91 முதல் 96 அம்மா ஆண்டபின் பல ஊழல் புகாரில் சிக்கினார், 97 சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினார், பிறகு 11 மாதம் சசிகலாவும் ஜெவும் சந்தித்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது, அதன் பிறகு அம்மாவே நேரே சென்று சசிகலாவை சந்தித்தார், நேற்று நிலவரப்படி அவர்க்களுக்கு இடையில் நடந்த பிரச்சனையில் சமாதன பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது, 2 நாட்களுக்கு முன்பே அம்மா வீட்டைவிட்டு வெளியேறிய சசிகலா, கடற்கரை சாலையில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது, சமாதாண பேச்சு வார்த்தையும் நடப்பதாக கூறப்பட்டது, இன்று நீக்கப்பட்டார் எனும் செய்தி வெளியாகி உள்ளது, செய்திதாள்களின் ஊகங்கள் என்னென்னவாக இருந்தாலும், உண்மையான காரணம் எதுவென தெரியவில்லை... முடிச்சுக்கள் அவிழும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்..