அட்டகத்தி

மதி

New member
இதற்கு இன்னும் ஆதவா விமர்சனம் எழுதாதது ஆச்சர்யம். அடிக்கடி டிவியில் விளம்பரம் வருதே. போய் பார்க்கலாமென்று போயாச்சு.

சுருக்கமாய் சொன்னால் ஒரு வாலிபன் வாங்கும் பல்புகளின் ஓர் இனிய தொகுப்பு. :)

கதை? அதையெல்லாம் ஏன் தேடுறீங்க. கதாநாயகன் அறிமுகத்திலிருந்து அவன் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பெண்ணின் கதைகளும் நன்றாக சொல்லிருக்கிறார்கள். அதிலும் திவ்யாவா.. நதியாவா?? சிரிப்பை வரவழைத்தது. படம் முழுக்க நகைச்சுவை இழையோட எடுத்திருப்பது நன்று. அதிலும் படம் முடியும் வரை இரண்டு நிமிஷத்துக்கொரு முறை விசில் சத்தம் பறக்கும் விதத்தில் வசனங்களும் திரைக்கதையும் இன்றைய இளைஞர்களின் காதல் தோல்வி அத்யாயத்திலிருந்து எடுத்திருத்திருக்கிறார்கள்.

என்னை ரசிக்க வைத்த இடங்கள் பல. ஏற்கனவே பார்த்த கேட்ட அனுபவித்த என்று பல சம்பவங்கள் நம் நினைவைக் கிளறுவது படத்தின் சிறப்பு. அதிலும் காதலை சொல்லப்போகும் இடத்தில் "அண்ணா.. ப்ளீஸ்ண்ணா.." என்ற வசனம் நான் எழுதிய கதையையே ஞாபகப்படுத்தியது. அதே மாதிரி மற்ற மொக்கை வாங்கும் இடங்களும். ஒருவேளை மன்றத்திலேர்ந்து சுட்டிருப்பாங்களோ?? :icon_b:

கதாநாயகனாக நடித்தவர் நன்றாகவே நடித்திருக்கிறார். அதிலும் காதல் தோல்வின்னா சோகமாய் இருக்கணும்ங்கறத்துக்காக சோகமாய் நடிக்க முயற்சி பண்ணும் இடங்களில் ஜொலிக்கிறார். விமல் போல் யதார்த்தமான நடிகர் ரெடி. படத்தில் நிறைய பெண்கள். ஆனா எல்லோருமே அழகாய் இருக்காங்க. :D:D. கிராமத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். ஏனைய கதாபாத்திரங்களாய் வரும் அப்பா, அம்மா, அண்ணன், மற்றும் நண்பர்கள் என்று ரசிக்கும்படியான பாத்திர படைப்பு.

படத்தில் இசை ஒரு பெரிய ப்ளஸ். "ஆடி போனா ஆவணி" மற்றும் "நடுக்கடலுல கப்பல தள்ள முடியுமா" கானா பாடல்களுக்கு கன்னாபின்னாவென்று விசில் சத்தம். அதிகம் அலட்டிகாத பிண்ணனி இசை நீட்டி முழக்கப்பட்ட "ஒரு குறும்படத்திற்கான" உணர்வை தருகிறது. அதுவே படத்தின் பலமும். பக்கத்திலிருந்து பார்ப்பது போல உணர முடிந்தது.

நிறைய இடத்தில் நையாண்டிக்கும் பஞ்சமில்லை. இறுதிக்காட்சியில் "தினகரன்.... ஆசிரியர்" என்னும் இடம் சிரிப்பை வரவழைத்தது. வருத்தம் கலந்த உண்மையும் உரைத்தது. பல வருடங்களாக பாஸ் பண்ண முடியாமல் ஒருவழியாய் பாஸ் பண்ணி வருபவர்கள் தான் இன்றைக்கு அடுத்த தலைமுறைக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்களோ என்ற எண்ணம். மற்றவர் எல்லாம் வேற வேலைய பார்க்க போய்விட்டார்கள்.

மொத்தத்தில் மொக்கை வாங்கும் காட்சிகள் ஏகத்துக்கும் இருந்ததால் படம் பிடித்தது. இன்னும் மனதளவிலாவது இளைஞனாய் இல்லாதவர் மட்டும் "பொறுக்கித்தனத்த போய் படமா எடுத்திருக்கான் பாரு" என்ற விமர்சனம் வைக்கலாம். :icon_b:

"இளைஞர்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும்" :icon_ush:
 
அதனால்தான் இந்த படத்திற்கு அட்டகத்தி என்ற பெயர் வச்சாங்களோ, ஆனால் உங்கள் விமர்சனம் மொக்கை போடாமல், சக்கைபோடு போடுது.
 
படம் நன்றாக தான் இருக்கும் போலும் என நினைத்த வேளையில் தங்களது விமர்சனம் அதை உறுதி செய்துள்ளது ..
 
இந்த வார கடைசியில் இப்படத்தை பார்க்கலாமுன்னு இருக்கேன்
 
இப்பவே பாக்கனும்ங்கற ஆவலில்...இணையத்தை தேடினால்....சரியான பதிப்பு கிடைக்கல. ஆனா....நிச்சயம் பாக்கனும். இந்த மாதிரி சுவாரஸியமான மொக்கைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். தாவணி போனால்...சல்வார் உள்ளதடா....தத்துவமும் பிடிக்கும்.

அழகான விமர்சனம் மதி.
 
பார்க்க ஆவலாய் இருந்த போதிலும் இணையக்கடவுள் வரம் தரவில்லை. ( எங்களுக்கு வேற வழி இல்ல மக்கா )
 
ஒருவழியா இந்த படத்த பாத்துட்டேன்.

கதாநாயகன் முடிவெட்ட போகும் ஸீன் அருமை. சிரிப்பை வரவழைத்தது.

மாஞ்சு மாஞ்சு சைட் அடிச்சும் மொக்கை வாங்கியும், விடாமுயற்சியோடு பின்னும் தொடர்கிறார்.

மொத்தத்தில் ஒரு சப்பை படம்
 
"இளைஞர்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும்" :icon_ush:

உங்கள் விமர்சனத்தைப் படித்ததில் உங்களுக்கும் படம் பிடித்திருக்கிறதே.
 
உங்கள் விமர்சனத்தைப் படித்ததில் உங்களுக்கும் படம் பிடித்திருக்கிறதே.

அப்படின்னா??? :icon_shok:

அப்படியா மதி சார்?
 
நானும் பார்த்தேன். எனக்கு என்னவோ இப்படம் அத்தனை சிலாகிப்புக்குரியதாகப் படவில்லை. பல இடங்கள் மொக்கையாகவும் பலநேரம் போர் அடிப்பதாகவும் இருந்தன. ஒருமுறை (கஷ்டப்பட்டு) பார்க்கலாம். அவ்வளவுதான்.
 
இன்னும் பார்க்க வில்லை.
வாசித்தவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் வரவில்லை

சில பத்திரிக்கை விமரிசனங்கள் பாராட்டியிருந்தன என்று நினைக்கிறேன்.
 
நானும் படத்தை பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். டிவிடியில் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
 
நானும் படத்தை பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். டிவிடியில் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.


youku.com/soku.com என்ற chineese இணயதளங்களில் தேடுங்கள்/பாருங்கள்...
 
Back
Top