ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

a37b82b9-eab7-4066-81bf-ba7b8e9ca8bf.jpg

DSC_0047.jpg
 
ஈரேழு பதிநான்கு லோகம்... என்பார்கள் ...இங்கே நாம் காண்பதோ மயனின் தங்கையோ என வியக்கவைக்கும் மங்கையின் கைவண்ணத்தில் ஓர் புது லோகம்... பதினைந்தாவது லோகம் தான்... இந்த அழகை ரசிப்பதற்காகவே நிறைய விழா கொண்டாடலாம்போலிருக்கிறதே.... வாழ்த்துக்கள்

[ மதி... இந்த அழகை கூடிய விரைவில் நாங்கள் காண்பது உங்கள் கையில் தான் இருக்கிறது...]
 
பெரும்பான்மையாக வெள்ளைநிறத் துணிகளையே உபயோகப்படுத்துகிறீர்களே,

அதுவும் உணவுமேசைக்கெல்லாம் என்னும்போது...

வெண்மையைப் பேணுவது மிகவும் கஷ்டமாக இருக்காதா, ஹேகா?
 
நன்றிகள் அம்மா

மதியின் திருமணத்திற்கு நீங்களும் வருவிங்கதானே.. அப்புறமென்ன கலக்கிரலாமே..
 
இதென்ன.. இன்று நான் தான் கிடைத்தேனா??

பொதுவாக திருமண வயதில் பையனோ, பெண்ணோ இருந்தால் இதெல்லாம் சகஜம்தானே. இந்தகலாட்டாக்களிலிருந்து தப்பவேண்டுமானால் சீக்கிரமாய் டும்... டும் .. டும் முக்கு ஆயத்தம் செய்யுங்கோ.. நாங்களும் வரலாம்ல..
 
பெரும்பான்மையாக வெள்ளைநிறத் துணிகளையே உபயோகப்படுத்துகிறீர்களே,

அதுவும் உணவுமேசைக்கெல்லாம் என்னும்போது...

வெண்மையைப் பேணுவது மிகவும் கஷ்டமாக இருக்காதா, ஹேகா?

பொதுவாகவே ஐரோப்பியர் வெண்மை நிற விரும்பிகள் அக்கா, அத்துடன் உணவு சம்பந்தபட்ட அலங்காரத்திற்கு வெண்மை இன்னும் மெருகூட்டும். நம்மவர்கள் வெண்மை என்றால் போட்டோவுக்கு அழகா வராது என நீலம், சிவப்பு, போன்ற வர்ணங்களையே தேடி ஓடுவர். வெண்மை எப்போதுமே இங்கே சிறப்ப்.. அதிலும் உணவு மேசையில் வெண்மை உணவுகளின் அழகையும் சுத்தத்தையும் இன்னும் இன்னும் எடுத்துகாட்டும்.

்துணி பராபரிப்பு கொஞ்ச்ம சிரமம்தான். பெரிய விழாக்களுக்கு நான் பேப்பர் மேசை விரிப்பு பயன் படுத்துவேன். முதலில் தெரியும் பிங்க்வண்ண மேசை அலங்காரம் அத்தகையது. துணிகளில் எமது குழம்புகறி, மஞ்சள் சேர்ந்த கறிகள் பட்டால் அந்த இடத்தில் மட்டுமே ஒருவகை கிளினிங் மருந்து விட்டு கழுவி எடுப்பேன். பேப்பர் விரிப்பு ஒவ்வொருமுறையும் வேஸ்ட்டாவதால் எமக்கு செலவை அதிகமாக்கும். துணி விரிப்பு ஒருமுறை முதலீடு இட்டால் பின்னர் துவைத்து அயன் செய்தாலே போதும். வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுதினில் நானோ அல்லது வேலையாட்களோ அயன் செய்து அடுக்கி விடுவோம்.

எல்லாமே திட்டமிட்டு அதற்கென நேரம் ஒதுக்கி செய்வதால் இதுவரை எதுவும் சிரமமாக தெரியவில்லை அக்கா..

இனி எப்படிஎன சொல்ல முடியாது..
 
பொதுவாக திருமண வயதில் பையனோ, பெண்ணோ இருந்தால் இதெல்லாம் சகஜம்தானே. இந்தகலாட்டாக்களிலிருந்து தப்பவேண்டுமானால் சீக்கிரமாய் டும்... டும் .. டும் முக்கு ஆயத்தம் செய்யுங்கோ.. நாங்களும் வரலாம்ல..
நான் என்ன வேண்டாம்னா சொல்லிட்டு இருக்கேன்.. வருசக்கணக்கா காத்திட்டு இருக்கேன்.. ;)
 
நான் என்ன வேண்டாம்னா சொல்லிட்டு இருக்கேன்.. வருசக்கணக்கா காத்திட்டு இருக்கேன்.. ;)

:lachen001::lachen001:.......:icon_ush:
 
அழகு..

பிரான்சில் உங்கள் கிளையை உருவாக்கினால் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. இந்தளவுக்கு இங்கே அழகாக, அருமையாக செய்வோர் குறைவு.

வருகிற 26 உம் சூரிச் வருகிறேனே, ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக..
 
அழகு..

பிரான்சில் உங்கள் கிளையை உருவாக்கினால் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. இந்தளவுக்கு இங்கே அழகாக, அருமையாக செய்வோர் குறைவு.

வருகிற 26 உம் சூரிச் வருகிறேனே, ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக..

அப்படியா,வீட்டுக்கு வாருங்கள்
 
26 ம் திகதி சூரிச்சுக்கும் பேர்ன்னுக்கும் இடையில் இருக்கும் லைசாக் எனுமிடத்தில் ஒரு பிறந்த நாள் விழா. முழு அரேஞ்ட் மெண்ட்டும் நாங்களே. அது முடிய மறு நாள் வீட்டில் பிரியாகத்தான் இருப்போம். வாருங்கள். மதிய உணவுக்கே வநதால் மகிழ்வோம்..
 
Last edited:
அலுவலகத்தில் இருந்து லாகின் செய்தால் புகைப்படம் ஒளிப்படம் என்று எதுவும் தெரியாது, எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது, இன்று தான் புகைப்படங்களை கண்டேன் அக்கா, மிக மிக மிக நேர்த்தியாக பிரம்மாண்டமாக உள்ளது, ரொம்ப ரசனைக்காரங்க அக்கா நீங்க, இல்லாட்டி இவ்வளவு அழகு சாத்தியமே இல்லை

என்ன ஒரு ரம்யம், அபாரம்

வாழ்த்துக்கள் அக்கா
 
அட, ஆதன் ரெம்ப ரெம்ப சந்தோஷம்.

கண் கண்டதை கை செய்யும் அல்லவா. அப்படித்தான் இதுவும்.

இது போனவாரம் செய்த அலங்காரங்கள். இன்னும் நிரம்ப இருக்கிறதே அப்பப்போ நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பகிர்கிறேன். பார்த்து கருத்திடுங்கள்.
 
Last edited:
நர்ஸரிக்குள் அமைந்திருக்கும் விருந்து அலங்கார அமைப்பு அசத்துகிறது.

நல்ல கலைத்திறனும் கற்பனைத்திறனும் உங்களுக்கு ஹேகா. மனமார்ந்த பாராட்டுகள்.

இன்னுமின்னும் உங்கள் கைவண்ணம் உலகெங்கும் பரவி மிளிர வாழ்த்துகிறேன்.
 
நான் என்ன வேண்டாம்னா சொல்லிட்டு இருக்கேன்.. வருசக்கணக்கா காத்திட்டு இருக்கேன்.. ;)

உங்களின் பொறுமைக்கு.... வலம்புரி சங்கு போன்ற அரிதான, அருமையான ஜோடி அமைய வாழ்த்துகிறேன்...இறைவனை வேண்டுகிறேன். பொறுத்தார்க்கு...புதையல் கிடைக்கும்...!
 
உங்களின் பொறுமைக்கு.... வலம்புரி சங்கு போன்ற அரிதான, அருமையான ஜோடி அமைய வாழ்த்துகிறேன்...இறைவனை வேண்டுகிறேன். பொறுத்தார்க்கு...புதையல் கிடைக்கும்...!
உங்கள் வாழ்த்து சீக்கிரமே பலிக்கட்டும். :)
 
அழகு..

பிரான்சில் உங்கள் கிளையை உருவாக்கினால் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. இந்தளவுக்கு இங்கே அழகாக, அருமையாக செய்வோர் குறைவு.

வருகிற 26 உம் சூரிச் வருகிறேனே, ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக..

வாங்களேன் அமரன் பழகிப்பார்ப்பம்
 
Back
Top