ஹேகாவின் கலை வண்ணம் ...விழா அலங்காரங்கள்

Hega

New member
எமது ஹேகாஸ் ஈவண்ட் மனேஜ்மெண்ட் நிறுவனத்தினால் கடந்த காலங்களின் செய்யபட்ட விழா அலங்காரங்கள்..

DSCN0024.jpg
 
கைவண்ணத்திலும் கலைவண்ணத்திலும் மின்னும் அழகும் நேர்த்தியும் கண்ணைப் பறிக்கின்றன, ஹேகா.

உங்கள் மற்றும் உதவியாளர்களின் திறமையைப் பெரிதும் பாராட்டுகிறேன்.
 
இதில் நீங்க எங்க இருக்கீங்க? (ஓ போட்டொ எடுத்துட்டு இருந்தீங்களோ?)
 
ஆஹா...ஹேகா...அருமைம்மா...கலைநயம் பொங்கும் அலங்காரங்கள். உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. என் பையன் கல்யாணத்துக்கும் இந்த அத்தையின் அலங்காரம்....கிட்டுமா?(ரொம்ப பேராசையோ...?)

வாழ்த்துக்கள்ம்மா.
 
ஆஹா...ஹேகா...அருமைம்மா...கலைநயம் பொங்கும் அலங்காரங்கள். உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. என் பையன் கல்யாணத்துக்கும் இந்த அத்தையின் அலங்காரம்....கிட்டுமா?(ரொம்ப பேராசையோ...?)

வாழ்த்துக்கள்ம்மா.

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..

உங்கள் ஆசை பேராசை அல்லவே அண்ணா. எம்மால் இயலக்கூடியதுதான். இங்கே ஓரளவு நிலையானதும் அடுத்த ஆரம்பம் அங்கே எனும் திட்டமுண்டு. எல்லா பொருட்களும் எமக்கு தமிழ் நாட்டிலிருந்து தானே வருகிறது. கடந்த அக்டோபர் மூன்று நாட்கள் இதற்கு எனவே பிசினஸ்டிரிப் வந்து எல்லாமே அங்கே தான் ஆர்டர் கொடுத்து செய்தோம். சேயார் கவர் உட்பட திரையலங்காரம் பூக்கள் எல்லாமே தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியானது தான் அண்ணா. அதனால் எங்கும் எல்லம இயலகூடியதே..

முதலில் மருமகனுக்கு எப்போ திருமணம் என்பதை சொல்லுங்க அண்ணா. குறைந்தது மூன்றிலிருந்து ஆறுமாதம் முன்னாடி எங்களிடம் சொன்னால் நாங்கள் நிச்சயமாய் திருமணத்தை அழகாக் அரேஞ்ச்மெண்ட் செய்து தருவோம் அண்ணா. எமக்கும் அடுத்த வருடம் தமிழ் நாட்டிலும் இதே மாதிரி செய்யும் திட்டம் உண்டு.

ஓருவேளை மருமகனில் திருமண வைபவமே தமிழ் நாட்டில் எமது ஆரம்பமாக இருக்கலாம்.
 
இதில் நீங்க எங்க இருக்கீங்க? (ஓ போட்டொ எடுத்துட்டு இருந்தீங்களோ?)

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றிகள் கௌதமன் சார். ஆமாம் போட்டோ எடுத்தது நானே..

விழா வைபவத்துக்குமான முழு அரேஞ்ச்மெட்டும் நாங்கள் செய்வதால் அதாவது மேடை, மேசை சோடனைகள், ஆரம்பமுதல் இறுதிவரையான உணவுபரிமாறல்கள், கிச்சன் கிளினிங்க் என மொத்தமாகவே நிர்வாகம் செய்வதால் போட்டோ எடுக்கவே நேரம் கிடைக்காது. இருப்பினும் அவசரம் அவசரமாக எல்லாவற்றையும் மேற்பார்வை செய்து கொண்டே போட்டோ எடுத்தேன்.
 
கைவண்ணத்திலும் கலைவண்ணத்திலும் மின்னும் அழகும் நேர்த்தியும் கண்ணைப் பறிக்கின்றன, ஹேகா.

உங்கள் மற்றும் உதவியாளர்களின் திறமையைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

பாராட்டுக்களுக்கு நன்றி அக்கா..

எமது நிறுவனத்தில் நானும் எனது கணவரும் மட்டுமே பிரதானமாக இருந்து செய்கிறோம் அக்கா. அலங்காரங்கள், ஆலோசனைகள் எல்லாமே எனது சொந்த தனிபட்ட முயற்சியே. அதை என் கணவர் ஒரு உதவியாளரை மட்டும் வைத்துகொண்டு செட் செய்து கொடுப்பார். ஒவ்வொரு வைபவத்திற்கும் ஒன்றைபோல் ஒன்று இருக்ககூடாது என வித்தியாசவித்தியாசமாய் செய்வதால் ஓரளவு சுவிஸில் நிலை பெற்று விட்டோம். தொடர்ந்த ஆர்டர்கள் வந்து கொண்டே இருக்கிறது. எனது நேரமும் இறுகிக்கொண்டே செல்கிறது.

இங்கெல்லாம் உதவியாளர்கள் என்பவர்கள் சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைகளாய் மட்டுமே இருக்கிறார்கள். தனியாக பொறுப்பெடுத்து செய்யும் படி இன்னும் யாரும் எமக்கு கிடைக்கவில்லை...தேடிக்கொண்டிருக்கிறோம் அக்கா.

நேரம் கிடைக்கும் போது மேலும் போடடோக்கள் பகிர்கிறேன்.. ஆலோசனைகள் சொல்லுங்கள்
 
ரொம்பவும் அழகாய் இருக்கிறது.. கண்ணுக்கு உறுத்தாத வண்ணங்களின் கலவையாய்.. அழகான அலங்கார அமைப்பு. இங்கே ஆரம்பிக்கும் போது சொல்லுங்கள்..! :)
 
என் பையன் கல்யாணத்துக்கும் இந்த அத்தையின் அலங்காரம்....கிட்டுமா?(ரொம்ப பேராசையோ...?)

வாழ்த்துக்கள்ம்மா.

எவ்வளவு சுயநலம் பாருங்க... மதி ஐ விட்டுட்டு உங்க பையனுக்கு பொண்ணுபார்க்கிறீங்க.. :D

இதக்கேட்க்க யாரும் இல்லயா???
 
எவ்வளவு சுயநலம் பாருங்க... மதி ஐ விட்டுட்டு உங்க பையனுக்கு பொண்ணுபார்க்கிறீங்க.. :D

இதக்கேட்க்க யாரும் இல்லயா???
ஏன் இந்த கொலவெறி ரசிகரே??!! :fragend005::icon_rollout:
 
எவ்வளவு சுயநலம் பாருங்க... மதி ஐ விட்டுட்டு உங்க பையனுக்கு பொண்ணுபார்க்கிறீங்க.. :D

இதக்கேட்க்க யாரும் இல்லயா???

அட ஆமால்ல....சரி சரி...முதல்ல ஹேகாவோட அலங்காரப்பணி மதியிலிருந்து ஆரம்பிக்கட்டும்....
(ஹேகாம்மா...இந்தக் கல்யாணத்துல நீங்க உதவியாளரைத் தேடவே வேண்டாம்...நாங்களே எல்லாத்தையும் பாத்துக்குவோம்...ஐடியா மட்டும் சொல்லுங்க...)
 
நீங்களுமா??? :fragend005:
 
அட ஆமால்ல....சரி சரி...முதல்ல ஹேகாவோட அலங்காரப்பணி மதியிலிருந்து ஆரம்பிக்கட்டும்....
(ஹேகாம்மா...இந்தக் கல்யாணத்துல நீங்க உதவியாளரைத் தேடவே வேண்டாம்...நாங்களே எல்லாத்தையும் பாத்துக்குவோம்...ஐடியா மட்டும் சொல்லுங்க...)

நீங்கள் சொன்னால் சரிதான் அண்ணா,

மதிக்கு பெண் பார்த்தாச்சா.. இல்லை இனிமேல்தான் பெண் பார்க்க வேண்டுமா...
 
ரொம்பவும் அழகாய் இருக்கிறது.. கண்ணுக்கு உறுத்தாத வண்ணங்களின் கலவையாய்.. அழகான அலங்கார அமைப்பு. இங்கே ஆரம்பிக்கும் போது சொல்லுங்கள்..! :)

நன்றி மதி.

நிச்சயமாக சொல்கிறேன்.. சொல்லிவிட்டே செய்கிறேன்.
 
Back
Top