தங்கம் பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்

ravikrishnan

New member
:icon_p:ஒரு கோடிஸ்வர கிரிக்கெட் வீரருக்கு நோய் என்றதும் துடித்து விட்டார்கள் இந்திய அரசியல்வாதிகளும், ஊடகங்களுக்கும் மற்றும் விளையாட்டுத்துறையும். ஆனால் இந்தியாவுக்காக வில்வித்தையில் தங்கபதக்கம வாங்கிய இந்த தங்கப்பெண் தன் வீட்டை பழுதுபார்க்க பண வசதி இல்லாமல் நிஷா ராணி தத்தா தனக்கு தங்கம் பெற்றுததந்நத வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்..தற்பொழுது வீட்டில் காய்கறிகளை வெட்டிகொண்டுஇருக்கிறார்
இந்திய விளையாட்டுத்துறைக்கு கிரிக்கெட் விரர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிவார்களா..?
கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எனனென்ன பரிசுகள் தரப்படுகின்றன..? வில்வித்தையில் இந்தியாவுக்காக தங்கம வாங்கி கொடுத்த ஒரு விராங்கனைக்கு இந்திய அரசால் ஒரு வீடு கூடவா தரமுடியவில்லை.?
இந்திய அரசாங்கத்திற்கு இந்த விராங்கனைகளைப் போன்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...?
கொலவெறி பாடலுக்காக சம்பந்தபட்டவர்களோடு விருந்து சாப்பிடும் மாண்புமிகு இந்திய பிரதமருக்கு இந்த விளையாட்டு வீராங்கனை தெரியவில்லையா...?
இந்த வீராங்கனையின் பரிதாப நிலையைப் பற்றி கேள்விப்படும் மற்ற வளரும் விளையாட்டு வீரர்களின் மனநிலை என்னவாகும்...?
இப்படியே போனால் இநதியாவுக்கு கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டிலும் வெள்ளி டம்ளர் கூட கிடைக்காது..
இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட தேசிய அவமானம்:icon_p:
 
உண்மைதான்...ரவிக்ருஷ்ணன்...நானும் இதை செய்தித்தாளில் படித்தேன். மிகவும் வருத்தப்படவேண்டிய, வெட்கப்படவேண்டிய விடயம். இதைக் கேள்விப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கூட வருத்தப்பட்டாராம்:sprachlos020:
சும்மா வருத்தப்படுவதில் என்ன வரப்போகிறது. செய்திக்கு நன்றி
 
நன்றி!!ஐயா தங்களின் பதில்கள் எனக்கு மேலும் பலவற்றை எழுத துண்டுகோலாக உள்ளது. நன்றி!!
 
இங்கு மேலும் மேலும் பணம் பண்ணத்தான் பார்க்கிறார்கள்.

பணம், பணம், பணம்...

நாமும் இதற்கு ஒருவிதத்தில் காரணம்தான். கிரிக்கெட்டை மட்டுமே பார்த்து மகிழ்கிறோம். மற்ற விளையாட்டுகளை மதிப்பதுகூட கிடையாது.
 
நாமும் கிரிக்கெட்டை தானே பார்க்கிறோம் ? .. என்ன செய்ய இன்றைய இந்திய விளையாட்டு துறையின் நிலைமை இது தான் !
 
உண்மைதான், அருண்,மாற்றம் ஒன்று தேவை,மாறாதது???:confused:
 
Back
Top