பாகற்காய் புளியோதரை

கசப்பான பாகற்காயையும் அனைவரும் விரும்பும் சுவையானதாக்க முடியும்.
பாகற்காய் புளியோதரை செய்ய தேவையானவை


பாகற்காய் --கால் கிலோ
புளி ---நெல்லிக்காய் அளவு
கல் உப்பு 1ஸ்பூன்

வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு --2ஸ்பூன்
மல்லி விதை---4 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--5
கடுகு--1ஸ்பூன்
வெந்தயம்---அரை ஸ்பூன்

தாளிக்க

கடுகு--1 ஸ்பூன், கடலைப்பருப்பு---2ஸ்பூன், மிளகாய் வத்தல் --2, வறுத்த வேர்கடலை ---2 ஸ்பூன்,கறிவேப்பிலை,

பருப்பு ,மல்லிவிதை, மிளகாயை தனியாகவும், கடுகு வெந்தயத்தை தனியாகவும் வறுத்து பொடி செய்யவும்.
புளியை கெட்டியாக கரைக்கவும்.
பாகற்காயை சுத்தம் செய்து விதை நீக்கி ,நறுக்கி, எண்ணையில் பொரித்து கொள்ளவும்.
கடாயில் தாளிதம் செய்துக் கொண்டு ,கெட்டியாக கரைத்த புளி கரைசலை ஊற்றி ,சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்கும் போது, அரைத்த பொடியை போட்டு கட்டி இல்லாமல் கிளறவும், பொரித்த பாகற்காயை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். 2 குழிக் கரண்டி நல்லெண்ணை சேர்த்து கிளறி இறக்கவும்.


சூடான சாதத்தில் இந்த பேஸ்டிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து கலந்து சாப்பிடவும்.
 
படிக்கும்போதே. பாகற்காய் கசப்பும், புளியின் புளிப்பும், பொடிகளின் காரமும், சேர்ந்து கலவையான சுவையாக இருக்கும்போலத் தெரிகிறது..பொடி செய்துபோடும் சாமான்களுடன் சிறிது வறுத்த எள்ளும் சிறிது வெல்லமும் சேர்த்தால் சுவை கூடுமோ....?.செய்து பார்க்கிறேன்.
 
படிக்கும்போதே. பாகற்காய் கசப்பும், புளியின் புளிப்பும், பொடிகளின் காரமும், சேர்ந்து கலவையான சுவையாக இருக்கும்போலத் தெரிகிறது..பொடி செய்துபோடும் சாமான்களுடன் சிறிது வறுத்த எள்ளும் சிறிது வெல்லமும் சேர்த்தால் சுவை கூடுமோ....?.செய்து பார்க்கிறேன்.

எள்ளும், வெல்லமும் சேர்க்கும் போது புளியோதரையின் சுவை குறைகிறது.அதையும் நான் முயன்றிருக்கிறேன்.நன்றி.
 
இதுவரை கேள்விப்படாத செய்முறை. நிச்சயம் செய்து பார்க்கிறேன். எனக்கு பாகற்காய் மிகவும் பிடித்தமானது. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணன்.
 
புதுசா இருக்கு. என் மனைவியிடம் செய்யச் சொல்கிறேன்.
 
பாகற்காய் புளியோதரை படிக்கும்போதே ஜொள்ளு ஊறுகிறது.
 
செய்ய சொல்லி சாப்பிட்டு பார்த்துரலாம்
 
பாகற்காய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதன் கசப்புத்தன்மை பலருக்கு பிடிக்காது.ஆனால் அந்த கசப்பு தான் நமக்கு தேவை.கசப்பை சுவையாக மாற்றி ஒரு ரெஸிபி தயாரித்து அனைவரும் பயனுறுமாறு தந்துள்ளீர்கள். நன்றி பல.
 
பாகற்காய் பொரியல் செய்தால் அதற்கு இனையான சுவையான காய் வேறு இருக்க முடியுமா. பாகற்காய் புளியோதரையும் ஒரு கை பாத்துருவோம்.
 
பாகற்காய் பொரியல் செய்தால் அதற்கு இனையான சுவையான காய் வேறு இருக்க முடியுமா. பாகற்காய் புளியோதரையும் ஒரு கை பாத்துருவோம்.

பாத்தீங்களா... இல்லையா...???
 
அட பாகற்காயில் இத்தனை அருமையான டிஷ்... செய்து பார்த்திட வேண்டியது தான்..... எங்க வீட்டுக்காரருக்கு இஷ்டமானது பாகற்காய்... செய்துக்கொடுத்து அசத்திரலாம்....

அன்புநன்றிகள் க்ருஷ்ணன் பகிர்வுக்கு.
 
Back
Top