அறிஞர்
New member
உலகின் நம்பர் 3 வீராங்கனை ஆனார் சூப்பர் சாய்னா நேவால்!
புதுடெல்லி, ஜூன் 24,2010
சிங்கப்பூர் பேட்மின்டனில் சாம்பியம் பட்டம் வென்று சில தினங்களே ஆன நிலையில், உலக மகளிர் பேட்மின்டன் தரவரிசையில் 3- இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார், இந்திய இளம் வீராங்கனை சாய்னா நேவால்.
இந்திய பேட்மின்டன் வரலாற்றில் வீராங்கனை ஒருவர் இந்த உயரிய இடத்தை வசப்படுத்தியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
அண்மையில் சென்னையில் நடந்த இந்திய ஓபன் கிராண்ட்பிரீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நேவால், தனது வெற்றி வேட்டையை தொடர்ந்தார்.
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது வெளியிடப்பட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியலில் நம்பர் 3 வீராங்னை என்ற புதிய மகுடத்தைச் சூடியுள்ளார், 20 வயதான சாய்னா.
சர்வதேச தரவரிசையில் 6-ம் நிலையில் இருந்த 'சூப்பர்' சாய்னா இப்போது 64791.2637 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் முன்னேறி சாதனை படைத்திருக்கிறார். முதல் இரண்டு இடங்களில் சீனாவின் இயாங் வங் மற்றும் சின் வங் ஆகியோர் உள்ளனர்.
சர்வதேச ஆடவர் பேட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் சேத்தன் ஆனந்த், காஷ்யப் மற்றும் அரவிந்த் பட் ஆகியோர் முறையே 16, 27 மற்றும் 28 என்ற நிலைக்கு முன்னேறியுள்ளனர்.
அண்மையில் இந்தியன் ஓபன் பேட்மின்டன் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் 'ஆனந்த விகடன்' இதழுக்கு அளித்திருந்த பேட்டி இங்கே...
'ஐ லவ்..?!'
-----------------------
சென்னையில் சாய்னா புயல்! கடந்த வாரம் இங்கு நடந்த 'இந்தியன் ஓப்பன் பேட்மின்டன்' போட்டியில் சர்வதேச வீராங்கனைகளைத் தோற்கடித்து, சாம்பியன் ஆன சந்தோஷத்தில் இருந்தார் சாய்னா!
"தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே வர்றீங்க... உங்க வெற்றியின் ரகசியம் என்ன?"
"வெற்றி பெற ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு என்ன தேவையோ, அதை எல்லாம் செய்யணும். நான் நிறையப் பயிற்சி எடுப்பேன். எதிர்த்து விளையாடும் வீரர்களோட பலம், பலவீனம் எல்லாத்தையும் தெரிஞ்சுவெச்சிருப்பேன். ஒரே ஸ்டைலில் விளையாடினால், நம் பலம், பலவீனம் எதிரிக்குத் தெரிஞ்சுடும். அதனால், நம்ம ஸ்டைலை மாத்திக்கிட்டே இருக்கணும்... இருக்கேன். வெற்றி கிடைக்குது!"
"பி.டி.உஷா, கர்ணம் மல்லேஸ்வரி, சானியா மிர்சான்னு பெண் விளையாட்டு வீரர்கள் பெரிய உயரத்தைத் தொட முடியலையே... ஏன்?"
"அதுக்கு ஒரே காரணம், மீடியாதான். எங்களை, மக்கள், ஸ்பான்சர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது மீடியா. ஆனா, ஒரு கட்டத்துக்குப் பிறகு உற்சாகப்படுத்து வதற்குப் பதில் சர்ச்சைகளில் மாட்டி விடுறாங்க. சர்ச்சைகளுக்குப் பதில் சொல்லிட்டே இருந்தா, எப்படிப் பெரிய உயரம் போக முடியும்?"
"உலகத் தர வரிசைப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கீங்க. எப்போ நம்பர் ஒன் ஆகப்போறீங்க?"
"எனக்கு நம்பர் ஒன் இடம் தேவை இல்லை. என் லட்சியம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குத் தங்கம் ஜெயிப்பது. அதை நோக்கித்தான் ஓடிட்டு இருக்கேன். மத்தபடி ரேங்க்பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை!"
"சென்னை எப்படி இருக்கு?"
"சென்னை எனக்கு எப்பவும் பிடிக்கும். காரணம், மெரினா பீச். எப்போ சென்னை வந்தாலும், பீச்சுக்குப் போய் காலாற நடப்பேன். இப்போ, உலகக் கோப்பை ஃபுட்பால், ட்வென்டி-20 கிரிக்கெட் நடந்துட்டு இருக்கு. நம்மைக் கண்டுக்க கூட்டம் இருக்காதுன்னு நினைச்சேன். ஆனா, சுலபமா என்னைக் கண்டுபிடிச்சு பயங்கரமா உற்சாகப்படுத்திட்டாங்க சென்னை ரசிகர்கள். ஐ லவ் யூ சென்னை!"
நன்றி - விகடன்