ஓவியன்
Moderator
காமிக்ஸ் உலகம் கண் கலங்குகிறது என்ற இந்த திரியினை நான் இரு தினங்கள் முன்னராகவே தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் இரு நாட்கள் தாமதமானாலும் ஒரு மாமேதையின் இழப்பை நம் மன்றத்திலும் பதிவாக்க வேண்டியதன் தேவை கருதியதன் விளைவே இந்த திரி.
____________________________________________________________________________________________________________________________________________________________

உலகெங்குமிருக்கும் காமிக்ஸ் இரசிகர்களுக்கு கடந்த 10-03-2012 அன்று கறுப்பு தினமாகவே அமைந்திட்டது, ஆமாம் அவர்கள் தாம் பெரிதும் நேசித்திட்ட ஓவிய மாமேதை மோபியஸ் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் ஷான் ஜிராட் (Jean Giraud) தன் 73 வது வயதில் 10-03-2012 தான் அமரத்துவம் அடைந்திருந்தார்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு அருகே இருந்த Fontenay-sous-Bois என்ற இடத்தில் தன் இளம் பாரயத்தைக் கழித்த ஜிராட் தன் மூன்றாவது வயதிலேயே தன் தந்தையும் தாயும் பிரிந்திருந்த சோகமான சூழலில் தன் பாட்டன், பாட்டியுடனேயே வாழவேண்டியிருந்தது. தன் 12வது வயதிலேயே தூரிகையைத் தூக்கிய ஜிராட் அந்த வயதில் அமெரிக்க கெளபாய் வீரர்களையும் செவ்விந்திய வீரர்களையும் வரைந்தே தன் ஓவியத் திறமையை வளர்த்துள்ளார்.
தன் பதினாறாவது வயதில் ஓவிய பயிற்சிக் கல்லூரிக்கு சென்று அங்கே இரு வருடங்களைக் கழித்த பின்னர் தன் பதினெட்டாவது வயதில் தன் முதல் படைப்பை விளம்பர மற்றும் பேஷன் துறையில் வெளியிட்ட அதே வேளை அதே ஆண்டு தன் முதல் காமிக்ஸான பிராங்கும் ஜெரமையாவும் என்ற படைப்பை வெளியிட்டார். தொடர்ந்து சில காலம் பேஷன் டிசைனராகவே இருந்திட்ட ஜிராட் தன்னை முழுமையாக ஒரு படைப்பாளியாக காமிஸ் உலகில் உள்வாங்கிக் கொண்டார். அதே ஆண்டு தன் தாயாருடன் மெக்சிக்கோ நாட்டில் 8 மாதங்கள் தங்கியிருந்து விட்டு மீள வந்து தன் நாட்டிற்கான கட்டாய இராணுவ சேவையை அல்ஜீரியாவில் புரிந்து விட்ட பின்னர் தன் முழு நேரத்தையும் ஒரு காமிஸ் ஓவியராக செலவிட்டு வந்தார்.
அந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த ஜிஜே என்ற காமிஸ் ஓவியரிடம் உதவியாளராக தன்னை இணைத்துக் கொண்ட ஜிராட் அவருடன் இணைந்து புகழ் பெற்ற ஜெர்ரி ஸ்பிரிங் கெளபாய் தொடருக்கு ஜிஜே வரைந்த ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டுபவராக பணி புரிந்திருந்தார்.
இப்படியே ஜிராட்டின் ஓவிய வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் 1962ம் ஆண்டு ஷான் மைக்கேல் சார்ளியர் என்ற கதாசிரியருடன் இணைந்திட்ட ஜிராட் `ப்ளூ பெர்ரி` (Blue Berry) என்ற கெளபாய் தொடரின் ஓர் படைப்பாளியானார். ஜப்பான் மாங்கா காமிக்ஸ் உட்பட எத்தனையோ காமிஸ்களுக்கு ஓவியராக பணி புரிந்திருந்தாலும் Blue Berry என்ற இந்த கதாபாத்திரமே என்றைக்கும் மோபியஸ் என்ற ஷான் ஜிராட்டை அமரகதாபாத்திரமாகி உலக காமிக்ஸ் இரசிகர்களின் ஆராதிப்புக்கு உள்ளாகப் போகின்றதென்பதை அன்று ஜிராட் அறிந்திருந்தாரோ என்னவோ..??,
தமிழ் காமிக்ஸ் இரசிகர்களும் முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு எஸ். விஜயன் மூலமாக கேப்டன் டைகர் என்ற பெயரில் Blue Berry காமிக்ஸ்களை வாசிக்கும் பாக்கியத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. Blue Berry யின் முதல் தமிழாக்கம் பெற்ற காமிக்ஸ் முத்து காமிக்ஸில் இரண்டு பாகமாக வந்த `தங்க கல்லறை` என்ற படைப்பாகும். இது தமிழில் வெளியான காலத்தில் அமோக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ பெர்ரி காமிக்ஸின் Fort Navajo தொடரின் முதல் நான்கு பாகங்களிலுமிருந்த ஓவியங்கள் பெரும்பாலும் அந்த கால கட்டத்திலிருந்த ஒற்றை வரி ஓவிய முறையைத் தழுவியதாகவும் அத்துடன் ஓவியர் ஜிஜேயின் பாணியினை கொண்டதாகவுமே இருந்தது. இதற்கு நல்ல உதாரணம் ஒரு தடவை ஜிராட் அமேரிக்கா சென்ற பொழுது Fort Navajo தொடரின் நான்காம் பாகமான The Lost Rider காமிக்ஸின் சில பக்கங்களை ஓவியர் ஜிஜேயே வரைந்து கொடுத்திருந்தார்.
(ஓவியர் Jijé வரைந்து கொடுத்த The Lost Rider காமிக்ஸின் ஒரு பக்கம்)
தன் காமிக்ஸ் படைப்புக்களில் ஆரம்பத்தில் ஓவியர் ஜிஜேயின் பாதிப்பினை ஜிராட் கொண்டிருந்தாலும் தன் Lieutenant Blue Berry தொடரின் Fort Navajo கதையின் ஐந்தாம் பாகமான `The Trail of the Navajos` காமிக்ஸில் முற்று முழுதாக தன் பாணியினைக் கொண்டு வந்திருந்தார், அதாவது கொஞ்சம் இருட்டான கொஞ்சம் வெளிச்சமான ஓவியங்களைக் கொண்ட புதிய பாணி. இந்த புதிய பாணி காமிக்ஸ் இரசிகர்களை கொள்ளை கொள்ள காமிக்ஸ் உலகில் ஜிராட் ஒரு மாமேதையாக உருவெடுத்தார்.
`The Trail of the Navajos` காமிக்ஸுக்கு ஜிராட் வரைந்த ஓவியங்களில் ஒரு பக்கம்
அதுவரை கிட்டதட்ட காட்டு மிராண்டிகளாக காமிக்ஸ்களில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த செவ்விந்தியர்களின் வீரம், அவர்கள் பக்க நியாயங்கள் என இன்ன பிற வேறு ஓவியர்கள் சொல்லாத தளங்களை தன் ஓவியங்களால் உணர்த்தியது ஜிராட் என்றால் மிகையில்லை. காமிக்ஸ் என்றால் சிறு பிள்ளைகளின் சமாச்சாரம் என்ற கொள்கையையும் உடைத்தெறிந்தது ஜிராட்டின் தூரிகை.
மிகவும் நுட்பமாக கதைக் களங்களின் பின்னணியை தெளிவாக வரைந்து வாசகர்களை அந்த பிரதேசத்துக்கே அழைத்து செல்வதில் ஜிராட் கைதேர்தவராக இருந்தார். ஜிராட் வரைந்த ஓவியங்களை ஓவியங்களின் ஒரு மூலையில் இருக்கும் 'GIR' அல்லது MOEBIUS என்ற ஜிராட்டின் கையொப்பத்தைக் கொண்டு இனம் காணலாம்.
Lieutenant Blue Berry யின் The Ghost Tribe காமிக்ஸில் இருந்து ஒரு பக்கம்.
Marshall Blue Berry தொடரின் FRONTERA SANGRIENTA காமிக்ஸில் இருந்து ஒரு பக்கம்.
ப்ளு பெர்ரி தொடர், Lieutenant Blue Berry, Marshall Blue Berry, Young Blue Berry, Mister Blue Berry என பல தொடர்களாக வந்து கிட்டத்தட்ட 48 பாகங்களாக இதுவரை வந்துள்ளது, இதில் 20 பாகங்களாக வந்திட்ட Young Blue Berry தொடரில் முதலிரண்டு பாகங்களுக்கு மாத்திரமே ஜிராட் ஓவியம் வரைந்திருந்தார். Lieutenant Blue Berry, Marshall Blue Berry மற்றும் Mister Blue Berry தொடர்களில் Marshall Blue Berry தொடர் தவிர மீதமானவற்றுக்கு ஜிராட்டே ஓவியம் வரைந்திருந்தார்.
Marshall Blue Berry தொடரின் மூன்று பாகங்களுக்கும் ஜிராட்டே கதாசிரியராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் Marshall Blue Berry தொடரின் முதலிரு பாகங்களையும் XIII (இரத்தப்படலம்) புகழ் ஓவியர் வில்லியம் வான்ஸ் வரைந்திருந்தார். அதற்கு நன்றிக் கடனாகவோ என்னவோ, புகழ் பெற்ற XIII தொடரின் 18 வது பாகமான Die Kelly Brian Story க்கு ஜிராட் ஓவியங்களை வரைந்திருந்தார்.
XIII தொடரில் ஜிராட்டின் கைவண்ணத்தில் இருந்து ஒரு பக்கம்.
வில்லியம் வான்ஸ் வரைந்த Marshall Blueberry இன் அட்டைப்படம்.
ப்ளூ பெர்ரி, இரத்த படலம் தவிர Inside Moebius என்ற பெயரில் தன்னையே ஒரு காமிக்ஸ் கதா பாத்திரமாக கொண்ட காமிக்ஸ் படைப்பு ஒன்றையும் ஜிராட் உருவாக்கியிருந்தார். பல காமிக்ஸ் படைப்புக்களை உருவாக்கியிருந்தாலும் அவர் உருவாக்கிய Blue Berry கதாபாத்திரம் ஒன்றே போதும் அவரை காலமெல்லாம் காமிக்ஸ் இரசிகர்களிடையே வாழ வைக்க என்பது உறுதி.
நீண்ட காலம் புற்று நோயுடன் போராடி இறுதியில் மீளாத் துயிலில் ஆழ்ந்திட்ட மோபியஸ் என்ற ஷான் ஜிராட்டின் இழப்பினால் தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு மன்றம் சார்பாக என் அனுதாபங்கள்.
ஜிராட்..!!!, உங்கள் ஓவியங்கள் என்றென்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டேயிருக்கும் - அச்சு அசலாக நீங்களாகவே...!!

ப்ளூ பெர்ரி தொடருக்கு ஜிராட் வரைந்த சில ஓவியங்கள்..!!

ப்ளூ பெர்ரி தொடர் அல்லாத காமிக்ஸ்களுக்கு ஜிராட் வரைந்த சில ஓவியங்கள்..!!

ஓவியர் ஷான் ஜிராட் ப்ளூ பெர்ரி கதாபாத்திரத்தை வரையும் பொழுது எடுத்த காணொளிகள்

(08/05/1938 - 10/03/2012)

[media]http://www.youtube.com/watch?v=31eMG8MoXD8[/media]
[media]http://www.youtube.com/watch?v=ATVLu01ikEQ[/media]