ஆதவா
New member
பீட்சா...
படத்தின் ட்ரைலரே கலக்கலாக இருந்தது. பார்க்கவேண்டும் என்று தோணியது.. (பர்ஃபி மாதிரி... ) ஆனால் நான் எதிர்பார்த்ததைவிடவும் அதிகம் கிடைத்தால் எப்படியிருக்கும்??? போஸ்டர் டிசைன் (வெக்டரைஸ்ட்) கூட மிகவும் கவர்ந்திழுத்தது..
இப்படியொரு த்ரில்லிங்கான படம் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது. வீட்டில் ஒருமுறை நள்ளிரவில் paranormal activity பார்த்துவிட்டு ஒருமாதிரி பதைபதைப்போடே படுத்துறங்கிய ஞாபகம்.. மீண்டும். ஆனால் இம்முறை தமிழில்..
கதை :பீட்சா டெலிவரி பாய் மைக்கேல் (விஜய் சேதுபதி)யும் அனுவும் (ரம்யா நம்பீசன்) ஒன்றாக இணைந்து வாழ்கிறார்கள். பீட்சா டெலிவரி செய்யும்போது ஒருநாள் மைக்கேலுக்கு நடக்கும் விஷயங்கள் (அமானுஷ்யம்?) அவரது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது... எப்படி என்ன என்பதை திரையில் காணுங்கள். படம் பார்த்தவர்கள் ( கதையை சொல்லவெண்டாம்.. சுவாரசியம் போய்விடும் )
திரைக்கதை : நான் லீனியர்.. மிக அற்புதமாக, எந்தவொரு தழுவலுமின்றி இருக்கிறது. பொதுவாக திகில் படங்களில் அதிகம் கதை இருக்காது. திரைக்கதையே பிரதானம். திரைக்கதை இல்லாவிடில் அந்த படம் திகிலாக இருக்காது.. இதில்.... மாறுபட்ட புதிய அனுபவமாக இருக்கிறது.. அதிலும் கடைசியில்,,,, (வேண்டாம் சொல்லக் கூடாது)
இசை : திகில் படத்தில் நம்மை சீட்டின் நுனியில் அமரவைப்பது திரைக்கதை என்றால் நம்மை பயத்தின் உச்சியில் அமரவைப்பது இசைதான்.. 7.1 ல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படும் இப்படத்தை நல்ல இசையோடு ரசித்தேன்.. (பயந்தேன்) அதிலும் சில ஓசைகள்.. ஆரம்பத்தில் மணிகள் ஒலிக்கும் இசை, க்ளிங் எனும் இசை, டெலிபோன் ரிங்கிங்.... ஒவ்வொன்றும்.....
ஒளிப்பதிவு : இப்போது வரும் படங்களில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய படங்கள் அருமையாக வெளிவ்ருகின்றன. அதிலும் குறிப்பாக ஒளிப்பதிவு... இப்படத்திலும் அஃதே.. ஒரு டார்ச் லைட்டை வைத்துக் கொண்டு பங்களாவில் சுத்துவார்கள் பாருங்கள்...... நிறைய பெரியநடிகர்கள் படங்களின் அபத்தமான ஒளிப்பதிவு கண்ணுக்கு வந்து போனது... தவிர அந்த பங்களாவில் மைக்கேலின் நிழல்கூட நம்மை பயமுறுத்திக் கொண்டேயிருக்கும்.... அபாரம்...........
எடிட்டிங் : திரைக்கதையை மிகவும் சுவாரஸ்யமாக அமைக்கிறது எடிட்டிங். பொம்மை, பெண், மீண்டும் பொம்மை..... மைக்கேல் பயப்படுவதை அங்கங்கே வெட்டி ஒட்டி மேலும் பயமுறுத்துவது... அப்லாஸ்......
நடிப்பு : தனி ஆளாக நின்று சாதித்திருக்கிறார் சேதுபதி. இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மிக இயல்பான, அபாரமான நடிப்பு... இவர் இல்லாமல் போயிருந்தால் நமக்கு டென்ஷன் ஆகியிருக்கும்... அதேபோல, பீட்சா கடையில் வேலை செய்யும் இருவர், ஆடுகளத்தில் போலிஸாக வந்த நரேன், மிகமுக்கியமாய் ரம்யா நம்பீசன்... (கொஞ்சம் வெயிட் போட்டுட்டா) அத்தனையும் அமைந்திருக்கின்றன படத்திற்கு..
இயக்கம் : நாளைய இயக்குனர் முதல்பகுதியில் இரண்டாவதாக வெற்றிபெற்ற கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில்... சான்ஸே இல்லை, இது இவரது முதல் படம் என்று யாரும் சொல்லவே முடியாது. அவ்ளோ நீட்.. அவ்ளோ கிரிஸ்ப்... பீட்சா படம் முழுக்க வயிற்றை பதம் பார்க்கிறது.. ஒரு கலக்கு கலக்குகிறது. இவ்ளோ பெர்ஃபெக்டான படம் தமிழில் வந்ததே கிடையாது.. ஒரு குத்துப்பாட்டு, கவர்ச்சி நடனம், கவர்ச்சிக் காட்சி, என எதுவும் இல்லாமல்,,, கதைக்கு என்ன தேவையோ அது மட்டுமே இருக்கிறது.. 13B ஐ விடவும் இப்படத்தில் நிறைவான இயக்கம் நிறைவான அம்சங்கள் நிறைய உண்டு... புதுவரவான கார்த்திக் சுப்பாராஜ்.... உங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
இறுதியாக..
இந்த படம் கட்டாயம் பார்க்கவேண்டிய படம். இந்த த்ரில்லை நீங்கள் அனுபவித்தேயாகவேண்டும்...
இந்த பையன் தான் இயக்குனர்.... பொறாமையாக இருக்கிறது.

Last edited: