மதுபானகடை

tasmac.jpg

மதுபானக்கடை
ரொம்ம்ம்ம்ம்ப நாள் கழித்து திரைப்படம் பார்க்க போனேன் . (என் நன்பர் ஒருவரின் பரிந்துடையின் பேரில் )
'நாஞ்சில் நாடானின் ''உண்ணற்க கள்ளை'' என்ற கட்டுரையை அடிப்படையாக கொண்டு எடுப்பட்ட ஒரு திரைப்படம் இது .

தமிழ் சினிமாவுக்கான எந்த ஒரு அடையாளமும் இன்றி வந்து இருக்கும் படம்
(உங்களில் யாரேனும் ஈராணிய மொழியில் வந்த " தி சைக்கிளிஸ்ட் " படம் பார்த்தது உண்டா ? .. கிட்டதட்ட அந்த பட சாயலில் இருக்கும் )

முதலிலேயே " இந்த படத்தில் கதை என ஏதோதும் உங்களுக்கு தென்பட்டால் அது உங்க கற்பனையே " என அதிரடியாக காட்டி விட்டு அதன் பின் துவங்குகிறது காட்சிகள் .

செப்டம்பர் 30 தேதி இரவு 9.30 க்கு பின் நோக்கி ஆரம்பித்து அக்டோபர் 1 ம் தேதி நாள் முழுக்க ஒரு டாஸ்மாக்கில் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே படம் .

டாஸ்மாக்கின் உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு இந்த படம் சொல்லும் சேதி புரியும்
உள்ளே புழங்கியவர்களுக்கு படம் இனிக்கும்

ஸாரி நான் அங்கே போனது இல்லை என சொல்பர்களுக்கு இந்த படம் புரியாது.


இலக்கியம் சார் தேடர் நபர்கள் அவசியம் பார்க்க வேண்டிய அற்புத படம்
மதுபானக்கடை

உண்ணற்க கள்ளை கட்டுரை படிக்க
hடிடிp://nanjilnadan.com/2011/10/27/உண்ணற்ககள்ளை/

முக்கிய பின் குறிப்பு : உங்கள் தனிப்பட்ட மிஸ்டர் கிளின் இமேஜை காட்டிகொள்ளவேண்டும் என்ற அற்ப எண்ணத்தில் இந்த படத்தை யாரும் தூற்றவேண்டாம் என கோரிக்கை விடுக்கிறேன்.
 
பார்க்க வேண்டிய படம் என்பதை உங்கள் விமர்சனம் சொல்கிறது. நல்ல படங்களை ஊக்குவிப்போம். பகிர்வுக்கு நன்றி வெற்றி.
 
:food-smiley-022:அப்படியே இடைவேலையில் சரக்கும் வித்தால் நல்லா இருக்கும் :food-smiley-022:
 
தகவல் பகிர்வுக்கு மிக்கநன்றி வெற்றி...!!:icon_b:

’தி சைக்கிளிஸ்ட்’ படத்தை போன்றது என்ற ஒற்றை வார்த்தையில் விமர்சித்துவிட்டு சென்றுவிட்டீர்கள்.. அப்படத்தில் வறுமையின் கொடுமையை கண்ணுற்று நானும் கண்ணீர்விட்டிருக்கிறேன்..!! உங்களின் இந்த ஒருவரி விமர்சனம் உடனே இப்படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை தோற்றுவிக்கிறது..!!
 
தகவல் பகிர்வுக்கு மிக்கநன்றி வெற்றி...!!:icon_b:

’தி சைக்கிளிஸ்ட்’ படத்தை போன்றது என்ற ஒற்றை வார்த்தையில் விமர்சித்துவிட்டு சென்றுவிட்டீர்கள்.. ் இந்த ஒருவரி விமர்சனம் உடனே இப்படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணத்தை தோற்றுவிக்கிறது..!!

இந்த படத்தை ஒரு பக்கம் என்ன ஒரு நாவல் அளவு விமர்த்திதாலும் பத்தாது.
எனெனில் பட இயக்குனர் சொல்ல வந்த கருத்தை கடைசி வரை சொல்லவே இல்லை..
அதற்க்கு பதிலாக நம்மை யோசிக்க வைக்கிறார் .

1) பரிபூரண மதுவிலக்கு தேவையா ?
2) கள்ளு கடைகளாஇ மீண்டும் திறக்கலாமா ?
3) சாராயம் (மேற்க்கு வங்கம் போல்) அரசே தயாரிக்கிலாமா ?
4) நாசப்படுத்தும் டாஸ்மாக்கள் தேவையா ? (கெமிக்கல் சாரயாம் ! )
5) குடி என்றால் என்ன ?
6) குடிப்பவர்களின் தரவரிசைப்பட்டியல்
7) காந்தி ஜெயந்திக்கு அவசியம் லீவ் விடவேண்டுமா ?



சரித்திரம் திரும்புகிறது . முதல் முறை கண்ணீரினாலும் இரண்டாம் முறை கலகத்தாலும் எனும் படி
என 1000 கேள்விகள் விதைக்கபட்டு இருக்கிறது.
(பி.கு: தி சைக்கிளிஸ்ட் பார்த்த ஒருவரை சந்திததில் மகிழ்ச்சி )
 
Back
Top