கிருஷ்ணன்
New member
ஹாட் &ஸ்பைசி சாட்
1கப் கடலைமாவு, 1/2கப் கோதுமைமாவு, 1/2 கப் மைதா, 2டே. ஸ்பூன் வறுத்த ரவை, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த மிளகுத்தூள், 1/4 ஸ்பூன் சீரகத்தூள், ஓமம் சிறிதளவு, 3ஸ்பூன் எண்ணெய்+நெய் கலந்தது, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.
உலர் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும், அதோடு எண்ணெய் ,நெய் கலவையை சேர்த்து கலந்து நன்கு உதிர்த்து விடவும், அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசையவும். 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து டயமண்ட்வடிவில் அல்லது நீளமாக கட் செய்து சூடான எண்ணெயில் இரு புறமும் சிவந்து வருமாறு பொரித்தெடுக்கவும். சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.
பரிமாறும் முறை
நறுக்கிய வெங்காயம் ,தக்காளி சிறிதளவு, கேரட் சிறிதளவு, கொத்துமல்லி தழை ,கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு, சிட்டிகை சாட் மசாலா ,எலுமிச்சை சாறு சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, சாட் மசாலா, உப்பு, மல்லிதழை, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும், அதோடு தேவையான அளவு பொரித்ததை ஒன்றிரண்டாக நொறுக்கி லேசாக கலந்துவிட்டு ,தேனீருடன் மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறவும்.