சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

  • ஓய்வு பெறலாம்

    Votes: 12 57.1%
  • இப்போதைக்கு வேண்டாம்

    Votes: 8 38.1%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

    Votes: 1 4.8%

  • Total voters
    21

ஆதவா

New member
நான் கிரிக்கெட் தெரிந்து கொண்ட நாட்களில் எனக்கு முதலில் தெரிந்த பெயர் “சச்சின் டெண்டுல்கர்”.. அவர் வந்து ஆடினால் அந்த நாள் இந்தியாவுக்கானது என்பது சின்னவயதிலிருந்தே எல்லாருடைய மனதிலும் பதிந்து போன விஷயம். இந்தியாவைப் பொறுத்தவரையிலும் “ஹீரோ” அந்தஸ்து உள்ள எவரையும் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம். அதைப் போலவே சச்சினை தனது மானசீக ஹீரோ எனும் அந்தஸ்தில் தூக்கி ஆடாதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம். இவருக்கு நாடுகடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிநாட்டு போட்டிகளின்போது காணமுடியும். மற்ற வீரர்களுக்கு இப்படியில்லை.

சரி... அப்படியென்ன சச்சின் கிழித்துவிட்டார் என்று கேட்பவர்களும் உண்டு. இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து சச்சின் பற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் “தனக்காக ஆடினாரா. அணிக்காக ஆடினாரா” போன்ற பட்டிமன்றங்களும் இவர்களால் எழுப்பக் கூடும். அவர்கள் சொல்வது என்னவெனில்

1. இவர் ஒரு மேட்ச் வின்னர் கிடையாது
2. 90 களின் போது நடுங்குகிறார்.
3. தனது சதத்திற்காக ஆடுவதால் இவருக்கு பொதுநலம் கிடையாது.
4. இளம் வீரர்களுக்கு வழிவிடாமல் அணியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்
5. இவரால் வாய்ப்பிழந்த வீரர்கள் அதிகம்

போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகள்!!

ஒவ்வொரு முறையும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் சச்சின் ஒரு சதத்தின் மூலமாகவே பதில் தருகிறார்.. ஆனால் அந்த சதமும் இப்போது அடிக்க முடியாமல் திணருகிறார் என்பதையே இன்னொரு குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்... அதற்குக் காரணம் அவருக்கு வயது 38 முடிந்து 39 பிறக்கப் போகிறது என்பது மட்டும்தான்!!!!

என்ன ஆச்சு சச்சினுக்கு??

இக்கால பிராட்மன், கிரிக்கெட்டின் கடவுள், பிதாமகன், நந்தா, அவன் இவன் வரை இவர்தான் என்றாலும் இன்றைக்கு பெரிதாக பேசப்படும் விஷயம் “சச்சின் ஓய்வு பெற சரியான தருணம் இதுதான்” என்பதுதான். நாடு கடந்தும் ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஒரு வீரர். ஏராளமான சாதனைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு ஆளுமை, வயதின் காரணமாக ஓய்வு பெற இது சரியான நேரமா? அவ்வளவு மோசமாக ஆடிக் கொண்டிருக்கிறாரா?? சில புள்ளிவிபரங்கள் பார்த்தபிறகு விவாதத்திற்குச் செல்லுவோம்..

சச்சினின் கடந்த ஒருவருடம் - டெஸ்ட்

11 மேட்ச், - 21 இன்னிங்ஸ் - 778 ரன்கள் - 37.04 ஆவ் - 6 அரைசதம்

:ஒருநாள்:

12 மேட்ச் - 547 ரன்கள் - 45.52 ஆவ் - 2 சதம் - 2 அரைசதம்

12 மார்ச் 2011க்குப் பிறகு ஒரு சதமும் அடிக்கவில்லை என்பதைவிட அவரது கெரியரிலேயே சதமடிக்க ஆரம்பித்த பிறகு இவ்வளவு பெரிய இடைவெளி இல்லை என்பதுதான் உண்மை...

சச்சினுக்கு ஃபார்ம் போய்விட்டதா?. கண் மங்கிவிட்டதா? பழைய சச்சின் இனி அவ்வளவுதானா?

கிட்டத்தட்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த சச்சின் இந்த சிபி சீரிஸில் பங்கெடுப்பதும், அதற்கு சுழற்சி முறையில் அணித்தேர்வும் “சச்சினது சதத்திற்காக” என்கிறார்கள்... அது எவ்வளவு தூரம் உண்மை?

விவாதிக்கலாமே?
 
நேற்று கூட இதை பற்றி ஒரு டிவியில் நேரடி ஒளிபரப்பில் விவாதித்து கொண்டிருந்தார்கள் அதில் ஒருத்தர் அடுத்த உலக கோப்பை வரை கூட ஆடும் மன திடம் சச்சினிடம் இருப்பதாக சொன்னார் இருந்து விட்டு போகட்டுமே யார் வேண்டாம் என்று சொன்னது!

ஆனால் சாதிக்க துடிக்கும் எத்தனையோ இளம் வீரர்கள் இருக்கும்போது அவராகவே ஓய்வை அறிவித்து விட்டால் நல்லது தானே !

எனக்கு தெரிந்து உல கோப்பையை கைப்பற்றிய போதே சச்சின் ஓய்வை அறிவித்து இருக்க வேண்டும் அதை விட ஒரு இனிய தருணம் இனி அவருக்கு கிடைக்குமா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
 
நேற்று கூட இதை பற்றி ஒரு டிவியில் நேரடி ஒளிபரப்பில் விவாதித்து கொண்டிருந்தார்கள் அதில் ஒருத்தர் அடுத்த உலக கோப்பை வரை கூட ஆடும் மன திடம் சச்சினிடம் இருப்பதாக சொன்னார் இருந்து விட்டு போகட்டுமே யார் வேண்டாம் என்று சொன்னது!

ஆனால் சாதிக்க துடிக்கும் எத்தனையோ இளம் வீரர்கள் இருக்கும்போது அவராகவே ஓய்வை அறிவித்து விட்டால் நல்லது தானே !

எனக்கு தெரிந்து உல கோப்பையை கைப்பற்றிய போதே சச்சின் ஓய்வை அறிவித்து இருக்க வேண்டும் அதை விட ஒரு இனிய தருணம் இனி அவருக்கு கிடைக்குமா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

அருண்,
உங்களது கோரிக்கை நியாயமானதே, ஆனால் பொதுவாக சொல்லாமல் ஏன் நீக்கப்பட வேண்டும், அவர் இருந்து என்ன பிரயோசனம் அல்லது இல்லாமல் போனால் என்ன நட்டம் என்பதையும் விளக்கலாமே?

அணியில் அப்படி புதிய வீரர்களுக்கு தரப்படும் வாய்ப்பு எப்படி இருக்கிறது?
மனோஜ் திவாரி கடைசி போட்டியில் சதமடித்திருந்தார்.. ரஹானே சிறப்பாக ஆடினார்... இவர்கள் இருவரைப் பற்றியும் எந்த கவலையுமின்றி அணி ஆடிக்கொண்டிருக்கிறதே??
 
ஆதவா

அதற்கெல்லாம் காரனம் முழுக்க முழுக்க வயது மட்டுமே சச்சினால் முன்பு போல விளையாட முடிவதில்லை என்பதை நாம் ஒத்து கொண்டு தான் ஆக வேண்டும் அவர் எவ்வளவோ சாதனைகள் செய்து விட்டார் எனக்கு தெரிந்து சச்சினின் சாதனைகள் முறியடிக்கப்பட பல வருடங்கள் ஆகலாம் அவர் ஓய்வு பெற்றால் கண்டிப்பாக ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்

நமது கிரிக்கெட் வாரியம் விசித்திரமானது யாருக்கு எதற்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று நம்மால் சத்தியமாக சொல்ல முடியாது

அதே மாதிரி எந்த வீரருக்கும் இன்னொருவர் மாற்று என சொல்ல முடியாது அதற்கு உதாரணம் :

கபிலுக்கு மாற்று யார் என்பதை நம்மால் சொல்ல முடியுமா?

கும்ப்ளேக்கு மாற்று யார் என்பதை நம்மால் சொல்ல முடியுமா?

நட்டம் என்று எதுவும் இல்லை எனக்கு தெரிந்து சச்சின் ஓய்வு பெறுவதால் பெரிதான பாதிப்பு அணிக்கு இருக்க வாய்ப்பில்லை
 
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=378484&postcount=10

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=437470&postcount=417


இன்னிக்கு நேத்தா இந்தக் கேள்வி எழுந்தது? 2008 ல் கூட இதே கேள்வி எழுப்பப்பட்டு இருக்கு. அதன் பின்னால் சச்சின் 200 அடிச்சார். 50 ஆவது டெஸ்ட் சதம் அடிச்சார். உலகக் கோப்பையில் கூட ஒழுங்கா ஆடினார். ஐபிஎல் கூட ஒழுங்கா ஆடினார்.

1. மேட்ச் வின்னர் கிடையாது.

மேட்ச் வின்னர்கள் மட்டும்தான் அணியில் இருக்க வேண்டுமா? இதென்ன கதை. அந்த மேட்ச் வின்னர்களில் எத்தனை பேர் சில மேட்ச் அதிசயங்கள் என்பது பலருக்கும் தெரியும். உலகில் மொத்தமாகவே ஒரு 10 மேட்ச் வின்னர்கள் இப்பொழுது கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கக் கூடும். அதுதான் நிதர்சனமான உண்மை.

2. 90 களின் போது நடுங்குகிறார்.

90 வயசானா எல்லாருக்கும் தானே உடம்பு நடுங்க ஆரம்பிச்சிரும். ஓ நீங்க வயசைச் சொல்லலியா?

இப்போ 2011 ங்க,, 90 களில்தான் டெண்டுல்கர் பெரிய சக்தி. ஓ நீங்க வருஷத்தையும் சொல்லலியா?

90 அடிக்கறதே பெரிய விஷயம்னு ஆட்டக்காரர்களுக்கு நல்லாத் தெரியும். பேச்சாளர்களுக்குத் தெரியறது தான் கஷ்டம்.

3. தனது சதத்திற்கு ஆடுவதால் இவருக்கு பொதுநலம் கிடையாது.

அப்ப இந்திய கிரிக்கெட் அணியில் அரசியல் வாதிகள் மட்டுமே இருப்பாங்க தெரியுமா?

சதமடிக்கலைன்னு முதல் மூணு கேள்வில கேட்டுட்டு இப்ப சதமடிக்க முயற்சிக்கிறார் என முன்னுக்குப் பின் முரணா பேசறீங்களேஇது உங்களுக்கே ஞாயமா? இதையெல்லாம் யாரும் கேட்கமாட்டங்கன்னு நினைப்பா?

4. இளம் வீரர்களுக்கு வழிவிடாமல் அணியில் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்.

இன்னும் சௌரவ் கங்கூலிக்கே ஒரு ரீப்ளேஷ்மெண்ட் கிடைக்கலை. இதில லக்ஷ்மண் ஓய்வு பெற்று இருக்கார், அதுக்கும் யாரும் தயாராகலை. அடுத்து இராகுல் திராவிட் மற்றும் டெண்டுல்கர். வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும் என்று வலிமையான காரணங்களோட காத்திருப்போர் பட்டியலைப் பார்த்தால் புரியும். அடுத்த வாரிசு தலையெடுக்க தயாராக இருந்தால் ரிடையராக சந்தோசமாக யோசிக்கலாம். வாய்ப்புத் தந்தால்தான் வளருவேன் என்பது வீரருக்கு அழகல்ல. இந்த மொத்த குழப்பத்திற்கும் காரணம் பி.சி.சி.ஐ தான். இதில் எந்த வீரரையும் குற்றம் சொல்ல முடியாது.

இவரால் வாய் பிளந்தவர்கள்தான் அதிகம். வாய்ப்பிழந்தவர்கள் குறைவுதான். சொல்லப் போனால் மும்பை இந்தியன் அணியின் இளம் வீரர்களுக்கு இவருடன் விளையாடும்பொழுது இருந்த வேகம் வேறு அணிக்கு அவர்கள் மாறினால் வருவதில்லை. சச்சினால் வாய்ப்பிழந்தவர்கள் பட்டியலை வெளியிட்டால் நலம்.

சச்சினுக்கு இப்போது தேவை ஒரு சின்ன மோடிவேஷன். இது போன்ற டி மோட்டிவேஷன்கள் அல்ல. அவர் தானாகவே ஓய்வு பெற்றுவிடுவார்.

சரியா சொல்லுங்க.. சச்சின் "ஆடிகிட்டு" இருக்காரா? இல்லையா???
 
அட்டகாசமா சொல்லியிருக்கீங்க, 2008 மற்றும் 2009 ல் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இப்போது 2012 மீண்டும்.

நான் கேட்ட கேள்விகள் (ஆக்சுவலி நான் கேட்கலை!!) மற்றும் உங்கள் பதில்கள் வைத்து... (சேம் சைடு ஆடுவென், யாரும் சந்தேகப்படக்கூடாது ஆமாம்.)

மேட்ச் வின்னர் மட்டும்தான் அணியில் இருக்கவேண்டுமா?

அப்படியில்லை, சச்சின் நிறைய போட்டிகளில் குறிப்பாக முக்கிய போட்டிகளில் ஆடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. பொதுவாக மேட்ச் வின்னர் என்றாலே எனக்கு ஞாபகம் வருவது 6 ஆம், 7 ஆம் நிலை பேட்ஸ்மென்கள்.. தற்போது அணியில் தோணியைப் போல. உ.கோப்பையிலும் சரி, தற்போது முடிந்த கடைசி இரண்டு போட்டிகளிலும் சரி அவர் இறுதி வரையிலும் ’இருந்தார்’. நிறைய உதாரணங்களும் உண்டு. ஆனால் சச்சின் ஒரு ஓபனர் என்பதால் மேட்ச் வின்னருக்கான இடத்தில் நின்று அடித்துத் தரமுடியாது. இது ஒரு காட்சிப்பிழை மாதிரி. அவரோட பங்கு முடிந்து, கடைசியாக சிக்ஸ் அடித்து பேட்டைச் சுழற்றுபவனை மேட்ச் வின்னர் என்கிறோம். இருந்தாலும்..... சச்சினால் நிறைய நேரங்களில் நின்று ஆடித்தர முடியவில்லை, எல்லா நேரங்களிலும் ஆடமுடியாதுதான்... ஆனால் இக்கட்டான சூழ்நிலை வரும்போது... உதாரணத்திற்கு 2003 உ.கோ இறுதிப்போட்டி!!

2. 90 ரன்களைக் கடக்கும் போது சச்சினைத் தவிர மற்ற வீரர்கள் எப்போதும் போலவே ஆடுகிறார்கள், ஆனால் சச்சின் “தடவுகிறார்” இதை நானே சில போட்டிகளில் பார்த்திருக்கிறேன். நெர்வ்ஸ் நைட்டீஸ் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதேசமயம் சமீபகாலமாக அப்படியொன்றும் பார்க்கவில்லை என்றாலும் 90 களில் ஓரிரு முறை அவுட் ஆகியிருக்கிறார்.. (சச்சினுக்கு அது சாதாரணம், ரசிகனுக்கு? ) இதே சேவக்காக இருந்தால் 94 ல் இருக்கும்போது ஒரு “சிக்ஸ்” கண்டிப்பாக இருக்கும்.. (ரசிகன் சிக்ஸுக்கு ஆசைப்படுகிறான்) அது ஏன் ஒரு “ஜாம்பவானால்” முடிவதில்லை?

3. இந்த குற்றச்சாட்டும் மேலோட்டமாகப் பார்க்கப் படுவதுதான். தனிமனித சாதனைகள் ஏறிக்கொண்டேயிருப்பதால் சதத்திற்காக ஆடுகிறார் என்பது... அந்த சதம் அணியைக் காப்பாற்றுகிறது என்பது அறியாமல். அதேசமயம், நாளைக்கு 100 வது சதம் அடித்தாலும் அதில் அணிக்கு எந்தவொரு சிறப்பையும் தரப்போவதில்லை.

4. ரஹானே, டிவாரி, ஜாஃபர் போன்ற ஒரு சிலரைக் குறிப்பிடலாம். ஆனால் இவரால் வாய்ப்பிழந்தவர்கள் என்று ஆணித்தரமாக சொல்லமுடியாது. இவர் இல்லாமல் போனால் அந்த இடத்தில் இவர்கள் வரலாம். அடுத்த உலகக்கோப்பைக்கு சச்சின் ஆடுவாரோ மாட்டாரோ, ஆடாமல் போனால் அந்த இடத்தில் ஒரு நல்ல ஓபனரைத் தயாராக வைத்திருக்க வேண்டும் அல்லவா? அதற்கேனும் சச்சின் ஓய்வு பெறலாம் என்று சொல்லப்படுகிறது. (நாளையை “சாம்பியன்” அணியைப் பற்றிய இன்றைய பகல் கனவு)
 
1 .உதாரணமான 2003 உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிக ரன் குவித்தவர் யார்?

SR Tendulkar (India) 11 போட்டிகள் 673 ரன்கள் 152 அதிகபட்ச ஸ்கோர் 61.18 சராசரி 1 -சதம் 6 = அரைசதம் 75 - பவுண்டரி 4 - சிக்ஸ்
ICC World Cup (in Kenya/South Africa/Zimbabwe), 2002/03

என்னைக்கும் குடுக்கிற மூதேவி - இன்னிக்கு குடுக்கலை
என்னைக்காவது தருகிற ஸ்ரீதேவி - இன்னிக்கு தந்தா என்கிற பழமொழி மாதிரி இருக்கு உங்க குற்றச் சாட்டு. அதில அவரு சீரிஸ் வின்னருங்க. மேட்ச் வின்னருக்கும் மேல.

2. தொண்ணூறு ரன் அடிச்சாதான் தொண்ணூறில் தடவவே முடியும். ஒரு நாள் போட்டிகளுக்கு 50+ அடிச்சா கூட சச்சினை நீக்க வேண்டிய அவசியமில்லை. சச்சினின் ஆவரேஜ்களை மட்டுமே பார்க்கக் கூடாது. மத்தவங்க ஆவரேஜையும் பார்க்கணும். CB சீரிஸில் ஏன் சச்சினை ஆட கேட்டிருக்கிறார்கள் என்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. . முதலாவது நீண்ட சீரிஸ் என்பதால் சச்சினுக்கு சதம் அடிக்கும் ஃபார்ம் கிடைக்கலாம். 2. ஓபனர்கள் சேவாக் அல்லது கம்பீர் இருவரில் ஒருத்தருக்கு அடிபட்டாலும் மாற்று துவக்க ஆட்டக்காரர் இல்லை.


டெஸ்ட் மேட்சுகளில் டெண்டுல்கள் 2 ஆவது இடத்தில் இருக்கிறார்.

http://stats.espncricinfo.com/ci/en...average.html?class=1;id=2011;team=6;type=year

Highest averages Player Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 0 4s 6s
R Dravid 12 23 3 1145 146* 57.25 2559 44.74 5 4 0 124 3
SR Tendulkar 9 17 1 756 146 47.25 1466 51.56 1 5 0 94 5
VVS Laxman 12 23 4 773 176* 40.68 1506 51.32 1 6 1 85 0
R Ashwin 4 6 1 182 103 36.40 233 78.11 1 0 1 23 3
G Gambhir 8 15 0 470 93 31.33 1058 44.42 0 4 0 63 0
A Mishra 3 6 0 187 84 31.16 332 56.32 0 1 0 25 1
V Sehwag 7 13 0 384 67 29.53 479 80.16 0 4 2 53 3
Yuvraj Singh 3 5 0 136 62 27.20 261 52.10 0 1 0 20 2
MS Dhoni 12 21 2 511 144 26.89 880 58.06 1 3 4 47 10
SK Raina 7 14 1 337 82 25.92 676 49.85 0 4 3 43 0
V Kohli 5 9 0 202 63 22.44 473 42.70 0 2 2 15 2

ஒரு நாள் போட்டிகளில் 6 வது இடத்தில்

http://stats.espncricinfo.com/ci/en...average.html?class=2;id=2011;team=6;type=year

Highest averages Player Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 0 4s 6s
MS Dhoni 24 22 9 764 91* 58.76 850 89.88 0 6 0 59 14
RG Sharma 16 16 5 611 95 55.54 739 82.67 0 6 0 40 9
V Sehwag 12 12 0 645 219 53.75 524 123.09 2 1 2 80 14
Yuvraj Singh 14 13 4 453 113 50.33 553 81.91 1 5 1 48 4
V Kohli 34 34 5 1381 117 47.62 1614 85.56 4 8 2 127 7
SR Tendulkar 11 11 0 513 120 46.63 579 88.60 2 2 0 54 8
MK Tiwary 5 5 1 163 104* 40.75 202 80.69 1 0 0 16 2
G Gambhir 19 19 1 720 97 40.00 827 87.06 0 7 1 74 1
RA Jadeja 13 10 3 220 78 31.42 253 86.95 0 1 1 21 2
SK Raina 29 27 4 722 84 31.39 725 99.58 0 4 3 62 14
AM Rahane 11 11 0 340 91 30.90 453 75.05 0 2 2 33 3


3. சச்சின் நூறாவது சதம் அடித்தால் அதை வைத்து எவ்வளவு விளம்பரம் செய்யலாம்? அதனால் இந்தியாவில் கிரிக்கெட் எப்படி ஆட்டம் போடும்? அதனால் பி.சி.சி.ஐ எவ்வளவு சம்பாதிக்கும் என்பதை யோசிச்சு கூட பார்க்கமாட்டேங்கறீங்க. அணி என்பது 16 பேர் அதுவும் ஒரு போட்டிக்கு. அதை விட இது எம்பூட்டு பெரிசு?

4. ஜாஃபர் ஏற்கனவே டக் அவுட் ஆயி பெவிலியனுக்குத் திரும்பியாச்சி. ரஹானே துவக்க ஆட்டக்காரர். பரீட்சித்து பார்க்கலாம். மனோஜ் திவாரி இடைநிலை ஆட்டக்காரர். அதனால் சச்சினுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. ஆக பல இளைஞர்கள் என்ற கூற்று மிகவுமே தவறு. ரஹானேவுக்கு இடம் கிடைக்கணும்னா கம்பீர் - சேவாக் இருவரில் ஒருத்தரை உட்கார வைக்கணும். ஆக டெண்டுல்கரின் இடம் மட்டுமே அதற்குக் காரணமல்ல. டெண்டுல்கர் - கங்கூலி ஜோடிக்கு பதிலாக சேவாக் - கம்பீர் ஜோடியை 2007 ல் இருந்தே வளர்த்தாச்சி. அதனால் இந்தக் குற்றச் சாற்றில் மணமில்லை, குணமில்லை, ருசியுமில்லை. டெண்டுல்கர் எப்பவாவதுதான் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படுகிறார். அதை யோசிக்கவே மாட்டேங்கறீங்களே..

முரளி விஜய், அபினவ் முகுந்த், சிகார் தவான் இவர்களும் பரீட்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவங்க பேர் கூட உங்களுக்குத் தோணலை பார்த்தீங்களா?

நல்ல ஆட்டக்காரர்களை எப்படி தயாரிப்பது என்பது பி.சி.சி,ஐ க்குத் தெரியுமோ தெரியாதோ. ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. NCA அப்படின்னு ஒண்ணை உருவாக்கி ஒரு பொம்மையை மட்டும் உட்கார வச்சிட்டா போதுமா? அதன் மூலமா இந்திய அணியில் நுழைந்தவர் யார்? யார்ன்னு யோசிச்சா மண்டைதான் வலிக்குது. தனி மனிதன் அவனுடைய சுய முயற்சியால் முன்னேறி இந்திய அணியில் இடம் பிடிச்சு சாதிச்சாத்தான் உண்டு என்கிற நிலையில் சச்சின் (மூத்த வீரர்கள்) ஓய்வு பெற்றால் இந்திய இளைஞர் அணி உருப்பட்டு விடும் என்பது கனவுதான். சச்சின் ஓய்வு பெற்றால் சச்சினுக்கு பெருமை குறையாமல் இருக்கும் அவ்வள்வுதானே தவிர மற்றபடி அணிக்கோ அல்லது இளைஞர்களுக்கோ வேறு எதோதோ சொல்கிறீர்களே அவர்களுக்கோ ஒண்ணும் பிரயோசனம் இல்லீங்கோ...
 
பாண்டிங் வெகு அருகில் வந்தவுடன் சச்சினின் ஆட்டம் மீண்டும் அருமையாக இருந்தது அதுக்குக் காரணம் பாண்டிங் எங்கே தன் ரெக்கார்டை முறித்துவிடுவாரோ என்ற பயமாக இருந்திருக்கலாம் என்று நான் சொன்னேன். அதே மாதிரி பாண்டிங்கின் ஆட்டம் கொஞ்சம் குறைந்தவுடன் சச்சினின் ஆட்டமும் குறைந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது.

சச்சின் மறுபடியும் அடிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது, காரணம் டெஸ்ட் தொடரில் மறுபடியும் பாண்டிங் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார்.

சச்சின் தன் இலக்கை எட்டும் வரை இன்னும் ஆடிக்கொண்டிருப்பார் என்றே நான் நினைக்கிறேன். அந்த இலக்கு 100 செஞ்சரி என்பது தவறானது.
 
சச்சின் ஓய்வு பெறுவதை சச்சின் தான் தீர்மானிக்கணும், அது ஒரு பக்கத்தில் இருக்க ்இந்திய கிரிக்கட் அணியினை ஒரு சுழற்சி முறையில் வீரர்களை உள்வாங்கும் அணியாக மாற்றிப் பார்ப்பதில், சம்மந்தப்பட்டவர்கள் ஏன் தயக்கம காட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை....

அவுஸ்திரேலியாவில் ஹாடின் போனால், வேட் வந்து அசத்துகிறார்...

கிளார்க் விளையாடாவிட்டால், ஃபாரஸ்ட் கலக்குகிறார்.....

இந்த நிலை இந்திய அணியில் ஏன் இல்லைனு சிந்தித்துப் பார்க்கணும்...

தான் விளையாடிய முந்தைய ஒரு நாள் போட்டியில் சதமடித்த திவாரி, இந்திய அணி மத்திய வரிசையில் சொதப்பிக் கொண்டிருக்க, சொதப்பி விளையாடுபவர்களுக்கு குளிர்(!) பானம் பரிமாற மட்டும் மைதானத்துக்கு வந்து போகிறார்....!! :sauer028:
 
1. அதிக ரன் குவித்தவர்களை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் அடிப்பதே நாட்டுக்கு நல்லது இல்லையா? சச்சின் பெரும்பாலும் முக்கியமான கட்டத்தில் ஆடாமல் இருந்திருக்கிறார்/ குறிப்பாக உலகக்கோப்பைகளில் (!) உ.கோவில் நிறைய ரன்கள் அடித்த சாதனை மட்டும்தான் சச்சினுடையது. 2003க்கு இறூதி வரையிலும் “இழுத்துச்” சென்றார் என்பதை அடித்துச் சொல்லலாம். ஆனால் ஒரு முக்கியமான இறுதி போட்டியில் அவர் சோபிக்கவில்லை... இதே நிலைமைதான் 99ல் சூப்பர் எட்டில் ஆஸிக்கு எதிராகவும்.. 2011 இறுதிப் போட்டியிலும்... ஒரு மனிதன் எல்லா மேட்சுகளிலும் ஆடவேண்டும் என்பதில்லை, முக்கியமான நேரத்தில் கைகொடுக்க வேண்டும் அல்லவா? கூடவே இருப்பவனெல்லாம் நண்பனல்ல, உடுக்கை இழந்தவன் கைபோல இருப்பவனே நட்பு இல்லையா?

2. சச்சினுக்கு சதமடிக்கும் ஃபார்ம் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் அணியில் “குளறுபடி” செய்வது அணியின் எதிர்காலத்திற்கு நன்றாக இருப்பதாகத் தெரியவில்லையே...

3. பிசிசிஐ சம்பாரிச்சதை வெச்சே ஒண்ணும் செய்யலை... இனி இவரை ஆடவிட்டு சம்பாதித்து ஏதாவது “செய்யும்” என்று எதிர்பார்ப்பதெல்லாம்..... ஒரு பத்திரிக்கையில் பிசிசிஐ நிர்வாகியிடம் “ஆஸ்திரேலியாவில் அடிமேல் அடிவாங்குகிறதே நம் இந்திய அணி?” என்ற கேள்விக்கு அவர் கூலாக “ அவர்கள் இங்கே வந்தால் நாம் திருப்பி அடிப்போம்” என்கிறார்.. அதாவது வெளியூரில் நாங்கள் அப்படித்தான், எந்த முன்னேற்றமும் செய்யமாட்டோம் என்கிறது பிசிசிஐ!!

4. டெண்டுல்கர் தானாகவே ஒருநாள் போட்டியில் ஆடுவதைக் குறைத்துக் கொண்டார் என்று தெரிகிறது. ஒருநாள் போட்டிகளில் அவர் போதுமான சாதனைகளைச் செய்துவிட்டார். ( ஒன்றை மட்டுமே சேவக் முறியடித்திருக்கிறார்.. ) அநேகமாக நமது அடுத்த டெஸ்ட் சீரியஸ் துவங்க ஐந்தாறு மாதங்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன். அதற்குள் அவசரமாக சதமெடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பு இருக்கிறதோ என்னவொ?

எப்படியோ, ஒருநாள் சச்சின் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்று தோணுகிறது. எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நூறாவது சதம் அடித்துவிடுவார் என்பது ஐயமில்லை, இருப்பினும் அவரது வயது ஒரு முக்கிய காரணமாக இருப்பதில் மாற்று கருத்தில்லை...

ஆரென் அண்ணா...

நானும் அப்படியே நினைத்தேன். நீங்கள் முன்பே இதைச் சொன்னீர்கள்.. ஆனால் பாண்டிங் ஒன்றும் சச்சினுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியவரில்லை, நான் நினைக்கிறேன். காலீஸ்தான் இப்போதைக்கு சச்சினை நெருங்கக்கூடிய ஆள். தவிர சச்சினை விடவும் காலீஸ் டெஸ்டில் ஒரு பிரமாதமான வீரர்!! (இதுபற்றி மக்கள் என்ன நினைக்கிறீர்கள்?)

ஓவியன்... என் நினைவுக்கு..... க்ளார்க் அறிமுகமான நாட்களில் அவரை வளர்த்துவிட்டதே நம்மாட்கள்தான்.. இப்பொழுது வேட், ஃபாரஸ்ட் (காட்டுப்பூச்சி?) மட்டுமல்ல, சில வேகப்பந்து வீச்சாளர்களும் வளர்கிறார்கள்.

திவாரிக்கு மகமாரிதான் அருள் புரியணும்!! :)
 
அதுசரி இந்த விவாதம் ஏன் இப்போது???? டோனி ஓய்வு பெறலாமா இல்லையா அல்லது ஜடேஜா ஓய்வுபெறலாமா இல்லையா என்று தலைப்பு ஏன் வரவில்லை. (இரண்டுபேருமே 2 மில்லியன் ற்று மேலே சென்றவர்கள்.. :D)
 
Why This Kolaveri

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சொதப்புவதற்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் போதாது. இதுதான் இந்தியஅணி சொதப்புவதற்கு காரணம். சச்சின் ஒருவரை ஒதுக்கவிட்டு பாருங்கள் ஏன் மற்றவர்கள் சோபிக்கவில்லை? அப்படிப் பார்த்தால் ரெய்னா நீண்டநாட்களாக சரியாக ஆடவில்லை. ஏன் உங்களுக்கு அவர்மேல் கொலவெறியில்லை?

சாதனையாளர்களுக்கு ஏற்படும் இந்தபிரச்சனை சச்சினுக்கு மட்டுமல்ல. ஒருகாலத்தில் நடிகர்திலகத்துக்கும் ஏற்பட்டது. அவருடைய சிலபடங்கள் வரிசையாக ஊத்த பத்திரிகைகள் தாறுமாறாக கிழிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த திரிசூலம் வெளியாகி சக்கைபோட்டது. அதன்பிறகு பல படங்கள் வெற்றியடைய எல்லோருடைய வாய்களும் மூடிக்கொண்டது.

பலர் இப்போது காறி உமிழஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் சீக்கிரம் சச்சினுக்கு பரணி பாடும்காலம் வரும்.
 
இந்திய அணிக்கான இப்போதைய தேவை சச்சினின் ஓய்வல்ல, மாறாக பின்வருவனவாக இருக்கலாம்... :)

  1. யாதவ் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களை வளர்க்கணும், நல்ல வேகத்தில் பந்து வீசும் யாதவுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்கி ஒரு அனுவமுள்ள பந்து வீச்சாளராக மாற்ற வேண்டும்.

  2. சுழல் பந்து வீசாத சகலதுறை ஆட்டக் காரர்களைத் தேடிப் பிடிக்கணும் (:D), இலங்கையைப் பாருங்க மத்யூஸ், திரிமேனே, திசர பெரரா, மஃரூக் என வரிசையாக நின்கிறார்கள்...

  3. இறுதி ஓவர்களில் தோனியுடன் துணை நின்று அடித்தாட நல்ல ஃபினிசர்கள் தேவை, ஜடேஜா ஐ பி எல்லில் அடிப்பது போல அவுஸ்திரேலியாவில் அடிக்க முடியாமல் திணறுவதாகத் தெரிகிறது, யுவராஜ் இல்லாத இழப்பு இந்த இடத்தில் தெளிவாகத் தெரிகிறது.

  4. இறுதியாக எல்லா வீரர்களும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடினால் போதும், வெற்றி தானே வரும்.
:D:D
 
நினைத்தபடி பான்டிங் மிக வருத்தத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் அதே நிலை சச்சினுக்கும் வர கூடாது என்பதே எனது விருப்பம் ! பார்க்கலாம்
 
சச்சின் மேலும் பல 100 களை அடிக்கக் கூடும், சாதனைகளையும் செய்யக்கூடும். ஆனால் இன்னும் கண்டறியப்படாமல் பல சச்சின்கள் இந்தியத் தெருக்களில் விளையாடி கொண்டிருக்கிறார்களே அவர்கள் 100 அடிப்பது எப்போது? அவர்களுக்கு 17 வயதிலேயே இந்திய அணியில் இடம்பெறச் செய்யக் கூடிய வகையில் கவாஸ்கர் போல வெங்சர்க்கார் போல வடேகர்கள் போல காட்பாதர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் அணியில் இடம் பிடித்தாலும் 12 ஆவது ஆளாகக் கூட இடம் கிடைக்காது. அதிகப் படசம் குளிர்பானமோ, ஹெல்மெட்டோ எடுத்துக் கொடுக்க களத்துக்கு வரலாம்.அணியில் இடம் பெற்றாலும் தொடரில் ஒரு ஆட்டம் கூட வாய்ப்பளிக்கப் படாமல் அணியை விட்டு நீக்கப்பட்ட துர்பாக்கியசாலிகள் பலர் உண்டு. அவர்களுக்கு முதல் 70 ஆட்டங்கள் வரை 100 அடிக்காமல் இருந்தாலும் தொடர்ந்து அணியில் தக்க வைக்கும் அளவுக்கு ஆதரவு தரும் லாபிகள் இல்லை. ஆனால் வாய்ப்புகளை பயன்படுத்தி திறமைகளை வளர்த்துக் கொண்டவர் சச்சின் என்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை. அந்த வாய்ப்புக் கூட இல்லாமல் பலர் ஏதோ நம்பிக்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. கபில்தேவ் இன்றைக்கு பந்து வீசினாலும் காத்திருந்து விக்கெட் எடுக்க வாய்ப்பு உள்ளது, ரவி சாஸ்திரி ஸ்பின் வீசலாம், ஶ்ரீகாந்த் இன்றைக்கு பவர் பிளேயைப் பயன்படுத்தி பேட்டை சுத்த விட்டு ரன்கள் குவிக்கலாம். அதற்காக அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா? சச்சின் இளைஞர்களுக்கு வழி விட்டு இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக பங்களிப்பைத் தரவேண்டியத் தருணம் இது.
 
ஆதவா..

உங்கள் கேள்விக்கு விடை தெரியவில்லை. ஆனால் இன்னொரு கேள்வி என்னிடம் உண்டு.

சச்சின் ஏன் ஓய்வு பெறக்கூடாது?
 
இன்று நடக்கும் போட்டியில் சச்சின் தனது 100வது சதத்தை அடிப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 30 நிமிடங்கள் இருக்கிறது. இந்தியா டாஸ் வென்று பாட்டிங் செய்யவேண்டும்.

பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்று. இந்தியா மிக மட்டமாக ஆடியிருக்கிறார்கள், ஆகையால் இந்த ஆட்டத்தை சொதப்பினால் பிரச்சனைதான்.
 
இந்த ஆட்டத்தை இந்தியா ஃபோனஸ் பாயிண்டுடன் வெல்ல வேண்டும்...

  • சென்ற இரு போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வரிசையில் நன்றாக துடுப்பாடிய பதான் இன்று இல்லை. :aetsch013:
  • தன் கடைசி போட்டியில் சதமடித்த திவாரி மைதானத்துக்கு வெளியே இருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்..:aetsch013:
  • ஆரம்ப துடுப்பாட்டக் காரர்களில் இடது கை, வலது கை என்னும் காம்பினேசனுடன் ஆட்டத்தைத் தொடக்கும் வாய்ப்பு இருந்தும், மற்றவர்களை விட நல்ல ஃபோர்மில் இருந்தும் கம்பீர் மூன்றாவதாகவே துடுப்பெடுத்தாடுவார்...:aetsch013:
  • பவுன்சர்களைப் போட்டால், இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கும் ரெய்னா விக்கட்டுகளைக் கொடுக்கிறார்...:aetsch013:
  • தேவையான பந்து வீச்சுக்களைத் தவிர்த்து விட்டு, தேவையில்லாத பந்துக்கு மட்டையை நீட்டி ஆட்டமிழப்பதை ஷேவக் ஒரு கடமையாகவே செய்து கொண்டிருக்கிறார்...:aetsch013:

அட போங்கப்பா இந்த நிலமையில் விளங்கின மாதிரித்தான்.
:sauer028:
 
Back
Top