நல்ல ரசம் வைக்க கற்றுக் கொடுங்களேன்... ப்ளீஸ்...

விஷம் வைக்காதீங்க... விஷம் வைக்காதீங்க...
தக்ஸுக்கு விஷம் வைக்காதீங்க...
வைச்சாலும் பிரயோசனம் இல்லை...
தக்ஸுக்கு விஷமெல்லாம் மேட்டரே இல்ல...

தக்ஸ கவுக்கிறதின்னா, பேசாம உங்க ரசத்தையே வச்சுடுங்க... :rolleyes:

எங்க உங்க கொள்கையில் இருந்து மாறியாச்சோனு பயந்துட்டேன்
முதல்வரியை பார்த்து
கடைசியில நீங்களும் என்ன மாதிரிதான்னு
நிருபீச்சிட்டிங்க :lachen001::lachen001::lachen001::lachen001:
 
இவ்வளவு முறைகளில் ரசம் ( சிலர் மிகவும் ஆசையுடன் 'ரெசம்' என்பர்) செய்து சாப்பிட்டாலும், கைபக்குவமுள்ளவர்களுக்குதான், அதுவும் அவர்கள் மிகவும் விரும்பிசெய்தால் தான் பெஸ்ட்டான டேஸ்ட் வரும்.


சைவத்துக்கும் அசைவத்திற்க்கும் பொதுவானது ரசம் தானே. இதற்கு தனி திரி ஆரம்பித்த ர ரா விற்க்கு ஒரு ஜெ.

கறிக்கொழம்பில் ரசம் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்.. சூப்பராக இருக்கும்
பெருமூச்சு விடும் சைவர்களே நல்ல மணமான ( முருங்கைக்காயும், மாங்காயும் அளவாக போட்டு வைத்த) சாம்பாரில் ரசம் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள், இதுவும் சூப்பர்தான்.

ஆனால் இவற்றைவிட சுட சுட சாதத்தில் ரசம் நிறைய விட்டு குழைய பிசைந்து, சிறிது தேங்காய் துவையலோ (அ) பக்கொடாவோ வைத்து சாப்பிட்டு பாருங்கள், அருமையோ அருமை.
 
ரசத்தில் பல வகை உண்டு .இது ஒரு தனி வகை.

திராட்சை ரசம்

தேவையானவை

கறுப்பு திராட்சை ---100 கிராம்
துவரம் பருப்பு ---1கப்
புளி கோலி குண்டு அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்த அரைக்க
மல்லி விதை(தனியா)---2 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--2
சீரகம்---கால் ஸ்பூன்
மிளகு ---அரை ஸ்பூன்
துவரம்பருப்பு---1ஸ்பூன்

துவங்கும் முன் செய்து வைக்க வேண்டியவை

புளியை கெட்டியாக கரைக்கவும்.
துவரம்பருப்பை வேகவைத்து குழைத்துக் கொள்ளவும்.
திராட்சையை ஜூஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ரசத்தின் துவக்கம் இங்கே

புளி கொதித்ததும், வறுத்து அரைத்த பொடி,மஞ்சள் பொடி சிட்டிகை.உப்பு தேவையான அளவு சேர்த்து கொதி்க்கவிடவும்.
பருப்பு தண்ணீர், திராட்சை ஜூஸை அதில் சேர்க்கவும். நுரைத்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

தாளிக்க
ஒருஸ்பூன் நெய்யில்
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
 
ரசத்தில் பல வகை உண்டு .இது ஒரு தனி வகை.

திராட்சை ரசம்

தேவையானவை

கறுப்பு திராட்சை ---100 கிராம்
துவரம் பருப்பு ---1கப்
புளி கோலி குண்டு அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்த அரைக்க
மல்லி விதை(தனியா)---2 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--2
சீரகம்---கால் ஸ்பூன்
மிளகு ---அரை ஸ்பூன்
துவரம்பருப்பு---1ஸ்பூன்

துவங்கும் முன் செய்து வைக்க வேண்டியவை

புளியை கெட்டியாக கரைக்கவும்.
துவரம்பருப்பை வேகவைத்து குழைத்துக் கொள்ளவும்.
திராட்சையை ஜூஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ரசத்தின் துவக்கம் இங்கே

புளி கொதித்ததும், வறுத்து அரைத்த பொடி,மஞ்சள் பொடி சிட்டிகை.உப்பு தேவையான அளவு சேர்த்து கொதி்க்கவிடவும்.
பருப்பு தண்ணீர், திராட்சை ஜூஸை அதில் சேர்க்கவும். நுரைத்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

தாளிக்க
ஒருஸ்பூன் நெய்யில்
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
 
விஷம் வைக்காதீங்க... விஷம் வைக்காதீங்க...
தக்ஸுக்கு விஷம் வைக்காதீங்க...
வைச்சாலும் பிரயோசனம் இல்லை...
தக்ஸுக்கு விஷமெல்லாம் மேட்டரே இல்ல...

தக்ஸ கவுக்கிறதின்னா, பேசாம உங்க ரசத்தையே வச்சுடுங்க... :rolleyes:
தண்ணி ஊத்தி அணைச்சிடுவேன் அக்னியாரே.. தக்ஸ்க்கு சப்போர்ட் பண்ணினா... உங்களுக்கும் அவன்கிட்ட கொடுத்து அனுப்புறேன்... கொலை பண்ணிடுவேன் ஜாக்கிருதை...:sauer028:
 
தண்ணி ஊத்தி அணைச்சிடுவேன் அக்னியாரே.. தக்ஸ்க்கு சப்போர்ட் பண்ணினா... உங்களுக்கும் அவன்கிட்ட கொடுத்து அனுப்புறேன்... கொலை பண்ணிடுவேன் ஜாக்கிருதை...:sauer028:
நல்லவேளை... தண்ணியை ஊத்திடுவேன்னு சொன்னதுக்கு...
இதுவே, ரசத்த ஊத்திடுவீங்களானா என் நிலமை என்னாகிறது... :confused: :rolleyes:
 
கற்பனையல்ல... நிஜம்...

அக்னி அலைபேசியில் சிவா.ஜி யோடு...

அக்னி: freeயா நிக்கிறீங்களா... இல்லே வேலையா...

சிவா.ஜி: இதுவரைக்கும் freeயாத்தான் நின்னேன். இப்போ லஞ்ச் பிரேக்.

அக்னி: சாப்பிட ரெடியாயிட்டீங்களா...

சிவா.ஜி: வேனில காம்புக்குக் கூட்டிட்டுப் போய்விடுவாங்க. அப்புறம்தான்...

அக்னி: ராஜஸ்தான் ஸ்பெஷல்???

சிவா.ஜி: நம்மூருதுதான். ஏதாச்சும் ரசம், சாதம் எல்லாம் கிடைக்கும்.

அக்னி: எனக்கு ரசத்தில வரைட்டீஸ் தெரியாதுங்க...

சிவா.ஜி: அப்பிடியா... இந்தியா வாங்க. வச்சுத்தாறேன்.

அக்னி: நம்ம ஜானகி அம்மா ரசம் மாதிரியா...

சிவா.ஜி: அதெல்லாம் ஜூஜுபி... நாம பச்சிலர்ஸ்ஸா இருக்கேக்க, ரசம், சாம்பார் இரண்டையும் ஒண்ணாவே வைப்பமில்ல...

அக்னி: எப்பூடி...

சிவா.ஜி: அதுவா... சாம்பார கொஞ்சம் அதிகமா தண்ணியூத்தி வச்சு...

அக்னி: ம்ம்ம்...

சிவா.ஜி: எல்லாம் அவிஞ்சதுக்கப்புறமா, அடையவிட்டு...

அக்னி: :confused: :confused: :confused:

சிவா.ஜி: மேல இருக்கிறத அள்ளியெடுத்தா ரசம், கீழே இருக்கிறத கலக்கி எடுத்தா சாம்பார்... எப்பூடீ...

அக்னி: அலோ... அலோ... ட்டீட்... ட்டீட்... ட்டீட்...
 
கவலை படாதீங்க அன்பர்களே .என் மனைவி ரசம் வைக்கிறதுல கில்லாடி. விதவிதமா ரசம் பண்ணாவாள். அவளிடமிருந்து களவாடிய ரசத்திற்கான குறிப்பு தரேன்.
1. ரச வாங்கி
பிஞ்சு கத்தரிக்காய் கால்கிலோ, துவரம் பருப்பு ---100கிராம், புளி --நெல்லிக்காய் அளவு, தக்காளி --1 கல் உப்பு --1 ஸ்பூன்
வறுத்து அரைக்க
மல்லி விதை--3 ஸ்பூன், மிளகு --1 ஸ்பூன், சீரகம்--அரை ஸ்பூன், துவரம் பருப்பு,,1 ஸ்பூன், மிளகாய் வற்றல்---3
இதை யெல்லாம் எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்யவும்.

கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி லேசாக வதக்கவும். துவரம் பருப்பை குழைய வேக வைக்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து கொதிக்கவிடவும். அரைத்த ரசப்பொடி , உப்பு தக்காளி, மஞ்சள் பொடி சிட்டிகை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வதக்கிய கத்தரிக்காயை சேர்க்கவும்.
கொதிக்கும் போது பருப்பை நன்கு மசித்து 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து கடையவும். அந்த பருப்பு தண்ணீரை கொதிக்கும் புளி கரைசலில் ஊற்றி கொதிக்க விடவும். நுரைத்து வந்தால் போதும். கீழே இறக்கி கொத்தமல்லி தழை தூவி, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு சீரகம் பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.


2. எலுமிச்சை ரசம்.
தேவையானவை
துவரம்பருப்பு 100கிராம், எலுமிச்சம் பழம்--2 , வறுத்து அரைத்த மிளகு சீரகத்தூள் --1ஸ்பூன், பச்சைமிளகாய் --5---8 (காரத்திற்கேற்ப அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்), கல் உப்பு --1ஸ்பூன்

தண்ணீரில் ,மஞ்சள் தூள் சிட்டிகை, கீறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும், கொதிக்கும் போது பருப்பை கடைந்து சேர்த்து 1 தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொத்தமல்லி தழையை நறுக்கி போடவும். இறக்கிய பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். கொதிக்கும் போது சேர்த்தால் கசந்து விடும். சீரகம், கடுகு தாளிக்கவும்.

மிச்சத்தை நாளை அவளிடமே கேட்டு உங்களுக்கு தருகிறேன்.
 
மிச்சத்தை நாளை அவளிடமே கேட்டு உங்களுக்கு தருகிறேன்.

பரவாயில்ல. அவங்கள மிச்சம் வைக்கச்சொல்லிக் கஸ்ரப்படுத்தாதீங்க...
நீங்க சொன்னத வச்சு நாங்களே செய்து பார்த்துக்கிறோம்... :cool:

நன்றி நண்பரே... (எப்படி அழைப்பது...)
 
சிவா.ஜி: வேனில காம்புக்குக் கூட்டிட்டுப் போய்விடுவாங்க.
.

வேனில் என்றால் வெயில்.... வெயிலுக்கு எதுக்கு கூட்டிப் போகவேண்டும்?
காம்பு ?? அதென்ன பூ?
பூவைத் தாங்கி நிற்கும் காம்பு??
வெயில் காம்புக்கு எதுக்கு கூட்டி போகணூம்? ஒருவேளை இது ஏதாவது சங்கேதபாசையாக இருக்குமோ??

புரியும்படி சொல்லுங்கப்பூ.. நாங்க ராவான ரவுடிங்கதான், ஆனா கணக்குல கொஞ்சம் வீக்கு!
 
வேனில் என்றால் வெயில்.... வெயிலுக்கு எதுக்கு கூட்டிப் போகவேண்டும்?
காம்பு ?? அதென்ன பூ?
பூவைத் தாங்கி நிற்கும் காம்பு??
வெயில் காம்புக்கு எதுக்கு கூட்டி போகணூம்? ஒருவேளை இது ஏதாவது சங்கேதபாசையாக இருக்குமோ??

புரியும்படி சொல்லுங்கப்பூ.. நாங்க ராவான ரவுடிங்கதான், ஆனா கணக்குல கொஞ்சம் வீக்கு!

:lachen001::lachen001::lachen001::lachen001:
 
பரவாயில்ல. அவங்கள மிச்சம் வைக்கச்சொல்லிக் கஸ்ரப்படுத்தாதீங்க...
நீங்க சொன்னத வச்சு நாங்களே செய்து பார்த்துக்கிறோம்... :cool:

நன்றி நண்பரே... (எப்படி அழைப்பது...)

மன்றத்தி்ன் சுடருக்கு எப்படி அழைப்பது என்பது ஒரு சந்தேகமா? மிச்சத்தை என்று நான் கூறியது மற்ற ரச வகைகளின் குறிப்பை. எனக்கு கணக்கே தெரியவில்லை மொத்தம் 15 வகை ரசம் செய்வாள் என்று தோன்றுகிறது.
 
ஆஹா...இரசம் வைப்பதில் இவ்வளவு விடயம் உள்ளதா?
நான் ஒரு தமிழ் ஆசிரியருக்கு இப்படி ஒரு குறள் எழுதினேன்:
"கொள்ளுரசம் வைத்தே கொடுத்திடுக கூடவே
வெள்ளைப்பல் வெந்தநறும் பூண்டு"

:):lachen001::)
 
இந்த முறையைப் பின்பற்றிப் பாருங்களேன்:
கடுகு,பெருங்காயம், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டு நறுக்கிய மல்லித்தழை 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் கிள்ளியது - 3, அனைத்தையும் சிறிது நல்லெண்ணெயில் வாசனை வரும்வரை வதக்கி 1 எலுமிச்சை அளவு புளி கரைத்த நீரை ஊற்றி ஒரு மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள், சிறிது மஞ்சள்தூள்,உப்பு, 1 தக்காளி (நறுக்கியது), உப்பு கலந்து சற்றே கொதித்ததும் இறக்கவும்.
 
கற்பனையல்ல... நிஜம்...


சிவா.ஜி: அதுவா... சாம்பார கொஞ்சம் அதிகமா தண்ணியூத்தி வச்சு...

சிவா.ஜி: மேல இருக்கிறத அள்ளியெடுத்தா ரசம், கீழே இருக்கிறத கலக்கி எடுத்தா சாம்பார்... எப்பூடீ...

அப்படியே இன்னொரு விஷயமும் பாச்சிலர்ஸ் கண்டுபிடிச்சுருக்காங்க....கடலைப் பருப்பில் சாம்பார் வைத்தால் அது வடகறி.....
 
துபாயில் நாங்களே (ஆண்கள்) சமைப்பதால் நான் வைக்கும் முறையை சொல்கிறேன்.

ஒரு எழுமிச்சை அளவு புளியை ஊரவைத்து வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளுங்கள்.

சிறிய ஒரு தக்காளி நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள். சிரிய வெங்காயம் ஒரு 5 நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். மல்லி இலை கொஞ்சம் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பட்ட மிலகாய் 3 அல்லது 4

5 பல் பூண்டு உரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கால் டீ ஸ்பூன் மிலகு, கால் டீ சீரகம், 20 அல்லது 25 பீஸ் பெருஞ்சீரகம் இவை மூன்றையும் நன்றாக பொடியாக்கியதும், அதில் உரித்து வைத்திருக்கும் பூண்டை உடைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காந்ததும், முதலில் கடுகு போட்டு வெடித்ததும், வெங்கயாத்தை போட்டு வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கும் போதே பட்டமிலகாயை போடுங்கள், வெங்காயம் நன்றாக வதங்கியதும், பொடியாக வைத்திக்கும் கலவையை போட்டு வதங்குங்கள், பூண்டு வெந்ததும் மணம் வரும் அந்த சமயத்தில் தக்காளியை போட்டு வதங்குங்கள், அதன் பின் கொஞ்சம் மஞ்சல் பொடி, பெருங்காயப்பொடி போட்டு வதங்குங்கள், இவை அனைத்தும் வதங்கியதும், வடிகட்டி வைத்துள்ள புளி தண்ணியை ஊற்றி, அதன் மேல் நறுக்கிவைத்திருக்கும் மல்லி இலையை போட்டு மூடிவிடுங்கள்.

பொதுவாகவே ரசம் கொதிக்கவிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆகவே நுறை தள்ளி வரும் சமயம் பார்த்து அடுப்பை அனைத்துவிடுங்கள். சாப்பிடும் நேரத்தில் உப்பு போட்டுக்கொள்ளுங்கள்.


அடுப்பில் சட்டியை வைத்ததும், அடுப்பை பற்றவைக்க மறந்து விடாதீர்கள்....... ஹ ஹ ஹ

( எங்க ஊர் பக்கம் என் முஸ்லீம் நண்பர்கள் வீட்டி வைப்பாங்க பாருங்க ஒரு ரசம். அது போதுங்க சாப்பிட. எவ்வளவு முயன்றும் அது போல் இதுவரை என்னால் வைக்கமுடியவில்லை )
 
Back
Top