வேற்றுமை, பொல்லாங்கு சரவெடியாய்ச் சிதறி ஓட,

வாழ்க்கைச் சக்கரம் நிறைவாய் மலர்ந்து சுழல,

கைகோர்த்து ஒன்றாய்க் கொண்டாடுவோம், வாரீர் !

[ மன்ற உறவுகளுக்கான என்னுடைய தீபாவளி வாழ்த்துக்களை, ஆதி அவர்கள் தன் குரலில் ஒலிபரப்புவதாக முன்னமேயே கூறியுள்ளார்...நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் ]
 
Last edited:
ஒரு கவிதை அரங்கம் வைத்து சிலரின் கவிதைகளை வாசிக்கச்சொல்லி அரைமணி அல்லது ஒருமணி நேர ப்ரோகிராமை வைக்கலாமே.. சரின்னு சொன்னா என் கவிதை ரெண்டு மூணு நாளில் எழுதி வாசித்து ஒலிப்பதிவு செய்து அனுப்புகிறேன். ஆதி கவனிங்கப்பா..

தாங்கள் முயற்சி செய்த முதல் கவியரங்கம் என்னாயிற்று?
 
மன்ற நட்புகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஒலி வழி பதிந்தும் அனுப்பிவிட்டேன். இங்கேயும் பதிகின்றேன்..
 
Back
Top