அன்பு நெஞ்சங்களே..!
மன்றத்தின் பண்பலை தன் சோதனை ஒலிபரப்பை நிகழ்த்திக்கொண்டிருப்பதை அனைவரும் அறிவீர்கள். அதைக் கேட்டு விட்டு நீங்கள் கொடுக்கும் கருத்துகள் உத்வேகத்தைத் தருகின்றன.
ஏற்கனவே சொன்னபடி, தீபாவளி முதல் தன் உத்தியோகபூர்வ ஒலிபரப்பை பண்பலை தொடங்குகிறது. முதற்கட்டமாக மூன்று மணிநேரம் முக்கியமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். அதாவது மன்றப் படைப்புகளும் மன்ற மக்கள் குரலும் இடம்பெறும் நேரம்.
இந்த மூன்று மணி நேர நிகழ்ச்சி மீண்டும் ஒரு தடவை மீள் ஒலிபரப்பாக அன்றோ, அல்லது மறு நாளோ ஒலிபரப்பாகும். ஆக மொத்தம் ஆறு மணி நேரம்.. அந்த ஆறு மணி நேரம் மன்றத்தார் அனைவரும் கேட்கக்கூடிய நேரமாக இருக்க வேண்டும். எனவே கீழே கொடுக்கப்பட்ட நேர அட்டவணையில் உங்களுக்குத் தோதான நேரத்தைத் தெரிவு செய்து சொல்லுங்கள். வாக்களித்துச் சொன்னாலும் சரிதான்.
காலை 7 முதல் 10 மணிவரை ஒலிபரப்பும் 3 முதல் 6 மணி வரை மறு ஒலிபரப்பு என்று ஒரு தெரிவும்,
காலை 11 மணியிலிருந்து மாலை 2 மணி வரை ஒலிபரப்பும் இரவு 7 மணி முதல் இரவு பத்து மணி வரை மறு ஒலிபரப்பு என்று இன்னொரு தெரிவும்
காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒலிபரப்பும், முன்னிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மறு ஒலிபரப்பு என்ற மூன்றாவது தெரிவும் உண்டு.
நன்றி.