பேச்சுத்திறனற்ற பிள்ளைகளின் தேசிய கீதம் *

ஆதி

New member


என்னை அறியாமல் கண்ணும் மனசும் அழுதது, நாட்டுணர்வு நாளங்களில் ரத்தத்தோடு பாய்ந்தது
 
தேசிய கீதத்தின் போது ஆடாமல் அசையாமல் நெடுங்குத்தாய் நிற்கவேண்டும் என்பது பள்ளிப்பருவத்திலிருந்து கற்றுத்தரப்படும் போதனை. அப்போது பல சந்தர்ப்பங்களில் வாய் மட்டும் கீதம்பாட மனம் எங்காவது சுற்றித்திரிந்து இறுதியில் வந்து இணைந்துகொள்ளும். இங்கே வாய் மலரா அரும்புகள் பாடலோடு உணர்வொன்றிப் பாடிய நிலை மனம் நெகிழ்த்தியதற்கு கசிந்திருக்கும் என் கண்களே சாட்சி. வாழ்க இளைய பாரதம்!

பகிர்வுக்கு நன்றி ஆதி.
 
ஜானகி அம்மா சொன்னதுபோல நானும் பேச்சிழந்தேன்.

பகிர்விற்கு நன்றி ஆதி...
 
இது என்ன ராகம்! இது என்ன தாளம்!
என்பது எனக்கு தெரியாது... ஆனால்
என் கண்ணிர்துளிகள் காட்டிகொடுத்தன
இது எப்படிபட்ட பாடல் என்று!
என் தாய்நாடே!.. வாழ்க!
 
இதனை வெறும் 13 லட்சம் பேர்தான் பார்த்திருக்கிறாகள்...

இசையமைத்தவர் யார்?

ஜெயஹே வரும்பொழுது அவ்வளவு அழகாக இருந்தது. பொதுவாக ஜெயஹே பொழுதினில் பெரிய கோரஸ் அல்லது அழுத்தமான இசை இருக்கும்... இங்கே மென்மையாக இருக்கிறது. சூழலுக்கு மிகவும் பொருத்தமாக...

சுதந்திரமடைந்து இத்தனை வருடங்கள் கழித்து ”கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சுதந்திரமடைந்து இத்தனை வருடங்கள் கழித்தாவது ”கண்டுபிடித்திருக்கிறார்கள்!
 
இக்குழந்தைகளின் தேசப்பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
 
Back
Top