விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு கடிதம்

ஆதி

Active member
மதிப்புக்குரிய திரு.விஜயகாந்த் அவர்களுக்கு,

இரு திராவிடக் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கைநீட்டி குற்றஞ் சொல்லியவாறு, முதுகு வழியாக தமிழக மக்களின் முகத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், நீங்கள் தமிழகத்தின் மூன்றாவது மிக பெரிய சக்தியாக உருவெடுத்து கட்சி துவங்கினீர்கள்.

மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சொந்த பணத்தை போட்டு கட்சி துவங்கி, 2006-ஆம் ஆண்டு மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி எனும் புது மந்திரத்தோடு தேர்தலையும் தனியாக சந்தித்தீர்கள்..

உங்கள் வாக்கின் மீதும், வருகையின் மீதும் நம்பிக்கை கொண்ட எங்கள் ஜனங்கள், உங்கள் கட்சிக்கு கணிசமான வாக்களித்ததோடு மட்டுமன்றி, உங்களை விருத்தாச்சலத் தொகுதியில் ஜெய்கவும் வைத்தார்கள்..

ஆளும் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களும் பிஜேபி தலைவர்களும் கூட உங்களுக்கு கிடைத்த ஓட்டுக்களை பற்றியும் உங்களின் வெற்றி பற்றியும் நன்முறையிலேயே கருத்து தெரிவித்தார்கள்.தங்களுக்கு வாழ்த்துச் சொன்னதோடு, நீங்கள் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டதற்கு பதிலாக, 20-30 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் மட்டும் போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிகமாய் ஜெய்திருக்கலாம் நீங்கள் என்று தங்களுக்கு பக்குவமான ஆலோசனைகளை சொன்னார்கள்..

அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த போது தங்கள் கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது, அதிமுக போட்டியிட்ட இடைத்தேர்தலில் மூன்றாம் இடம் கிடைத்தது, 10 சதவிகிதம் வரை வாக்கு வங்கி உயர்வும் தங்கள் கட்சிக்கு கிடைத்திருப்பதை பார்த்து, உங்களால் தங்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படுகிறது என்பது உணர்ந்து கோபமுற்ற அம்மையார் அவர்கள், தாங்கள் சட்டப்பேரவைக்கு குடித்து விட்டு வருவதாக குற்றஞ்சொன்னார்கள்...

அதற்கு நீங்களும் அநாகரீகமான பதிலும் அளித்தீர்கள், அப்போது கூட நாங்கள் அம்மையார் மீதுதான் கோபமுற்றோம், தேவையில்லாமல் உங்களை சீண்டி உங்களிடம் வாங்கி கட்டி கொள்கிறாரே என்று அம்மாவுக்காக பரிதாபப்பட்டோம்...

ஆளும் கூட்டணியை நீங்கள் பாரபட்சமின்றி விமர்சித்து வந்த போது, அவர்கள் செய்யும் தவறுகளை பகிரங்கமாக எதிர்த்து அறிக்கைகள் கொடுத்து வந்த போது தங்களின் துணிச்சல் கண்டு வியந்தோம், ஒரு நாள் தமிழகத்தை நீங்கள் ஆளப்ப்போவது உறுதி என்று உளமார சொன்னோம்...

ஆனால் கேப்டன் அவர்களே, சேலம் மாநாட்டுக்கு பிறகு உங்களின் போக்கில், பேச்சில், செயல்களில் செருக்கும், அகந்தையும், ஆணவமும், திமிரும் ஆக்ரமித்திருப்பதை கண்கூடாக காணமுடிகிறது..

சேலம் மாநாட்டிலேயே நீங்கள், தண்ணீரில் நீந்திக் கொண்டு பேசினீர்கள் என்பதை உங்கள் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது, ஆனாலும் அதை ஒரு குறையாக நாங்கள் கருதவில்லை..

அதிமுக கூட்டணியில் உண்டான சலசலப்பில், உங்கள் தலைமையின் கீழ் மூன்றாம் அணி உருவாக வாய்ப்பிருக்கிறது என்றொரு சூழல் உண்டான போது, நீங்கள் தலைமை ஏற்க வேண்டும், இரு திராவிட கட்சிகள் கண்களிலும் விரலைவிட்டு துளாவ வேண்டும் என்று ஒருமித்த ஆசை கொண்டோம், ஆனால் அது நிகழவில்லை..

ஆனாலும் அதற்காக நாங்கள் உங்கள் மீது அதிருப்தி அடையவில்லை, உங்கள் பயத்தை கண்டு உங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை, உங்களின் முடிவுக்கு பின்னால் ஒரு நியாயமான காரணமிருக்கும் என்று நம்பினோம்...

ஆனால் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கைகளை மட்டுமல்ல மதிப்பையும் நீங்கள் குறைத்துக் கொண்டே சென்று கொண்டிருக்குறீர்கள்..

கருணாநிதி தங்களை தன் நண்பர் என்று சொல்லி இருக்கிறாரே என்று பத்திரையாளர்கள் கேட்ட போது, சோ.ராமசாமி அவர்கள், அவர் அதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் என்னை நண்பர் என்று சொல்லி இருந்தால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதோடு, 13 ஆண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத ஒரு கட்சியை உடையாமல் கட்டுக்கோப்பாக பாதுகாத்து, எம்.ஜி.ஆருக்கு பின்னர் தேர்தலை சந்திந்து செய்து மீண்டும் முதலமைச்சராக அமர்வது என்பது சாதார்ண விடயமல்ல, உண்மையிலேயே அதன் பின்னால் இருக்கும் அவரின் உழைப்பு மிக அதிகமானது, குறைந்த கல்வி தகுதியே கொண்டிருந்தாலும், பிழையில்லாமல் ஆங்கிலமும் பேச இயல்கிறது அவரால். அனைத்திருக்கும் அவரின் உழைப்பே காரணம் என்று நாகரிகமாக பதில் சொன்னார் சோ.

சோ அவர்களின் இந்த செயலுக்கு பெயர் தானே சபை நாகரீகம் கேப்டன் அவர்களே, ஆனால் நீன்களோ கருணாநிதிக்கு ஒரு பைல் கூட பார்க்க தெரியாது என்று ஒரு நேரடி பதில் சொல்லும் நிகழ்ச்சியில் 5 முறை முதல்வராக இருந்வரை பற்றி கண்மூடித்தனமாக விமர்சனம் சொன்ன உங்களின் பேச்சு மீது முகசுழிப்பு உண்டாகாமல் இல்லை. நீங்கள் இது போல் அம்மையாரை குறித்து விமர்சித்தாலும் அது எங்கள் முகத்தை சுழிக்கவே வைக்கும். அம்மையார் அவர்களும் தமிழகத்தை இருமுறை ஆண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமா, சமீபகாலமாய் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிச்சயமாய் தெளிவு இல்லை..


கட்சி எம்.எல்.ஏவை எம்.ஜி.ஆர் கூட அடித்திருப்பதாக சொல்லுவார்கள், ஆனால் அவை சொல்லப்படுபவைகளே அன்றி நேரடியாக பொதுமக்கள் நடுவில் நிகழ்ந்தவை அல்ல..

ஒரு வேளை அப்படி ஒரு நிகழ்வு நிகழவே இல்லை, நான் அடிக்கவே இல்லை என்று நீங்கள் சொல்லியிருந்தால் கூட, அது தவறு இல்லை. ஆனால் என் வேட்பாளரை தானே நான் அடித்தேன், என் கிட்ட அடிவாங்கினவன் மகாராஜன் ஆவன் என்று சொல்வதில் என்ன பண்பு இருக்கிறது கேப்டன் அவர்களே.

உங்கள் கட்சியின் முதல் மாநாட்டின் போது, தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வ*ந்த முதியவரை கன்னத்தில் அறைந்தது எவ்வளவு பெரிய அநாகரீகம் கேப்டன் அவர்களே, நீங்கள் கட்சியை ஆரம்பித்திருப்பது எங்களை போன்ற மக்களை நம்பித்தான், நாங்கள் உங்களை வெறுத்துவிட்டால், உங்களை நிராகரித்துவிட்டால், உங்களின் நிலையென்ன என்று யோசித்துப்பாருங்கள்.

உங்களின் படத்தை பணம் கொடுத்து பார்த்தோம் என்பதற்காகவா ? அல்லது உங்களை நடிகராக ஏற்றுக் கொண்டோம் என்பதற்காகவா ? அல்லது நீங்கள் படித்தில் பேசியதை எல்லாம் கேட்டு விசிலடித்து கைத்தட்டினோம் என்பதற்காகவா ? எங்களை அறைகுறீர்கள். நாங்கள் உங்களின் அடிமைகளில்லை கேப்டன் அவர்களே.

என் மக்களை நான் கைவிடமாட்டேன், என் மக்களுக்கு நானிருக்கேன், என்றெல்லாம் பேசி கைத்தட்டு வாங்கினீர்களே, இப்படி எங்களின் முகத்தில் அறைவதுதான் நீங்கள் எங்களை கைவிட மாட்டேன் என்று சொன்னதின் பொருளா ?

"நான் பேசும் போது எவனும் பேச கூடாது"

"கொங்கு வேளாளர் என்ன நுங்கு திங்கிறவங்களா"

"கீழ எறங்குடா"

"யோவ் போலிசு, அவனை பிடிச்சு என்கிட்ட ஒப்படைங்க"

"புரட்சி தலைவி அம்மா, ஓ ஓ னுட்டு இருக்க"

"அந்த கொடிய கிழ போடுடா"

"அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் சிறையில் இருக்கார், அதனால் அதிமுகவின் கொள்கையும் சிறையில் இருக்கு, ராஜா சிறையில் இருக்கார்" (கேப்டன் அவர்களே, ராஜா திமுகவின் கொள்கை பரப்பு செயலாளார்)

"நான் என் கட்சிக்குத்தான் ஓட்டு கேக்க வந்திருக்கேன், அதிமுகவுக்கு இல்ல"

இன்னும் இன்னும் உங்களின் பிரச்சாரங்களின் நீங்கள் பேசும் பேச்சுக்கள், உங்களை நம்பி எங்களின் மனதை உலைச்சலுக்குத்தான் உள்ளாக்குகின்றன..

ஒரு பொது கூட்டம் என்றால் சலசலப்புக்கள், கோசங்கள், சத்தங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும், அதை எல்லாம் அமைதியாக்கி, மக்களை நாம் பேசுவை கேட்க செய்வதுதான் ஒரு தலைவன் திறமை, வைகோ, கலைஞர், அண்ணா, நாஞ்சில் சம்பத், நாவலர், புரட்சி தலைவர் எல்லோரிடமும் அது இருந்தது, இருக்கிறது.

"ஸூ பேச கூடாது"

"என்ன பேச விடு இல்ல நீ வந்து பேசு"

"பேசிக்கிட்டிருக்கேன்ல்ல"

இப்படி எங்களை மிரட்ட, நீங்கள் ஒன்றும் எங்களின் வாதியாரில்லையே கேப்டன் அவர்களே. நாங்கள் கீழே நின்று தங்களை அண்ணாந்து பார்ப்பதால் தான் உங்களால் மேலே நின்று பேச முடிகிறது. நீங்கள் மேலே நின்று பேசுவதற்கு பின்புலமாகவும், பக்கபலமாகவும் இருப்பதே இந்த கூட்டம் தான் கேப்டன் அவர்களே, அதை மறந்து, எங்களை அவமான செய்யாதீர்கள்.

அவங்களுக்கு ஆப்படிக்க ஆஃப் அடிக்கனும் என்று ஒரு பொது கூட்டத்தில் எப்படி உங்களால் கூச்சமில்லாமல் பேச முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது..

ஒரு கூட்டத்தையே உங்களுக்கு ஆள தெரியவில்லையே, நீங்கள் எப்படி தமிழ்நாட்டை ஆளுவீர்கள் ? பொருமை, பொறுப்பு, நிதானம், சொல்லாலுமை, கருத்தாளுமை, சபையாளுமை என்று எதுவுமே இல்லாத உங்களுக்காகவா நாங்கள் விரலில் மை வைத்துக் கொள்வோம். அப்படி நாங்கள் வைத்துக் கொண்டால் அது எங்கள் முகத்தில் நாங்கள் பூசிக் கொள்ளும் கரி மை அல்லவா ?


கேப்டன் அவர்களே, தங்களின் இந்த போக்கு, தங்களுக்கு இருக்கு 10 சதவிகித வாக்கு வங்கியை 1 சதவிகிதமாக மாற்றிவிடும், மக்கள் தங்களை மனப்பூர்வமாக வெறுக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் மீண்டு எழ பல ஆண்டு பிடிக்கும், அதற்குள் தங்கள் முதலமைச்சர் கனவு மற்ற சிறு கட்சிகளை போல நளித்துவிடும்..

அதிமுகவுக்கு, திமுகவுக்கு மாற்று நீங்கள் என்று மக்கள் நம்புவதை பொய்யாக்கி அவர்களின் முகத்தில் கரி பூசிவிடாதீர்கள், உங்களின் வண்ண வண்ண கனவுகளையும் தங்களின் அகந்தையால் கரியாக்கி கொள்ளாதீர்கள்..

முடிந்தால் தேர்தல் பிரச்சாரத்துக்கு குடித்துவிட்டு செல்லாதீர்கள், சென்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை எழுதிவைத்து வாசித்துவிட்டு போங்கள்..

பேசுவதற்கு முன் ஒருமுறை சிந்தித்து பேசுங்கள்..

புரட்சி தலைவர் சொல்லுவார், பேசாத வார்ததைக்கு நீ எஜமான், பேசிய வார்த்தை உனக்கு எஜமான், கவனத்தில் கொள்ளுங்கள்...

இப்படிக்கு ஒரு தமிழகத்தின் குடிமகன்...
 
Last edited:
நல்ல ஒரு அருமையான கடிதம்... எந்த காரணத்திற்காக அவர் கட்சி ஆரம்பித்தாரோ அதை விடுத்து வேறு பாதையில் செல்ல துவங்கி இருக்கிறார்.. அதை சீக்கிரமே உணர்ந்து சரியான பாதையில் சென்றால் இலக்கை அடையலாம்.. இல்லையென்றால் காலம் அவருக்கு சரியான தண்டனையை கொடுக்கும்..(நான் காலம் என்று சொல்வது மக்களைத்தான்..)
 
ஹாஹா.... என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ஆதி.
திமுக ஊடகங்கள் வேண்டுமென்றே பல விஷயங்களை ஊதி பெரிதாக்கிக் கொண்டிருக்கும் பொழுது விஜயகாந்த் அதற்கு மேலும் தூபம் போடும்படியாக பல செயல்களைச் செய்வது நல்லதல்ல.

தவிர இன்று ஊடகங்களில் பிரச்சாரம் என்ற பெயரில் இரண்டு பேர் அடித்துக் கொள்கிறார்கள்...
தமிழக அரசியலைக் கண்டால் வெட்கமாகவும் கோபமாகவும் வருகிறது!!
 
பொது இடத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்றுதெரியாதஒருவரிடம்,தான் குடிப்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் ஒருவரிடம்தமிழ் நாட்டை ஒப்படைத்தால் அதன் தலைவிதி என்ன ஆகும்?
 
நேற்றைக்கு வடிவேல் விஜயகாந்த தாக்கி பேசினது சன் டி.வி யில ஒளிபரப்பினாங்க...

அரசியல் இன்றைக்கு வ்வே....
 
பாமரனின் கடிதம் போல் ஆதனின் கடித்ததிலும் பல வரிகள் நச்..நச்.. நச்..

தீதும் நன்றும் பிறர்தரவரா. எனும் ஒரு வரி தத்துவத்தை குடிகாரன் கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஆதன் .

கலைஞருக்கு மறைமுறைமாக உதவும் விஜயகாந்த் தம்மை செம்மை படுத்திக்கொள்ளவேளை வந்து விட்டது, தாமதித்தால் நஷ்டம் தமிழ்நாட்டுக்கு தானே அன்றி விஜயகாந்த்/கலைஞ்ர்/ஜெ போன்ற தனி நபர்களுக்கு அல்ல
 
விஜயகாந்த் தன்னை செம்மை படுத்திக்கொள்வதா?

என்ன ஒரு கற்பனை

இருந்தாலும் அவர் கொஞ்சம் நடிக்கலாம்

எப்படி நடிக்க முயச்சித்தாலும்
உள்ளபோனக் குதிரை சும்மா இருக்குமா என்ன?

அதான் அழகான் வர்த்தைகளா வந்து விழுகிறது நம்ப கருப்பு..........எம் ஜி ஆருக்கு .
 
விஜய காந்த் ஒரு சின்ன ஜெ. என்பதுதான் என் எண்ணம். மு.க. எதிர்ப்பு ஒட்டுக்கள் மட்டுமே இவர்களது குறி.

மற்றப்படி இவர் அதிமுக உடனோ அல்லது மற்ற கட்சிகளுடனோ கூட்டணி சேராமல் தனித்து நின்றிருந்தால், கண்டிப்பாக இவரின் ஒட்டு வங்கி குறைந்தே இருக்கும். ஏனென்றால் மு.க.வை திட்டுவதை தவிர்த்து வேறெதுவும் செய்ய வில்லை. இனி ராமதாஸை போன்று 30 சீட்டுகள் வாங்கி கொண்டு ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்தே காலத்தை தள்ள வேண்டியது தான்.
 
கீழே விழுந்த மைக்கை எடுத்தவரை, தன் கட்சியின் வேட்பாளரை அடித்தார் என, வீடியோவை எடிட் செய்து, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருணாநிதியின் புரட்டுச் சேனல்களை பிரதிபலிப்பதாய் இருக்கிறது இந்தக் கடிதம். இலவசங்கள் வாங்கித்தான் பிழைப்பை நடத்தவேண்டுமென்ற விதி இருக்கிறவர்களுக்கு வேண்டுமானால் இது நன்றாக இருக்கும். ஆனால், உழைத்துப் பிழைக்க வேண்டுமென்ற உயர்ந்த லட்சியத்திலிருப்போருக்கு...இதெல்லாம்......துடைத்து வீசும் காகிதம்.

கருணாநிதி என்ற நச்சுப்பாம்பை....எப்பாடு பட்டேனும் அகற்ற வேண்டுமென்பதே மானமுள்ள தமிழனின் ஆசை.

அடிமைகளாய், பிச்சைப் பாத்திரமேந்தித்தான் பிழைப்பை நடத்துவோம், நிதிகளின் காலடியில் மிதியடிகளாய் வீழ்ந்திருப்போம் என நினைக்கும் நபும்சக நரகல்களுக்கு வேண்டுமானால் இந்தக் கடிதம் பலாச்சுளையாய் இனிக்கும்....ஆனால்....தன் சுய புத்தியினால், சுய உழைப்பினால் வாழ நினைக்கும் எந்த மானமுள்ள தமிழனுக்கும்....கருணாநிதியின் சதி சேனல்களின் குரலில் பேசும் இக்கடிதம்...கசக்கும்.
 
Last edited:
சிவா அண்ணா, நேற்றிரவு நாம் இது குறித்து பேசினோம், உங்களிடம் சொல்லாமல் விட்ட சிலவற்றை இதில் சேர்க்கிறேன்..

இந்த கடிதத்தின் நோக்கத்தை மொக்கசாமி அண்ணாவின் பதிலில் நீங்கள் காணலாம் அண்ணா..

என் தம்பியின் நெருங்கிய நண்பன் விழுப்புரத்தில் தேமுதிக செயலாளராக இருக்கிறான், அவனிடமும் இது குறித்து கேட்ட போது அடித்தது உண்மை என்றே ஊர்ஜிதம் செய்தான்..

விஜயகாந்த் மனைவியான பிரேமலதா பேட்ரி சரியாக வேலை செய்யவில்லை, அதை தட்டினார், அதைத்தான் அடித்தாக சொல்லிவிட்டார்கள் என்று சொல்கிறார்..

உடனே தஞ்சாவூரில் ஒரு கூட்டத்தில் இருந்த இலா.கணேசன் அவர்கள், விஜயகாந்தே அடித்ததை ஒப்பு கொண்டுவிட்ட பிறகு அவரின் கட்சிக்காரரான பிரமலதா அவர் பேட்ரியை தட்டினார் என்று சொல்வது முழு பொய் என்று சொன்னதற்கு தேமுதிக தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை..

அதிமுக கொடிகளை இறக்க சொன்ன விஜயகாந்த், "யோவ் போலிசு, அவன என் கிட்ட ஒப்பட" என்று சொன்னாரே.. ஒருவேளை போலிஸ் அந்த அதிமுக தொண்டரை ஒப்படைத்திருந்தால், அவனுக்கும் அடி விழுந்திருக்குமா ? விழுந்திருக்காதா ?

கேப்டன் டிவியில் ஒளிப்பரப்படும் அவரின் பிரச்சாரத்தில், அடிக்கடி அவர் மக்களை கடித்து கொள்வதையும் போடுகிறார்கள், அதில் அவர் சொல்கிறார், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்க வந்திருக்கீங்க, நீங்க கத்துறத கேக்க நான் அவரல, நீங்க இப்படியே சந்தம் போட்டுக்கிட்டு இருந்தா, நான் கொழம்பிருவேன், அப்புரம் பேச வேண்டியது எல்லாம் எனக்கு மறந்துடும்..

இந்த வார்த்தைகள் தான் என்னை கடிதம் எழுதவே தூண்டின..

தமிழகத்தை ஆளப்போகிறேன் என்று சொல்லும் கேப்டன் அவர்கள், ஒரு பொதுக்கூட்டத்தை ஆள இயலவில்லை என்கிறார்..

கூட்டத்தாரின் சலசலப்பை மீறி அவரால் பேச இயலவில்லை, அப்படியே பேசினாலும், திமுக என்று சொல்ல வேண்டிய இடத்தில் அதிமுக என்று சொல்கிறார்..

நாளைக்கு 10-15 எம்.எல்.ஏகளுடன் சட்டமன்றத்துக்கு சென்றால், அதிமுகக்காரர்களும், திமுகக்காரர்களும், மற்றக் கட்சிக்காரர்களும் இப்படி கூச்சல் போட்டு அவரை பேசவிடாமல் செய்தால், அவர்களையும் எகிறி எகிறி அடிப்பார் தானே ??

ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள் அண்ணா, இன்றைய தேதிக்கு தேமுதிகவுக்கு ஆளும் கட்சிக்கு எதிராக பேசித்தான் கட்சியை நடத்த வேண்டிய நிலைமை, அப்படி செய்தால் தான் கட்சியை வலர்க்க இயலும், நாளை அதிமுக ஜெய்து வந்தாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சியாகத்தான் செயல்படுவார், அப்போது சட்டமன்றத்தில் அம்மாவோ அல்லது மற்ற அமைச்சர்களோ பேசவிடாமல் தடுத்தால், அவர்கள் மீதும் கைநீட்டத்தானே செய்வார்....

இது திமுக/அதிமுக ஆதரவு கடிதம் அல்ல, விஜயகாந்த் தன்னை மாற்றிக் கொள்ளாவிடில் அவரை நம்பும் மக்கள், அவர் நம்பும் மக்கள், அவரை வெறுத்துவிடுவார்கள் என்று சொல்ல முயலும் ஒரு ரெட் அலர்ட் கடிதம்...
 
ம்ம்ம் பீகார் கூட முன்னேற பாதையில் வெற்றி நடை போடா ஆரம்பித்து விட்டது. நம் தமிழ் நாட்டுக்கு மட்டும் விடியலுக்கு இன்னும் ஒரு வழியும் தெரியலியே ஆதன். பாவம் இங்கே மதுரை கலெக்டர் படும் அவதியை அவர் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டார். இங்கே நேர்மையான மனிதர்களை அரசியல்வாதிகளுக்கு பிடிப்பதில்லை................:icon_p:
 
90 சதவிகிதம் கல்வியறிவு கொண்ட மாநிலமாக தமிழகம், மக்கள் தொகை கணக்கெடுப்பில் சொல்லப்பட்டிருக்கு...

நாம முன்னேற்ற பாதையில் தான் போகிறோம், என்ன நமக்கு இன்னும் தைரியம் வரல, இதுவரை ஓ49 கையில் எடுக்க நாமேன் முனையவில்லை...

வாக்குச்சாவடி அதிகாரியிடம் அடையாள அட்டைய காண்பித்து, அவர் சரிப்பார்த்த பின்னர், நம்மை அவர் கையெழுத்திட சொல்வார் அல்லவா, அந்த கையெழுத்திடம் கட்டத்துக்கு அடுத்தக் கட்டத்திலும் சேர்த்து கையெழுத்திட்டாலே போதும் ஓ49 போட, மற்றபடி பாரம் எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை..

ஒரு முறை ஒட்டு மொத்தமாய் ஓ49 கையில் எடுத்தால் இந்த அரசியல் வாதிகள் கொஞ்சமாவது அஞ்ச ஆரம்பிக்கார்கள்...

ஆனால் நமக்கெப்போது அந்த மனநிலை வர போகிறது என்று தெரியவில்லை...
 
Last edited:
மன்னிச்சுக்குங்க ஆதன். நான் தமிழனாய் நிமிர்ந்து நிறக வேண்டும். அதற்கு தீய சக்திகள் அழிய வேண்டும்...அது எந்த கழகமாய் இருந்தாலும் பரவாயில்லை.
 
மன்னிச்சுக்குங்க ஆதன். நான் தமிழனாய் நிமிர்ந்து நிறக வேண்டும். அதற்கு தீய சக்திகள் அழிய வேண்டும்...அது எந்த கழகமாய் இருந்தாலும் பரவாயில்லை.

அண்ணா உங்கள் ஆசை நிறைவேற வேண்டுமானால் கூட விஜயகாந்த் தன்னை ஒழுங்க வைச்சுக்கனுமில்லையா..

திமுக அதிமுக எதிர்ப்பு ஓட்டு தேமுதிகவுக்கு விழுது, விஜயகாந்த் செய்வதை பார்த்து, இவங்க எல்லாரும் இப்படித்தான் என்று தேமுதிகவுக்கு ஓட்டு போடுறவங்க ஓட்டு போடாம விட்டுடா, தேமுதிகாவால் அதிமுகவுக்கு கிடைக்க போகிற ஓட்டு கூடா கிடைக்காம போய்டும், ஏற்கனவே வைகோவால் அதிமுக இழந்திருக்கும் ஓட்டெண்ணிக்கை 5 சதவிகிதம். இப்படி நடந்தா என்ன விபரீதமெல்லாம் நடுக்கும் னு உங்களுக்கு புரியுமே அண்ணா...
 
மன்னிச்சுக்குங்க ஆதன். நான் தமிழனாய் நிமிர்ந்து நிறக வேண்டும். அதற்கு தீய சக்திகள் அழிய வேண்டும்...அது எந்த கழகமாய் இருந்தாலும் பரவாயில்லை.

இப்போ சொன்னீங்களே இது சூப்பர் அண்ணா :icon_b::icon_b::icon_b::icon_b:
 
நாளைக்கு 10-15 எம்.எல்.ஏகளுடன் சட்டமன்றத்துக்கு சென்றால், அதிமுகக்காரர்களும், திமுகக்காரர்களும், மற்றக் கட்சிக்காரர்களும் இப்படி கூச்சல் போட்டு அவரை பேசவிடாமல் செய்தால், அவர்களையும் எகிறி எகிறி அடிப்பார் தானே ??

இப்படி ஒரு பாயிண்டை எதிர்பார்கவே இல்லை. நினைச்சு பார்த்தா ஒரு பக்கம் கேவலமா இருந்தாலும், பத்திரிக்கைகளுக்கு நல்ல தீனி கிடைக்கும். இனைய வாசகர்களுக்கு பொழுது நல்லாவே போகும்.
 
நான் மனதில் நினைத்ததை அப்படியே எழுதியுள்ளிர்கள் நண்பரே ஆதன் .
முதலில் மிகவும் எதிர்பார்ப்புடன் நினைத்திருந்த விஜய்காந்த், அதற்குபிறகு அவருடைய பல செயல்களில்னால் அவர் நிச்சயம் ஓரு மாற்று நபரல்ல என்பதை உணர்த்திவருகிறார்.
அவர் இந்த தேர்தலில் தோற்று அதனால் மிகவும் பண்பட்ட அரசியல் தலைவராக வர வேண்டும் என நினைகிறேன். இம்முறை தோற்றால்தான் அவருக்கு அவரின் தவறுகள் அவருக்கும் அவரை சுற்றி உள்ள நபர்களுக்கும் புரியும்.
தேர்தல் ஓன்றும் அவர் நடித்து அவரே இயக்கும் திரைபடமல்ல.

அவரும் திரு.வை.கோவும் சிறப்பாக வந்தால், குடும்பம் சூழ்ந்த ஒரு கழகத்துக்கும், ஆணவமும் ஓரே ஓரு நட்பும் அதன் கூட்டமும் சூழ்ந்துள்ள இன்னோரு கழகத்துக்கும் மாற்று கிடைக்கும்.

நண்பர்களே எந்த காரணத்தினாலும் வோட்டு போடாமல் இருந்துவிடாதீர்கள். அவரவர் அவரவர் தொகுதியில் நிற்க்கும் சுயேட்ச்சை உட்பட அனைவரை பற்றி முடிந்தவரை விசாரித்து எவர் நல்லவர் என தீர்மானித்து வாக்கை செலுத்துங்கள். யாருமே சரியில்லை என்றால் எவர் பரவாயில்லை எனவாவது கணித்து வாக்களியுங்கள்.
கட்சிக்காகவோ தலைவ்ரின் முகத்துக்காகவோ அவர்களின் தேர்தல் நேர பேச்சுக்காகவோ வாக்களிக்காதீர்கள்.
யார் ஆட்ச்சியில் அமர்ந்தாலும் அமரட்டும், முடிவை ஆண்டவனிடம் விட்டுவிடுங்கள். நடப்பவை எதுவாயினும் நல்லதை நோக்கியே செல்லும் நம் எதிர்காலம் என நம்புங்கள்.

நமது சமுதாயத்துக்கு எதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால் முடிந்தவரை தண்னிரில் தள்ளாடும் நம் தலைமுறையில் இருந்து வெகு சிலரையாவது திருத்த முயற்ச்சியுங்கள்; பணத்தை அனாவசியமாக செலவழிக்காமல் சேமிக்க கற்றுகொடுங்கள்.
 
ஆதன்...
உங்கள் ஆதங்கம் புரிகிறது.

ஆனால்
ஆ!தங்கம் என்று விஜய்காந்தை நீங்கள் வரிந்ததும்
ஆ..........தங்கம் என்று வேதனையுடன் கடிதம் வரைந்ததும்
உங்களைப் போன்ற ஒரு பிரம்மாவுக்கு நேர வீண் விரயம் என்பேன்.

எந்த மாற்றுச் சக்தியாலும் மாற்று ஆகாது.
எந்த மாற்றும் எதையும் மாற்றவும் மாட்டாது.

மாற்றம் மட்டுமே மாற்று ஆகும்... ஆக்கும்.
மாற்றம் ஏற்படுத்த வல்லவர்கள் மக்கள் மட்டும்தான்.
 
மாற்றம் ஏற்படுத்த வல்லவர்கள் மக்கள் மட்டும்தான்.
மக்களின் மாற்றமே மாற்றத்தை ஏற்படுத்தும்
மக்கள் மாற பிரம்மாக்கள் மிக மிக அவசியம் அமரன்.
 
Back
Top