ஒரு மனுஷன் கொஞ்சம் அசந்து போயி இந்த பக்கம் வரலன்னா...
அதுக்குள்ள என்னை ஆஸ்பிட்டலில் அனுமதிச்சிட்டீங்களா..... மச்சி முரா உனக்கு இருக்குது....... அப்புறம் வந்து உன்ன ஊட்டான்ட பாக்குறேன் இரு.... மூஞ்ச கொயப்பி கையில குடுக்கிறேன்.....:sauer028::sauer028::sauer028:
கிரிக்கெட் மாற்றம், அரசியில் மாற்றங்கள் என்று கொஞ்சம் பிசியாகி விட்டேன்.
உலக கோப்பை போட்டியில், பாகிஸ்தானை வென்று இந்திய அணியினர் சொன்னார்களே.......
"வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா....." என்று
அந்த கொண்டாட்டத்தில் தான் ஜானகியம்மா சொன்ன ரசத்தை வைத்தேன்... இரவு 11 மணி.... நெய் ஊற்றி செய்யப்பட்ட வித்தியாசமான ரசம் அது... அவர்கள் சொன்ன செய்முறையில் தான் செய்தேன்....
சுட சுட பச்சரிசி சாதம், ஜானகியம்மாவின் ரசம், சைடு டிஷ்ஷாக அப்பளமும், துவரம் பருப்பு கொத்தமல்லி துவயல்.....
இவை அனைத்தையும் எதிரில் வைத்துக் கொண்டு, இரண்டு உள்ளங்கை அளவுள்ள தட்டில் ஆவி பறக்கும் சாதத்தை போட்டுக் கொண்டு, வெதவெத ப்பான ரசத்தை உள்ளங்கையில் குழி போல செய்துக் கொண்டு அதில் ஊற்றி, பயபக்தியோடு அதை உரிவதற்கு முன்பு, ரசத்தின் அருமையான மணம் மூக்கின் வழியாக மூளைக்கு சென்று, வயிற்றுக்கு வந்து என்னுடைய பசியை தூண்டும் அமிலங்களை சுரக்க வைத்தது. .........உருஞ்சினேன்.....
நல்ல அருமையான சுவை... அருமையான பசி....
நன்கு பழுத்த பப்பாளி பழத்தைப் போல வெந்திருந்த பச்சரிசி சாதத்தில், சதாபிஷேகம் செய்யும் தம்பதிகளின் தலையில் தண்ணீரை ஊற்றுவது போல ஜானகியம்மாவின் ரசத்தை ஊற்றி பிசைந்து, அப்பளத்தை கொஞ்சம் உடைத்து அத்துடன், விரல் இடுக்கில் ரசம் வழிய, ஒரு கை உருண்டையை சாதத்தை எடுத்து வாயில் போட்டு, பாதி விழுங்கி.... மீதி இருக்கும் நாக்கு கேப்பில்,.... கல்யாண சீமந்தத்தில் பெண்ணின் கன்னத்தில் தடவப்படும் சந்தனம் போல, கொஞ்சம் துவயலை எடுத்து தடவினேன்...... அடிநாக்கு வரை சுவைத்து அந்த ரசம்....
சொர்க்கம் வேறு எதுவும் இல்லை, இவ்வாறான சுவையான உணவுகளை மீறி.....
நன்றி ஜானகியம்மா.....
அடுத்து சகோதரிகள் கொடுத்த செய்முறைகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.... கீதம் அக்கா, லீலூமா, பூமகள்.
இதில் லீலூமா சொன்ன செய்முறை என்னை பயம் கொள்ள வைக்கிறது....... இருப்பதிலே செய்வதற்கு சுலபமானது ரசம் என்று சொல்லுவார்கள்..... ஆனால் இவளோ, கறிகுழம்பிற்கு வைக்கும் செய்முறைகளை விட அதிகமான செய்முறைகளில் ரசம் வைக்க சொல்லுகிறாள்...
அடுப்புல வைக்கனுமாம், இறக்கணுமாம், கொதிக்கணுமாம், தாளிக்கணுமாம்....... சாப்பிட்டு மயக்கம் போட்டு விழணுமாம், காரியத்துக்கு வரணுமாம், சொத்தை அவள் மேல் எழுதி வைக்கணுமாம்....... எத்தன..... ஹா ஹா செஞ்சி தான் பாப்போம்....
காரணம் அவள் நல்ல ருசியுடன் சாப்பிடக்கூடியவள் என்று எனக்கு தெரியும், அதுவும் ருசியா, நேற்று மதியம் போன் செய்து பேசினேன்...
"எப்படிடா இருக்க, என்ன அதிசயமா போனு"
"சும்மா தான், நீ எப்படி இருக்க"
"ம்ம் இருக்கேன்"
"ஏன் ஒரு மாதிரி பேசற உடம்பு சரியில்லையா"
"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல, ஒரு மாதிரி இருக்கு உடம்பு, பேசினா வாய் வலிக்குது"
"ஏன் சாப்பிடலையா"
"சாப்பிட்டேனே"
"என்ன சாப்பிட்ட" தெரியாமல் கேட்டு விட்டேன், அடுத்து ஐந்து நிமிடம் விளக்கத்தோடு என்ன சாப்பிடாள் என்பதை சொன்னாள்.
"சாதம், சாம்பார், ரசம்,............. கொள்ளு ரசம்"
"கொள்ளு ரசமா இந்த குதிரை சாப்பிடுமே அதுவா"
"அது மனுஷங்க சாப்பிடறது தான், குதிரைக்கு குடுத்து அதை கெடுத்துட்டாங்க"
"சரி சொல்லு"
"கொள்ளு ரசம், தயிர், பீட்ரூட் பொறியல், .....ம்ம் அப்புறம் பால்கோவா"
"இந்த மாதிரி தின்னா வாயி வலிக்காம என்ன செய்யும்"
"போடா நான் எப்பவும் இப்படி தான் சாப்பிடுவேன்"
புருஷன் சொத்தையெல்லாம் தின்னே அழிச்சுடுவா போல... ஹா ஹா இந்த பதிவை பார்த்து என்னை அவ கொல்ல போறா,...எத்தனை பேருக்கு இப்படி சாப்பிட கொடுத்து வைத்திருக்கும்,..... கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை தான்..... (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.... பயபுள்ள பொய் சொல்ட்டான் போல இருக்கு :lachen001::lachen001::lachen001