கீதம்
New member
அன்பு உறவுகளே…
பண்பலையில் திரைப்படப் பாடல்கள் இடம்பெறும் திரையோசை என்னும் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. எப்படிப் பங்களிக்கலாம் என்பதற்கு சில மாதிரிகள்….
1.உங்களுக்குப் பிடித்தப் பாடல்களின் பட்டியலை இந்தத்திரியில் கொடுங்கள். நீங்கள் கேட்டவையாக உங்கள் பெயருடன் ஒலிபரப்பாகும்.
2.உங்களுக்குப் பிடித்தப் பாடல்களுக்கான முன்னுரையை நீங்களே பேசி (பாடலுடனோ, இல்லாமலோ) பதிவு செய்து பண்பலை மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இன்றைய நேயர் என்ற தலைப்பில் திரையோசையில் அது பாடலுடன் ஒலிபரப்பப்படும். (ஒரு நிகழ்ச்சிக்கு தோராயமாக 12 முதல் 15 பாடல் வரை தொகுக்கலாம்)
3.சில பாடல்களைக் கேட்டால் சிலரோ, சில சம்பவங்களோ உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
4. உங்களுக்குப் பிடித்தமானவருக்கு சமர்ப்பிக்க விரும்பும் பாடல்களைக் குறிப்பிடலாம்.
5.ஏதேனும் ஒரு தலைப்பில் பாடல்களைத் தொகுத்துத் தரலாம். (இயற்கை, காதல், அம்மா, திருமணம், பிரிவு இப்படி…. )
6. அரிதாகக் கேட்கப்படும் அந்நாளையப் பாடல்கள் உங்களிடம் இருந்தால் அவற்றைப் பண்பலையில் அனைவரும் கேட்டு மகிழ பகிர்ந்துகொள்ளலாம்.
இப்படிப் பலவழியிலும் உங்கள் மனவோசை, திரையோசையில் ஒலிக்கும் வாய்ப்புள்ளது.
விரைவில் திரையோசையில் உங்களைனைவரின் பங்களிப்பையும் காண ஆவலாக உள்ளோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.