சென்னையில் புதிய கேஸ் இணைப்பு பெற உதவி தேவை

venkatesan1985

New member
மன்ற நண்பர்களுக்கு வணக்கம்,
நான் கடலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து 3மாதமாகிறது.
கேஸ் கணெக்ஷன் இல்லாமல் மிகுந்த அவதியாக இருக்கிறது.
என்னுடைய அனைத்து அடையாள/முகவரி சான்றுகளும் என் சொந்த ஊர் முகவரியிலேயே உள்ளது.அதை சென்னை முகவரிக்கு மாற்றுவது என்பது தற்போது நடக்காத வேலை(காரணம் உள்ளாட்சி தேர்தல் நேரம்).

ஆனால் L.I.C BOND ஐ வேண்டுமானால் ஈசியாக முகவரி மாற்றம் செய்ய முடியும்.அதை வைத்து புதிய கேஸ் இணைப்பு பெற முடியுமா?


1.புதிய கேஸ் இணைப்பு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? ரேஷன் கார்ட் கட்டாயம் இல்லை என அரசு கூறியுள்ளதாக எப்போதோ படித்த ஞாபகம்.இது சரியா?


2.நான் வாடகை வீட்டில் வசித்தாலும் வாடகை ரசீதெல்லாம் ஹவுஸ் ஓனர் கொடுப்பதில்லை.அப்படி அவர்கள் கொடுத்தாலும் printed ஆக இருக்காது.கையால் வாடகை ரசீது எழுதி கொடுத்தால் அதை கேஸ் ஏஜென்ஸி முகவரி சான்றாக ஏற்பார்களா?

3.நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடெவிட் பெற்று முகவரி சான்று கொடுத்தால் அதை ஏஜென்சி ஏற்குமா?
ஏதேனும் எளிய வழியை கூறவும் நண்பர்களே!
 
எனக்குத் தெரியவில்லை நண்பரே. ஆனால் பணம் இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்.
 
எனக்குத் தெரியவில்லை நண்பரே. ஆனால் பணம் இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்.

வணக்கமுண்ணா - லஞ்சத்தை இப்படி தான் வளர்கனுங்களா? கண்டீநிவ்....கண்டீநிவ்...கண்டீநிவ்.
 
வணக்கமுண்ணா - லஞ்சத்தை இப்படி தான் வளர்கனுங்களா? கண்டீநிவ்....கண்டீநிவ்...கண்டீநிவ்.

உங்களுக்கு வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.
 
நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடெவிட் பெற்று முகவரி சான்று கொடுத்தால் போதுமானது.

வீட்டு ஓனரிடம் அக்ரிமென்ட் வாங்கிய நகலும் இருந்தால் நல்லது.
 
1. முதலில் வீட்டிற்கு அரசு தொலைபேசி கம்பி வழி இணைப்பை, உங்களுடைய வாடகைதாரர் ஒப்பந்தம் கொண்டு பெறவும். அதன் கட்டணச் சீட்டை சமையல் எரிவாயு இணைப்பிற்குத் தரலாம்.

2. வாடகை ஒப்பந்தமே நல்ல சான்றுதான்

3. நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடெவிட் பெற்று முகவரி சான்று கொடுத்தாலும் போதுமானது

4. அலுவலகத்தின் மூலம் பெறப்படும் முகவரிச் சான்று, வங்கிக் கணக்கின் மூலம் பெறும் முகவரிச் சான்று இவையும் ஏற்கப்படும். இவற்றைப் பெறுவதும் எளிதானதே...
 
உருவ அல்லது நிழல் பட சான்று மற்றும்
முகவரி சான்று
இவைகளுக்கு முயற்சி செய்து பெற்று பிறகு
அணுகவும்
அதுவரை வணிக இணைப்பு நான்காயிய்ரம் அளவில் கிடைக்கிகிறது.
அல்லது பக்கத்தில் உள்ள நண்பர்களை வைத்து உதிரி சிளிண்டேர்களை பெற முயற்சிக்கவும்.
அன்புடன்,
குழந்தைவேல் மு
 
பேன் கார்டு, மற்றும் வீட்டு ஒப்பந்த நகல் இருந்தால் போதுமானது. வீட்டு ஒப்பந்த நகல் இல்லையெனில் முகவரி சான்றாக அலுவலக கடிதம், வங்கி பாஸ்புக் போன்றவற்றையும் தரலாம்.

இரண்டையும் எடுத்துக் கொண்டு உங்கள் ஏரியாவில் இருக்கும் ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். (இதற்கு காசில்லை) ஒரு மாதம் அல்லது இரு மாதங்கள் கழித்து வீட்டிற்கு "கனெக்ஷன் கிடைத்துவிட்டது" என்று தபால் வரும்.அதையும், முன்னர் காண்பித்திருந்த நகல்கள் மற்றும் ஒரிஜினல்களை எடுத்துக் கொண்டு போய் புதிய இணைப்பு பெறுங்கள். உடனடியாக இண்டேன் இணைப்பு கிடைப்பது கஷ்டம்.

மே மாதத்தில் பதிவு செய்து எனக்கு சென்ற மாதம் தான் இணைப்பு கிடைத்தது.
 
Back
Top