நெல்லிக்காய் சாதம்

சுவையான அல்வா

பலாப்பழ அல்வா

தேவையானது

பலாச்சுளை ---10
தேங்காய் துருவல் 1கப்
சர்க்கரை---2 கப்
நெய்--- அரை கப்

செய்வோமா

பலாச்சுளையை நெய்யில் வதக்கி, தேங்காய் துருவலுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் போது, அரைத்ததை சேர்த்து கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலப்பொடி.போட்டு கீழே இறக்கி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

பயன்கள்
பலாச்சுளையில், விட்டமின் ஏ--5%, சி--11%,இரும்புச் சத்து,கால்சியம் --3% உள்ளது.இதைத்தவிர எண்ணிலடங்கா மினரல்களும் உள்ளது.
 
பாயசம் செய்வது ரொம்பது ஈஸி

எப்பவும் பால் பாயசம் சாப்பிட்டு போரடித்து விட்டதா ? வித்தியாசமாய் மாம்பழ பாயசம் செய்யலாமே.

தேவையானவை
நன்கு பழுத்த, புளிப்பில்லாத மாம்பழம்---2
சர்க்கரை--2 கப்
கெட்டியான பால் --5 கப்
சேமியா--கால் கப்
வழக்கம் போல் ஏலப் பொடி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் அலங்கரிக்க

துவங்கலாமா

மாம்பழத்தை தோல் நீக்கி உள்ளிருக்கும் சதையை மசிக்கவும். சேமியாவை ,சிறிது பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவிடவும். நன்கு வெந்து வரும் போது மாம்பழத்தை சேர்த்து , சர்க்கரை, போட்டு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும், மீதமுள்ள பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.ஏலப் பொடி, முந்திரி, கிஸ்மிஸால் அலங்கரிக்கவும்.


பயன்கள்

மாம்பழத்தில் அதிகளவு நார்சத்து, விட்டமின் ஏ,பி,சி, ஈ,மற்றும் தாது பொருட்களான மெக்னீஸியம், கால்சியம், செலினியம், போலிக் ஆஸிட், என்று அனைத்து சத்துகளும் நிறைய உள்ளன.
 
இந்த கப் என்பதை கிராமில் வரையறுக்க முடியுமா??? நீங்கள் பாட்டுக்கு கப் என்றால் எதை நினைப்பது??? :D :D :D

நீங்கள் சொன்னதை பார்த்தால் செஞ்சிடவேண்டியது தான் என்று நினைத்தேன். ஆனால் அந்த கப் தான் கொஞ்சம் இடிக்குது.
 
இந்த கப் என்பதை கிராமில் வரையறுக்க முடியுமா??? நீங்கள் பாட்டுக்கு கப் என்றால் எதை நினைப்பது??? :D :D :D

நீங்கள் சொன்னதை பார்த்தால் செஞ்சிடவேண்டியது தான் என்று நினைத்தேன். ஆனால் அந்த கப் தான் கொஞ்சம் இடிக்குது.

1 கப் என்பது 200கிராம் கொண்டது.
 
மேத்தி பராத்தா

பராத்தா என்பது நம் ஊர் சப்பாத்தி தான். அதில் நடுவில் ஸ்டஃப் செய்து சப்பாத்தி போல் திரட்டி சுட்டு எடுப்பார்கள் அவ்வளவு தான். இது பொதுவாக வட நாட்டில் பிரசித்தி பெற்றது.

மேத்தி பராத்தா செய்ய

தேவையானவை
1கப் கோதுமை மாவு
2 ஸ்பூன் எண்ணை
உப்பு தேவையான அளவு
1குழிக் கரண்டி வெதுவெதுப்பான பால்

மாவு தயாரிப்பு
மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ,தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்

ஸ்டஃப் செய்ய தேவையானவை
1 கட்டு வெந்தயக் கீரை
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வெங்காயம் 2(பொடியாக நறுக்கவும்)
உப்பு தேவையான அளவு

தாளிக்க
பட்டை சோம்பு

கடாயில் எண்ணை விட்டு தாளிக்கவும்,அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு சிவப்பாகும் வரை வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கவும்.நன்கு வேகவிடவும். தேவையான உப்பு போட்டு கிளறி இறக்கவும்.


பராத்தா செய்முறை
மாவினை சிறு உருண்டையாக செய்து கனமாக திரட்டவும்,அதில் ஸ்டஃப்பிங் வைத்து ஓரங்களை நன்றாக மூடி மெல்லிய தாக மீண்டும் திரட்டவும். தவாவை சூடாக்கி பராத்தாக்களை போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பயன்கள்
வெந்தயக் கீரையில் இரும்புச் சத்து நிறைய உள்ளது.குளிர்ச்சி தரவல்லது. கோதுமை மாவில் நார் சத்து அதிகம்.
 
முகம்பளபளப்பாக இருக்க ஆரோக்கிய வழிகள்

ஆரஞ்சு பழ தோலை தூக்கி எறியாமல், முக அழகிற்கான ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
ஆரஞ்சு தோலை காய வைத்து நன்கு உலர்ந்தது---1கப்,
காய்ந்த ரோஜா இதழ்--1கப்
இது இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடியாக்கவும்.அதோடு கடலைமாவு---2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து ,அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி ,காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்---2
பாலை காய்ச்சியவுடன் அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

டிப்ஸ்---3
தக்காளியை ஜூஸ் செய்து அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்--4
வெண்ணை சிறிது எடுத்து நன்கு குழைத்து முகத்தில் ,முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

டிப்ஸ்--5
நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
 
வந்தவுடனேயே அடுப்பங்கரைக்கு ஓடிவிட்டீர்கள்.
ஜானகி அம்மாவுக்கு ஒரு கை கெடச்சாச்சு...
நல்ல தகவல்கள்..

பாலை காய்ச்சியவுடன் அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

அநேகமா ரா ரா வுக்கு அடுத்த கதை கெடச்சாச்சுன்னு நினைக்கறேன்
 
ஏன் சார், நீங்க கிருஷ்ணன்'ஸ் கிச்சென் அப்படின்னு ஒரு த்ரி தொடங்கலாமே
 
நல்ல ஐயிட்டமாத்தான் இருக்கு. சாப்பிட்டு பார்த்துட வேண்டியதுதான்.
 
மற்றொரு விதமான மேத்தி பரோட்டா....

பொடியாக நறுக்கிய மேத்தி இலைகளுடன், சிறிது உப்பு, காரப்பொடி, சீரகப்பொடி, தேவையானால் சிறிது மசாலாப்பொடி, கொஞ்சம் எண்ணை விட்டுப் பிசிரி நன்கு கலந்து, அதிலேயே, கோதுமை மாவையும் போட்டு, நீர் விட்டுப் பிசைந்துகொண்டு, எப்போதும் போல, சப்பாத்திகளாக இட்டு, அடுப்பில், தோசைக்கல்லில் போட்டு, சிறிது நெய் அல்லது எண்ணை விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும், எடுக்கலாம். இதனை, ஊறுகாய், தயிருடன் சாப்பிடலாம். பிரயாணங்களுக்கும் கொண்டுபோகலம்.

பொடியாக நறுக்கிய மேத்தி இலைகளை, அடைமாவு, வடைமாவுடன் கலந்து செய்தால், சுவையுடன், மணமும் கூடும்.

பெரிய இலைகளாக இருக்கும் டெல்லி மேத்திதான் சுவையானது, அரிவதும் சுலபம்.

உருளைக் கிழங்கு பொரியல் செய்யும் போது, வதக்கிய மேத்தி இலைகளை சேர்த்தால், மணம் மூக்கைத் துளைக்கும்....

[ அப்பாடா, சமையல்கட்டில், நான் மாத்திரம் தனியாக மாட்டிக்கொண்டிருந்தேன்......நல்லவேளை துணை கிடைத்துவிட்டது...]
 
Last edited:
இருசெய்முறைகளுமே அசத்தல். குழந்தைகளை இந்த முறையில் கீரை சாப்பிடவைப்பது எளிது. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணன், ஜானகி அம்மா.
 
மேத்தி பராத்தா

மற்றொரு விதமான மேத்தி பரோட்டா....

பொடியாக நறுக்கிய மேத்தி இலைகளுடன், சிறிது உப்பு, காரப்பொடி, சீரகப்பொடி, தேவையானால் சிறிது மசாலாப்பொடி, கொஞ்சம் எண்ணை விட்டுப் பிசிரி நன்கு கலந்து, அதிலேயே, கோதுமை மாவையும் போட்டு, நீர் விட்டுப் பிசைந்துகொண்டு, எப்போதும் போல, சப்பாத்திகளாக இட்டு, அடுப்பில், தோசைக்கல்லில் போட்டு, சிறிது நெய் அல்லது எண்ணை விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும், எடுக்கலாம். இதனை, ஊறுகாய், தயிருடன் சாப்பிடலாம். பிரயாணங்களுக்கும் கொண்டுபோகலம்.

பொடியாக நறுக்கிய மேத்தி இலைகளை, அடைமாவு, வடைமாவுடன் கலந்து செய்தால், சுவையுடன், மணமும் கூடும்.

பெரிய இலைகளாக இருக்கும் டெல்லி மேத்திதான் சுவையானது, அரிவதும் சுலபம்.

உருளைக் கிழங்கு பொரியல் செய்யும் போது, வதக்கிய மேத்தி இலைகளை சேர்த்தால், மணம் மூக்கைத் துளைக்கும்....

[ அப்பாடா, சமையல்கட்டில், நான் மாத்திரம் தனியாக மாட்டிக்கொண்டிருந்தேன்......நல்லவேளை துணை கிடைத்துவிட்டது...]


மேத்தி இலைகளை நறுக்கி சமைக்கக் கூடாது .நறுக்கும் போது அதிலுள்ள இரும்புச்சத்து போய்விடும். அப்படியே வதக்கி தான் செய்ய வேண்டும். முருங்கைக்கீரைக்கும் இது பொருந்தும்.
 
ஆலு பீஸ் ஸ்ட்யூ

இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றிர்க்கு வித்தியாசமான சைட் டிஷ் இந்த ஸ்ட்யூ வகைகள். எந்த காய்கறி இருந்தாலும் செய்யலாம். அசைவ பிரியர்கள் இதில் காய்களுக்கு பதிலாக சிக்கன், மட்டன் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


ஆலு பீஸ் ஸ்ட்யூ

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு ---கால் கிலோ
பச்சை பட்டாணி --1கப்
நறுக்கிய கேரட் --1கப்
தேங்காய் பெரியது ஒன்று
இஞ்சி சிறு துண்டு,
பச்சைமிளகாய்---4
மிளகு தூள் 1ஸ்பூன்
உப்பு தேவையானது

உருளைக்கிழங்கை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். பட்டாணியை வேகவைக்கவும்.
தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். முதல் பாலை தனியாகவும், 2, 3 ,பாலை தனியாக வைக்கவும்.
2,3 தேங்காய் பாலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைக்கவும். பட்டாணி சேர்த்து மசிக்கவும்.காரட் சேர்க்கவும்.காரட் அரைவேக்காடு இருந்தாலே போதுமானது.
இஞ்சி ,பச்சை மிளகாய், மிளகு தூள் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியில் முதல் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
 
Banana Smoothie/வாழை பழக் கூழ்

இந்த வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் ,ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் தரும் பழச்சாறுகளை அருந்துவதே சாலச் சிறந்தது.வெயிலி்ல் சென்று வருவதால் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை(Dehydration) போக்க எளிய வழி பழச்சாறுகள் குடிப்பது. அதற்காக கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும்.

Banana Smoothie/வாழை பழக் கூழ் செய்ய தேவையானவை


வாழை பழம்-2
ஆரஞ்சு சாறு--1கப்
தயிர் ---1கப்
வெனிலா எசன்ஸ் சிறிது
ஐஸ் துண்டுகள் சிறிது
தேன் சிறிது

எல்லா பொருட்களையும், மிக்ஸி அல்லது பிளெண்டரில் 2 நிமிடம் வரை நன்கு அடித்து கலக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் போட்டு , சிறிதளவு புதினா தழையை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு
தயிருக்கு பதிலாக ரெடிமேடாக கிடைக்கும் யோகர்ட் கூட பயன்படுத்தலாம்.
 
பானி பூரி

சாட் வகைகளில் இதுவும் ஒன்று. நம் ஊரிலேயே இப்போதெல்லாம் தெருவோர கடைகளில் கூட பானி பூரி விற்கிறார்கள். வட இந்தியாவில் இதை "கோல் கப்பா " என்று ஆசையோடு அழைத்து வெளுத்து கட்டுவாங்க பாருங்க அதை பார்க்கும் போது , நமக்கே எச்சில் ஊறும். இதை செய்வதும் ரொம்ப ஈஸி

பானி பூரி


பூரி செய்ய தேவையானவை

ரவை---1கப்
மைதா--2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
பொரிக்க தேவையான அளவு எண்ணை

ரவை,மைதா, சோடாஉப்பு, உப்பு சேர்த்து நன்கு மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து ,ஈரத்துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு சிறு சிறு பூரிகளாக திரட்டி, (ஒரு பூரி ஒரே வாயில் உள்ளே சென்றுவிட வேண்டும் ) அதற்கு ஏற்ப சைஸ் சிறியதாகஇருக்கட்டும்) .எண்ணையில் நன்கு அழுத்தி விட்டு உப்பி வரும் படி பொரித்து எடுத்து சூடு ஆறிய உடன் காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

அதன் உள்ளே வைக்க பூரணம்

வேகவைத்த உருளைக்கிழங்கு---3
மிளகாய்தூள் 2ஸ்பூன்
சீரகத்தூள் --1 ஸ்பூன்
கரம் மசாலா--1 ஸ்பூன்(விரும்பினால் மட்டும் சேர்க்கவும்)
உப்பு தேவையானது

உருளைக்கிழங்கை மசித்து ,அதில் மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு ,கரம் மசாலா நன்கு சேர்த்து கலந்து வைக்கவும். உருளைக்கிழங்கிற்கு பதிலாக கொண்டைக்கடலை கூட பயன்படுத்தலாம்.

பானி செய்ய தேவையான சட்னி

இதற்கு மூன்று வகை சட்னி செய்வார்கள். புளி சட்னி, கிரீன் சட்னி, ஸ்வீட் சட்னி.
மூன்றையும் கூறுகிறேன் உங்களுக்கு எது விருப்பமோ அதை செய்து கொள்ளவும்.

1 புளி சட்னி
புளி எலுமிச்சை சைஸ்
கொத்தமல்லி தழை--1கட்டு
புதினா --1கட்டு
பச்சை மிளகாய்---காரத்திற்கேற்ப
மிளகுதூள்-1ஸ்பூன்
சீரகத்தூள்--1ஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
உப்பு தேவையான அளவு

புளியை கெட்டியாக கரைக்கவும். கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சைமிளகாயை அரைக்கவும். புளித்தண்ணீரை கொதிக்கவைத்து அதில் அரைத்த விழுதை போட்டு , தேவையான உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

2 கிரீன் சட்னி

கொத்தமல்லி தழை--1கட்டு
தேங்காய் துருவல் --1கப்
பச்சைமிளகாய்--3
உப்பு தேவையான அளவு

எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ,நீர்க்க கரைத்து வைக்கவும்.

3 ஸ்வீட் சட்னி
பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது ---கால் கப்
கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் சிறிது
வெல்லம் ---1சிறிய கரண்டி
சீரகத்தூள் --1ஸ்பூன்
மிளகாய் தூள் --அரை ஸ்பூன்
உப்பு சிட்டிகை

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து கரைத்து வைக்கவும்.


பானி பூரி பரிமாறும் முறை

5--6 பூரிகளை தட்டில் வைத்து நடுவில் துளை செய்து பூரணம் வைத்து அதன் மீது நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, தூவி பானி ( சட்னியை 1 ஸ்பூன் ஊற்றி ) உடன் பரிமாறவும். சட்னி நீர்க்க இருக்கவேண்டும்.
 
பட்டுப்புடவை பராமரிப்பு

பட்டுப்புடவைகளை விரும்பாத நங்கையர்களே இருக்க முடியாது.அதிக விலை தந்து வாங்கும் புடவையை எப்படி பராமரிப்பது? சில டிப்ஸ் .....


புடவையை கட்டிய பிறகு வியர்வை வாடை போக சிறிது நேரம் நிழலில் காயவைத்து பின் எடுத்து மடித்து வைக்க வேண்டும்.
அடிக்கடி துவைத்துக் கொண்டே இருக்க கூடாது.அப்படி செய்வதால் பளபளப்பு குறையும்.

புடவையை துவைக்க கடினமான சோப்புகள், பவுடர்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தலைக்கு போடும் ஷாம்புவை சிறிது நீரில் கலந்து அதில் புடவையை நனைத்து துவைக்கலாம்.

நம்மை அறியாமல் ஏதேனும் கரை படிந்து விட்டால் கவலை வேண்டாம்... சிறிது யூகலிப்டஸ் தைலம் பயன்படுத்தி, பஞ்சினால் துடைத்தால் கரை பளிச்.

புடவையை மடித்து வைக்கும் போது அதன் ஜரிகை பகுதி உள்புறமாக இருக்கும் படி வைத்து மடிக்க வேண்டும். இதனால் ஜரிகை கறுத்து போகாது. மேலும் ஏதாவது துணியின் உள் வைத்து மூடி வைக்க வேண்டும்.

இரும்பு பீரோவில் வைப்பதை முடிந்தவை தவிர்த்தல் நலம்.
 
Back
Top