உறவுகள் பலராலும், பக்ரித் சிறப்பு நிகழ்ச்சி கேட்க இயலாத படியல், பக்ரித் நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு, திங்கள் கிழமை இரவு இந்திய நேரப்படி 8:30 மணிக்கு ஒலிபரப்பாகும், உறவுகள் கேட்டு மகிழவும், தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளவும்
மன்றப்பண்பலை மூலம் தமிழ்மன்றத்தில் முகம் காண வியலாத பல நண்பர்களின் குரலில் தியாகத்திருநாள் வாழ்த்துகளைக் கேட்டு மகிழ்ந்தேன். அனைவருடைய குரலும் மிகவும் அருமையாக இருந்தது. ஒரே ஒருவர் தான் மிக நன்றாகச் சொதப்பி இருந்தார். மற்றபடி மிக அருமையான நிகழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து மன்றப்பண்பலை மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
குரல் தெளிவாகக் கேட்க எவ்வாறு ஒலிப்பதிவு செய்யவேண்டும்? பெரும்பாலான மன்ற உறுப்பினர்களின் ( நான் உள்பட ) குரல் தெளிவாகக் கேட்கவில்லை. கீதத்தின் குரல் பிசிறு இல்லாமல் தெளிவாகக் கேட்டது. இவ்வாறு கேட்க என்ன செய்யவேண்டும்? எப்படிப்பட்ட ஒலிவாங்கி பயன்படுத்தவேண்டும்? A / C அறையில் பதிவு செய்யவேண்டுமா? போன்ற விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
எல்லோரும் முதன்முறையாக குரலைப்பதிவு செய்வதால் முடிந்தவரை தெளிவாக தர எத்தனித்தோம். சத்தம் இல்லாத அறையில் நல்ல ஒலிவாங்கியைப் பயன்படுத்தினால் எடிட்டிங் வேலைகள் எளிது. நாங்களும் இதற்கு புதிது. கற்றுக்கொண்டிருக்கிறோம். மேல்விவரங்கள் தெரியவரும் போது பகிர்ந்து கொள்கிறோம்.
முடிந்தவரை அமைதியான சூழலில் மைக்கிற்கு அருகில் பேசி அனுப்புதல் நலம். பேசி பதிவு செய்ததும் போட்டுக்கேட்டு திருப்தியாயிருப்பின் அனுப்புங்கள். இல்லையே மறுமுறை பதிவு செய்து அனுப்புங்கள். இது எங்களின் வேலையை சிறிது குறைக்கும்.
நான் Digital voice recorder என்னும் ஒரு சிறு கருவியில் பதிந்து அதை audacity மூலம் எடிட்டிங் செய்து அனுப்புகிறேன். அது இந்தியாவிலும் கிடைப்பதாக கலையரசி அக்கா சொன்னார்கள். விலை தெரியவில்லை.
நாங்கள் இருப்பது ஒரு பிரதான சாலையை ஒட்டிய வீடு என்பதால் எப்போதும் வாகனப்போக்குவரத்து சத்தம் இருக்கும். கதவு, சன்னல்களை மூடிவிட்டு வெளிப்புற சத்தத்தைக் கட்டுப்படுத்தி பதிகிறேன். சாதாரண அறைதான். ஏசி இல்லை.