கண்ணதாசன் பாடல்

ஜானகி

New member
இன்று என் கண்ணில் பட்ட, மனம் கவர்ந்த கண்ணதாசன் பாடல்:

சிவகாமி அம்மன் துதி:

கருவிலே நான் தூங்கி காலங்கழிக்கையில் காற்றாக வந்தவள் நீ

கையிலே பிள்ளையாய் பையக் கிடைக்கையில் கனிந்த பாலானவள் நீ

உருவிலே பெரிதாகிப் பள்ளிக்குச் செல்கையில் உடன் வந்த கல்வியும் நீ

உறவிலே ஒன்றாகித் திருமணம் நடக்கையில் ஒளிமாலை ஆனவள் நீ

திருவோடு பிள்ளை என் மனையிற் பிறக்கையில் சீர் தந்த ஆட்சியும் நீ

தேசங்கள் யாவிலும் தொழில் செய்யச் செல்கையில் செல்வமாய் நின்றவள் நீ

குருவான குமரனின் அறிவான அன்னையே கோல நடராசன் துணையே

கோவிலிடை அந்தணர்கள் கூடுவரும் தில்லையில் கொஞ்சும் சிவகாமி உமையே !
 
விசாலாட்சி அம்மன் துதி:

ஆத்தாளுன் சந்நிதியை அறியாத பிள்ளை நான், ஆனாலும் கவிதை சொன்னேன்

ஆடிவரும் கங்கையில் மூழ்காத காக்கை நான், ஆனாலும் பேறு பெற்றேன்

காத்தாளும் மங்கலக் கையோடு முகத்தையும் கற்பனையில் காணுகின்றேன்

கட்டாயம் உன் அருளைப் பெற்றே நான் வாழுகின்றேன், காலத்தில் அங்கு வருவேன்

சேர்த்தாளும் அன்னையே சேய் செய்த பாவத்தைச் சிறிதும் நீ மதிக்கவேண்டாம்

சிற்றறிவை ஆசானின் பேரறிவு காப்பதும் தேவி நீ மறந்த ஒன்றா

பூந்தாமரை எனப் பொங்கு சின நாதத்தைப் புரிந்தவன் கலந்த மயிலே

புகழ் பெறு காசிநகர் தகவுடைய தேவியே பூவை விசாலாட்சி உமையே.
 
இன்று என் கண்ணில் பட்ட, மனம் கவர்ந்த கண்ணதாசன் பாடல்:

சிவகாமி அம்மன் துதி:

கருவிலே நான் தூங்கி காலங்கழிக்கையில் காற்றாக வந்தவள் நீ

கையிலே பிள்ளையாய் பையக் கிடைக்கையில் கனிந்த பாலானவள் நீ

உருவிலே பெரிதாகிப் பள்ளிக்குச் செல்கையில் உடன் வந்த கல்வியும் நீ

உறவிலே ஒன்றாகித் திருமணம் நடக்கையில் ஒளிமாலை ஆனவள் நீ

திருவோடு பிள்ளை என் மனையிற் பிறக்கையில் சீர் தந்த ஆட்சியும் நீ

தேசங்கள் யாவிலும் தொழில் செய்யச் செல்கையில் செல்வமாய் நின்றவள் நீ

குருவான குமரனின் அறிவான அன்னையே கோல நடராசன் துணையே

கோவிலிடை அந்தணர்கள் கூடுவரும் தில்லையில் கொஞ்சும் சிவகாமி உமையே !
இந்த அன்னை சிவகாமியின் திருவடிகளை சாரும் தவமுடையார் படையாத செல்வமில்லை. அவர்கள் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று சொல்லும்..

"பாரும் கனலும்........." என்று தொடங்கும் அபிராமி அந்தாதி பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது. பக்தர்கள் பக்தியின் திறத்தை வெளிப்படுத்தும் திறம் தான் எத்தனை எத்தனை? அருமையான வரிகள்.
 
என்ன ஒரு கவிஞன் அவன். பார்த்த சிவகாமிக்கும் பார்க்காத விசாலாட்சிக்கும்
எத்தனை காலமானாலும் வாடாத பாமாலை சூட்டிவிட்டான்.

ஜானகிக்கு நன்றி.
 
எண்ண மலர்களையெல்லாம் எழுத்துக்களில் கோர்த்து
வண்ண மலர் மாலையாக்கி கருத்தை கவரும் சொற்கோவையை
தண்டமிழில் நாம் சுவைக்க கொடுத்த நற்கவிஞர்
கண்ணதாசனின் தமிழ் தொண்டை வாயார வாழ்திடலாம்.
 
Back
Top