வீடியோ டைட்டில் கிராபிக்ஸ் சாஃப்ட்வேர்

வீடியோவின் இடை இடையே டெக்ஸ்டுகள், படங்கள், அனிமேஷன்கள் இணைக்க நல்ல சாஃப்ட்வேர் இருந்தால் சொல்லவும்.
 
நண்பரே நீங்கள் உபயோகிக்கும் வீடியோ எடிட்டிங் மென்பொருளிலேயே அந்த வசதி இருக்கின்றது. உங்கள் படங்களில் அந்த எழுத்துக்கள் வரவேண்டுமானால் அதை உபயோகியுங்கள். ஆனால் டைட்டிலாக உபயோகிக்க வேண்டுமானால் இருக்கவே இருக்கிறது ஒரு சிறிய மென்பொருள் கடுகுபோல்

Blufftitler
 
வியாசன் நான் ப்ளஃப்டைட்லர் பயன்படுத்துகிறேன். எனது தேவை என்பது வீடியோவின் இடையில் அனிமேஷன் கிராபிக்ஸ் டைட்டில்ஸ், எழுத்துக்கள், போன்றவற்றைச் சேர்க்க உதவும் சாஃப்ட்வேர் பற்றியது. டிவி சானல்களில் டைட்டிலிங் மற்றும் இடை இடையே வரும் துணுக்கு விளம்பரங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அது போல ஓடக்கூடிய வீடியோவின் இடையே விளம்பரங்கள் (எழுத்து வடிவில், பட வடிவில்) சேர்க்க உதவும் சாஃப்ட்வேர்.
 
இதுவரை பிரீமியர் பயன்படுத்தியதில்லை. முயற்சித்துப் பார்த்து விட வேண்டியதுதான்.
 
அது Mac மென்பொருள் அல்லவா? நீங்கள் Mac பாவிப்பவரானால் தனிமடல் மூலம் தெரிவிக்கின்றேன்
 
விளம்பரப் படங்களுக்காக டிஜிட்டல் வீடியோவில் தேவையான மாறுதல்கள், இசைக்கோர்ப்புகள், எழுத்துக்கள் போன்றவற்றை இணைக்க வேண்டும்.
 
ulead video studio பாவித்துப் பாருங்கள். ulead மென்பொருட்கள் அதி திறன் வாய்ந்தவை. நான் நிறைய பயன்படுத்தியிருக்கிறேன். பயன்படுத்துவது சுலபம்.
 
நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரிகிறது. நான் சேனலில் வேலை செய்ததால் சொல்கிறேன். இது adobe போலவோ அல்லது video edititing software போலவோ அல்ல. இவை அந்தந்த சேனல்காரர்களுக்கு என்று பிரத்யேகமாக செய்யப்படுகிறது. இது சிங்கிள் கம்ப்யூட்டரில் செய்ய முடியாது, டிவியும் வேண்டும்.
 
Last edited by a moderator:
நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரிகிறது. நான் சேனலில் வேலை செய்ததால் சொல்கிறேன். இது adobe போலவோ அல்லது video edititing software போலவோ அல்ல. இவை அந்தந்த சேனல்காரர்களுக்கு என்று பிரத்யேகமாக செய்யப்படுகிறது. இது சிங்கிள் கம்ப்யூட்டரில் செய்ய முடியாது, டிவியும் வேண்டும்.

நன்றி !
 
நண்பரே உங்கள் பிரச்சனை இன்னமும் முடியவில்லையா இதைப்பாருங்கள்
 
Pinnacle Studio மென்பொருள் உங்கள் தேவையை நிறைவேற்றும். அதில் அதிகமான அனிமேசனுக்கு plug-in உபயோகப்படுத்தவேண்டும். அனைத்தையும் விட அடோப் பிரிமீயாில் நிறைய செய்யலாம் என என் நண்பா்கள் சொல்கின்றனா். ஆனால் நான் இதுவரை அதை உபயோகித்து பாா்த்ததில்லை.
 
அனிமேஷன் கிராபிக்ஸ் தலைப்புகள், எழுத்துக்கள் போன்றவற்றை மென்பொருள் சேர்க்க வேண்டும் என்பது எனது தேவை.
 
Back
Top