கொள்ளை அடி... வயிற்றிலடிக்காதே..

ஆதவா

New member
அதிகாலை 6-8
மதியம் 12-2
சாயங்காலம் 6-7
இரவு 9-10
நள்ளிரவு 11-12

என்ன... இதெல்லாம் நான் சாப்பிடும் நேரம் என்று நினைக்கிறீர்களா?.... வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் என்னை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது இங்கே குறித்த எண்கள் தவிர்த்த மீதி நேரங்கள்...

நண்பர்களே...

மேற்குறித்த நேரங்கள் மட்டும்தான் திருப்பூரில் மின்சாரம் இருக்கிறது. மீதி நேரமெல்லாம் துண்டிப்புதான். இரண்டு மணிநேரம் ,மூன்று மணிநேரம் என்று இருந்த மின்சார துண்டிப்பு இப்பொழுது தலைகீழாய், இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும்படி ஆகிவிட்டது... நான் ஒருநாள் முழுக்க வேலை செய்தால்தான் என் வாழ்க்கை மெல்ல மெல்ல நகரும். இப்பொழுது ஒருநாளைக்கு ஐந்து மணிநேரம் கூட வேலை செய்வதில்லை.. இருக்கிற இந்த நேரத்திலும் என்னடா இவன் டைப்படித்துக் கொண்டிருக்கிறானே என்று எண்ணாதீர்கள். மின்சாரம் இல்லாததால் வேலை எதுவும் தொடர்ந்து எடுக்க முடியவில்லை. எனது வாடிக்கையாளர்களை நான் இழந்து வருகிறேன்.. ஒரு UPS வாங்க என்னிடம் திறமில்லை. வாங்கினவர்களுக்கோ அதனை முழுதாய் உபயோகிக்க இடமில்லை. திருப்பூர் ஏற்கனவே நசிந்து வரும் சூழலில் மின்சாரம் மேலும் நசுக்குகிறது. நைய்ந்த பின் எழுந்த வர திராணியில்லை மக்களே.

பொறுப்பற்ற அரசின் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டு இப்படி புலம்புவது தவறுதான்... வேறுவழியில்லை. நம்முடைய கோபம் வெறும் ஓட்டு மாற்றுவ்தில்தான் இருக்கிறதேயொழிய வேறெதிலும் இல்லை.

இன்னும் ஒருமணிநேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். எனக்கு கட்டாய ஓய்வு. ஒருவேளை இது தொடர்ந்து வந்தால் நான் மின்சாரமே இல்லாத தொழிலுக்குச் செல்லவேண்டியிருக்கும்.. இது ஒரு கட்டாய்த்திணிப்பு.

அரசே.... நீங்கள் ஒரு ம.. உதவியும் எங்களுக்குச் செய்யவேண்டாம்.... ஒழுங்கான நிர்வாகத்தோடு ஆட்சியை நடத்தினாலே போதும்.. நீங்கள் எவ்வளவு கோடிவேண்டுமானாலும் கொள்ளை அடித்துக் கொள்ளுங்கள். எங்கள் வயிற்றில் உங்கள் காலை வைத்து மிதிக்காதீர்கள்...

அன்புடன்
பாதிக்கப்பட்டவன்.
 
உண்மையில் என்ன சொல்வதென்றெ தெரியவில்லை...!

சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் துண்டிப்பு. மாதத்தில் ஒரு நாள் பகலில் எட்டு மணி நேரம் துண்டிப்பு.
இதற்கே சமாளிக்க கடினமாக உள்ளது.
 
உண்மையில் என்ன சொல்வதென்றெ தெரியவில்லை...!

சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் துண்டிப்பு. மாதத்தில் ஒரு நாள் பகலில் எட்டு மணி நேரம் துண்டிப்பு.
இதற்கே சமாளிக்க கடினமாக உள்ளது.

சென்னை தவிர மீதி நகரங்கள் எல்லாம் என்ன நரகமா??

இது என்ன பாரபட்சம்? சென்னைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை பகிர்ந்தளித்தாலே ஓரளவு தாக்குப்பிடிக்குமே.........

ஒருநாள் பகல் முழுக்க 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது....
இரவில் 5 மணிநேரம் மின்சாரம்!!!
 
வேதனையாத்தான் இருக்கு... பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுகொண்டதால் ஒருநிமிசமும் நிறுத்தாம ஒழுங்கா கொடுக்குறாங்களாம்.. போறபோக்கா பார்த்தா பொதுசனமும் ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் போட்டுகிட்டாதான் வாழ்க்கையை ஓட்ட முடியும் போலிருக்கு..!!

மக்கள்சேவையாவது மண்ணாங்கட்டியாவது... அரசியல் அரிச்சுவடி வியாபார சந்தையில் விலைபோயி வெகுகாலமாகிவிட்டது.. மக்கா..!!
 
ஆதவா...

மோதகம் - கொழுக்கட்டை

பெப்ஸி - கோக்

இது போல தான் அரசியலும்...

உருவங்கள் பெயர் இவை தான் வேறு வேறு...

இது பற்றி அண்மையில் இந்திய நண்பரிடம் கோவில் பேசியபோது (ஏதோ ஒரு பேச்சில் மின்வெட்டுக்கதை வந்திட்டுது)

இவங்களுக்கு வேணும். அனல் மின்னிலையம் வேண்டாமென்றா வேற எங்க போறது என்று...

திரும்ப கேட்டேன்... அப்போ அனல் மின்னிலையம் வந்தால் தமிழ்நாட்டுக்கு சீரான மின்சாரம் கிட்டுமா என்றதற்கு அந்த சிங்கத்திடம் பதிலில்லை...

கவுண்டர் ஒரு நகைச்சுவையில் சொறது தான்.. அடுத்த 4 வருசத்துக்கு அரசப்பற்றி பேச எவனுக்கும் லாயக்கு இல்ல. எல்லாம் காசுகொடுத்து வாங்கியாச்சு என்றது தான்...
 
உங்கள் பதிவைப் பற்றி பாராட்டி பேசுவதா அல்லது தமிழ் மக்களின் இன்றைய நிலையைப் பற்றி பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.

மின்சாரம் என்பது அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. இந்தியாவை விட பக்கத்தில் இருக்கும் நாடுகள் நிறையவே தயாரிக்கின்றன. ஏன் நம்மால் முடியவில்லை. மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்ததுபோக மீதியிருப்பதையாவது உருப்படியான காரியத்திற்கு செலவழிக்கலாமே. என்று நிலமை மாறுமோ நம் மக்களுக்கு தெரியவில்லை.

ஓட்டு போட்டுவிட்டார்கள், நம்மை அரியணையில் ஏற்றிவிட்டார்கள் இனிமேல் அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று ஏன் இப்படி நினைக்கிறார்கள்.

மாற்றம் வேண்டும், மாற்றம் வரவேண்டும், மாற்றம் நிச்சயம் வரும்!!!
 
சொந்த நாட்டில தட்டுப்பாடு. இந்த லட்சணத்தில பக்கத்து நாடுகளுக்கு குடுக்க ஒப்பந்தம் போடுறாங்களாம். போங்கப்பா. முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை அடக்கி ஆளும் மின்வெட்டை ஏவி விட்டு, குய்யோ முறையோ என்று கத்துவதும்.. கொத்துக் கொத்தாக எல்லாரையும் உள்ளே தள்ளுவதும்.. போங்கப்பா.. உள்நோக்கத்துடன் நடுவண் அரசும் விட்டுப் பிடிக்குது போல.
 
என் மன வேதனையின் வெளிப்பாடு உங்களுடைய இந்த பதிவு ஆதவா நீங்க சொல்லிட்டீங்க ஆனா இங்க நேரமே இல்லை எந்நேரம் செல்லும் மீண்டும் எப்போது வரும் என்றெ தெரியாது...எப்போது மின்சாரம் தடைபடும் என்றே இந்த கணினியில் அமரவேண்டி உள்ளது..மற்ற நகரங்களும் இந்த நகரத்தினை போல் படும் வேதனை வருத்தபடுவதா அல்லது நம்மை போன்றே ஒருவர் உள்ளார் என்று சமாதனம் கொள்வதா என்றே தெரியவில்லை...அரசின் செயல்பாடு அமரன் அவர்கள் கூறுவது போல் தன் மகள் நோயில் கிடக்க பக்கத்து வீட்டு பிள்ளைக்கு இனிப்பு கொடுத்த கதையாக இருக்கிறது..சூரிய மின்சாரம் மூலம் தன்னிறைவான நிலை பெற்ற குஜராத் அரசினை போல் நம்மாலும் செய்ய இயலும் .அது போல் குண்டு பல்புகளின் பயன்பாட்டினை அறவே நீக்க வேண்டும் ..மற்றொன்று சாலையோரம் பயன்பாட்டில் உள்ள சோடியம் விளக்குகளை மாற்ற வேண்டும் ..மாநில தலைநகரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தேவையற்ற விளக்குகளின் செயல்பாடு குறைக்கபடவேண்டும்.. பயன்பாட்டில் உள்ள அரசு மின் நிலையங்களில் உள்ள செயல்படாத எந்திரங்கள் மாற்றபடவேண்டும் ..விரைந்து செயல்பட்டு இந்த மாற்றங்களை செய்யின் மின் தட்டுபாடு நேரம் குறையும்..ஆத்மார்த்தமான செயல்பாடுகளினை விடுத்து தேவையற்ற வகையில் அனுமின் நிலையங்கள் மூலம் மட்டுமே மின்சாரம் பெறயியலும் எனும் தோற்றத்தை உருவாக்க கூடாது...
 
ஆதவா...

மோதகம் - கொழுக்கட்டை

பெப்ஸி - கோக்

இது போல தான் அரசியலும்...

உருவங்கள் பெயர் இவை தான் வேறு வேறு...

இது பற்றி அண்மையில் இந்திய நண்பரிடம் கோவில் பேசியபோது (ஏதோ ஒரு பேச்சில் மின்வெட்டுக்கதை வந்திட்டுது)

இவங்களுக்கு வேணும். அனல் மின்னிலையம் வேண்டாமென்றா வேற எங்க போறது என்று...

திரும்ப கேட்டேன்... அப்போ அனல் மின்னிலையம் வந்தால் தமிழ்நாட்டுக்கு சீரான மின்சாரம் கிட்டுமா என்றதற்கு அந்த சிங்கத்திடம் பதிலில்லை...

கவுண்டர் ஒரு நகைச்சுவையில் சொறது தான்.. அடுத்த 4 வருசத்துக்கு அரசப்பற்றி பேச எவனுக்கும் லாயக்கு இல்ல. எல்லாம் காசுகொடுத்து வாங்கியாச்சு என்றது தான்...


அன்பு... நீங்கள் சொல்வது அணுவா அனலா??

குழப்பத்துடன்...

நண்பர்களுக்கு அண்ணாக்களுக்கும்...

இன்று முழுவதும் மின்சாரம் இருந்தது. இருப்பினும் இந்நிலை நீடிக்குமாவென தெரியவில்லை...
நகரில் நன்கு மழை பெய்தது.
 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கே. விஜயனின் சமீபகூற்று..!!
''கடும் மின் பற்றாக்குறையை சமாளிக்க பெரு நகரங்களில் வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் இரவு 8 மணிக்கு மேல் ஆடம்பர விளக்குகளை கட்டாயமாக அணைக்கும் வகையில் உரிய வரைமுறைகளை வகுக்க வேண்டும்''
 
[QUOTE
அரசே.... நீங்கள் ஒரு ம.. உதவியும் எங்களுக்குச் செய்யவேண்டாம்.... ஒழுங்கான நிர்வாகத்தோடு ஆட்சியை நடத்தினாலே போதும்.. நீங்கள் எவ்வளவு கோடிவேண்டுமானாலும் கொள்ளை அடித்துக் கொள்ளுங்கள். எங்கள் வயிற்றில் உங்கள் காலை வைத்து மிதிக்காதீர்கள்...

அன்புடன்
பாதிக்கப்பட்டவன்.[/QUOTE]

பாதிக்கப்பட்டு வெந்து நொந்து வாழ வழியின்றி முறையிடப்படும் உணர்வை பிழிந்திடும் வரிகள், மின்சாரம் ஒரு கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம் இன்று தமிழகத்தை உலுக்குகறது. அரசு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் ஆவல். ஒளி வரும் நாள் என்று எங்கள் வாழ்வு ஒளிமயமாகும் என்றோ இறைவா
 
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் மின்வெட்டை சரி செய்து விடுவேன் ! எங்கோ கேட்ட குரல் அல்லவா ! ..

நான்கு வருடங்களுக்கு எதுவும் பேச கூட முடியாது
 
இன்றைய மின்சார நேரங்கள்..

11-10-2012

மதியம் 12 -222 - இரண்டு மணிநேரம்
மாலை 6 - 7 - ஒருமணி நேரம்
இரவு 9 - 10 - ஒருமணி நேரம்

மொத்தம் நான்கு மணிநேரங்கள்...
 
அன்பு... நீங்கள் சொல்வது அணுவா அனலா??

குழப்பத்துடன்...
மன்னிக்க. அது அணு தான்... (அவுஸ்திரேலியாவுடன் கூட ஒரு கைச்சாத்திட்டாங்க. யுரேனியம் வாங்க... பாக்கிஸ்தான், இந்தியாவுக்கு கொடுத்தா தனக்கும் வேணும் என்று சொல்லீச்சே...)
 
அதிகாலை 6-8
மதியம் 12-2
சாயங்காலம் 6-7
இரவு 9-10
நள்ளிரவு 11-12



பொறுப்பற்ற அரசின் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டு இப்படி புலம்புவது தவறுதான்...



அன்புடன்
பாதிக்கப்பட்டவன்.

காவிரியில் தண்ணீர்விட மறுக்கிறான் கன்னடியன்.....முல்லைப்பெரியாறில் பிரச்சனை செய்கிறான் மலையாளி, பாலாறில் அணை கட்டி ஆட்சேபம் தெரிவிக்கிறான் ஆந்திராக்காரன்....அவன்களால் அவதியுறும் ஆயிரமாயிரம் குடும்பங்கள்...யாரை நோவது?

மின்சாரப் பற்றாக்குறைக்கு இந்த அரசு என்ன செய்யும்? பொறுப்பற்ற அரசு என...போற போக்கில் சொல்ல முடியாது. இதுவும் கருணாநிதியால்தான்.
 
Last edited by a moderator:
தி.மு.க. ஆட்சியில் 2 மணிநேர மின்வெட்டு இருந்தபோது வானத்திற்கும், பூமிக்கும் குதித்த அம்மையார் இப்போது என்ன சொல்லப்போகிறார்?
 
காவிரியில் தண்ணீர்விட மறுக்கிறான் கன்னடியன்.....முல்லைப்பெரியாறில் பிரச்சனை செய்கிறான் மலையாளி, பாலாறில் அணை கட்டி ஆட்சேபம் தெரிவிக்கிறான் ஆந்திராக்காரன்....அவன்களால் அவதியுறும் ஆயிரமாயிரம் குடும்பங்கள்...யாரை நோவது?

மின்சாரப் பற்றாக்குறைக்கு இந்த அரசு என்ன செய்யும்? பொறுப்பற்ற அரசு என...போற போக்கில் சொல்ல முடியாது. இதுவும் கருணாநிதியால்தான்.


சார் எத்தனை நாளைக்கு தான் இதையே சொல்லிட்டு இருக்க போறீங்க !! ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகி விட்டது ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் மின்வெட்டை சரி செய்து விடுவேன் என்று சொல்லி தானே ஆட்சிக்கு வந்தார்கள் ? அப்போது தெரியவில்லையா ?

முந்தைய ஆட்சியில் கூட இந்த அளவுக்கு மின்வெட்டு இருந்ததில்லை

ஓராண்டில் நூறாண்டு சாதனை என்று விளம்பரம் செய்த காசில் ஏதேனும் மின் திட்டத்தை உருவாக்கி இருந்தால் கூட ஏதேனும் புண்ணியமாக இருந்து இருக்கும் ..
 
அருண்..


இப்போ ஐயா ஆட்சியில் இருந்தாலும் பொறுப்பற்ற அரசே என்றுதான் ஆதவா சொல்வார். அதனைத் தொடர்ந்து ஐயாவை நோக்கி சொற்கள் வீசப்படும். கேடயங்களும் வரும். இந்த நிலை மாறும் வரை தமிழகம் இருட்டில்தான் இருக்கும்.
 
இதே வேளையில் இந்த கவிதை உண்மையை உரைக்கும் ..
attachment.php

நன்றி முகநூலில் பகிர்ந்த நண்பருக்கு
 
அருண்..


இப்போ ஐயா ஆட்சியில் இருந்தாலும் பொறுப்பற்ற அரசே என்றுதான் ஆதவா சொல்வார். அதனைத் தொடர்ந்து ஐயாவை நோக்கி சொற்கள் வீசப்படும். கேடயங்களும் வரும். இந்த நிலை மாறும் வரை தமிழகம் இருட்டில்தான் இருக்கும்.

இதையும் சேர்த்து கொள்ளுங்கள் நண்பரே ..

இக்கரைக்கு அக்கரை பச்சை !! ? ...
 
Back
Top