நல்ல ரசம் வைக்க கற்றுக் கொடுங்களேன்... ப்ளீஸ்...

வணக்கம் உறவுகளே...

சமையலில் எனக்கு எப்போதும் ஒருவிதமான ஈர்ப்பு உண்டு, செடிகள் எல்லாம் துளிர் விட ஆரம்பித்த போதே, போட்டோசின்தஸிஸ் என்ற முறைபடி தன்னை அறியாமல் பசி ஆற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. அதே போல தான் நானும் என் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் இருந்தே சமைக்க ஆரம்பித்து விட்டேன்......... ஆனால் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை, புத்தகத்தை படித்து தெரிந்துக் கொள்ளவில்லை,, எனக்கு பிடித்த பொருட்களைப் போட்டு சமைக்க ஆரம்பித்தேன், பிடித்து விட்டது. 13 வயதில் சமைக்க ஆரம்பித்தேன்.............. இப்போது 27........ ஆகிவிட்டது....... 14 வருடங்கள்.........

இப்போது எதற்கு இந்த முக் கதை சுருக்கம் என்கிறீர்களா.....

இந்த 14 வருடத்தில் எனக்கு வராத ஒரே பதார்த்தம் ரசம் மட்டும் தான்.....சிக்கன், மட்டன், மீன், நண்டு, கீரை, வாழைத்தண்டு, பீட்ரூட், இப்படி எல்லா விஷயத்தையும் பின்னி பெடல் எடுக்கும் எனக்கும் ரசத்திற்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம் தான்.. எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் என்பதாலோ என்னவோ, எனக்கு ரசம் மட்டும் செய்ய வரமாட்டுது....... அல்லது நான் செய்யும் டேஸ்டு எனக்கு பிடிக்க மாட்டுது.... இதுவரை வாழ்நாள் மறக்கமுடியாத சுவையான ரசம் இரண்டே முறை தான் சாப்பிட்டு இருக்கிறேன்....

முதல் முறை... கல்லூரி தோழி ஒருத்தி எடுத்து வந்து இருந்தாள்.... அந்த ரசத்தின் சுவை இன்றும் என்னுடைய நாக்கில் இருக்கிறது...

"ஏய் சூப்பர்டி எப்படி செஞ்ச"

"தெரியலையே டா"

"நீ தானே செஞ்ச"

"ஆமா"

"அப்புறம் எப்படினு சொல்லும்மா, நிஜமா சூப்பர் ரசம்"

"டேய் எனக்கு வெட்கமா இருக்கு இப்படியெல்லாம் சொல்லாத"

"வெட்கமா இருக்கா நான் என்ன தப்பாவா கேட்டேன், ரசம் எப்படி வச்சேன்னு சொல்லச்சொன்னா... சனியனே சொல்லித் தொள"

"டேய் சத்தியமா எனக்கு தெரியாது டா, எப்பவும் போல தான் வச்சேன்"

"நாசமா போச்சு போ, சரி இந்த என் சாப்பாடு, நீ உன் ரச சாப்பாட குடு"

"டேய் கைய வச்சிட்டேன்"

"நீ காலையே வச்சி இருந்தாலும் பரவாயில்லை குடு"

நான் புகழ்ந்த வெட்கத்தில் அவள் முகம் சிவந்து போனது, உண்மையில் அருமையான ரசம் அது..........

அடுத்ததாக, என் நண்பனின் ஓட்டலில் ஒருமுறை சாப்பிட்டேன்.... பிறந்தநாள் பார்ட்டி அது, சிக்கன், மட்டன், இறால், எல்லாம் சாப்பிட்டோம், வாயை திறந்தால் காக்கா கொத்தும் அந்தளவு சாப்பிட்டு விட்டு, அனைவரும் மலைபாம்பு கணக்கா கையை கழுவகூட எழுந்து செல்ல முடியாமல் சீட்டிலே அமர்ந்து இருந்தோம். அப்போது சமையல்காரர் ஒருவர் வந்து

"இந்தாங்க தம்பிங்களா, கொஞ்சம் ரசம் சாப்பிட்டு அப்புறம் கையை கழுவுங்க"

"அய்யய்யோ நம்மாள முடியாது சாமி"

"தம்பி சாதத்தோட சாப்பிட முடியலைன்னா, பரவாயில்லை கொஞ்சம் குடிங்க"

"ஏங்க என்னலா முடியாது வேணும்னா, எல்லாருடைய சட்டை பாக்கெட்டிலும் கொஞ்சம் ஊத்திட்டுப் போங்க, அப்புறம் நாங்க குடிச்சிக்கிறோம்"

சிரிக்க முடியாமல் அனைவரும் சிரித்தோம்....

எவ்வளவு சொல்லியும் வற்புறுத்தி எங்களை அவர் ரசம் குடிக்க வைத்தார். முதல் முடக்குலே, அனைத்தும் சீரணமாகி போனது போல ஒரு உணர்வு... மிக மிக அருமையாக இருந்தது... அவரை பாராட்டி விட்டு அனைவரும் நகர... நான் மட்டும் அவரின் பின்னாடி சென்று

"அண்ணே ரசம் சூப்பருண்ணே"

"தாங்க்ஸ் பா"

"எப்படி செஞ்சிங்க"... என்னை பார்த்து சிரித்தவர்...

"பொம்பளைங்க கிட்ட என்ன கேட்ககூடாது" என்றார். நான் சிரித்தபடியே

"சை.......ச்சி ச்சி ச்சி வ வ வ வயசு"

"ஆம்பளைங்க கிட்ட"

"அது எவ்வளவோ இருக்கு"

"சொல்றா தம்பி"

"சரி சம்பளம்".. அவர் எதுக்கு வராருனு எனக்கு புரிஞ்சிப் போச்சு....

"ம்ம் சமையல் காரர் கிட்ட"

"இத.... யாரு செஞ்சதுனு." ..... என் மனதிற்குள்.... ஹா ஹா ஹா அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் என்று நினைத்துக் கொண்டேன்... அவரும் சிரித்தபடி

"சமையல் காரர்கிட்ட கேட்க கூடாதது, இத எப்படி செஞ்சிங்கனு சொல்லுங்களேன்.... என்ற வார்த்தையை"

"இதுக்கு முன்னாடியே சொல்லமாட்டேன்னு நேரா சொல்லி இருக்கலாமே"

"சரி சாரி சொல்லமாட்டேன் தம்பி..." என்றார் அசராமல்...

மனதிற்குள் போடாங்கோ......... என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்....... ஆனால் உண்மையில் இந்த இரண்டு ரசங்களும் வாழ்நாளில் மறக்கமுடியாத ரசங்கள்........

மூன்றாவதாக அருமையான சுவையான ரசத்தை யாராவது வைக்க கற்றுத் தந்தால் பெருமைப்படுவேன்....... என் வரலாற்றில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்....... ஹா ஹா ஹா ஹா

எத்தனை விதமான ரசமாக இருந்தாலும் பரவாயில்லை..... செய்முறையை ஒழுங்காக பதியுங்கள்.... நான் கொஞ்சம் ட்யூப் லைட்......

நன்றி...
 
ரசத்தின் அருமைகளை கூறும் போது நமக்கும் நாவில் ஊருது ...என்னபண்ணுறது நமக்கும் சமையலுக்கும் ஆறாம் பொருத்தம் ..யாராவது வந்து சொன்னால் முயற்சி செய்து பார்க்கலாம் ரசத்தை சுவைக்க ....
 
நண்பா தக்ஸ்

எனக்கு ரசம் வைக்க தெரியாவிட்டாலும் உங்களுக்காக ரசம் சம்பந்தமா நம்ம கூகிள்ல
தேடி பார்த்தேன் அதில் பருப்பு ரசம்,தக்காளி ரசம், மைசூர் ரசம்,கிராம்பு ரசம், எலுமிச்சைரசம்,பூண்டு ரசம் என விதவிதமாக செய்முறையோடு ஏகபட்ட தளங்கள்
உள்ளன.ஆனால் அதை எடுத்து இங்கு பதியலாமா என்றால் (காப்பி, பேஸ்ட்) விதிமுறை தடுக்கிறது.
 
நமக்கு வேண்டியது நமது நண்பர்களின் அனுபவரசம் .அப்பத்தான் உண்மையான சுவையை நண்பர் கூற அதனை கண்களால் பருக முடியும்..இந்த சுவைக்கு ஈடாகுமா அந்த இணைய பதிவுகள் ..
 
நண்பா தக்ஸ்

எனக்கு ரசம் வைக்க தெரியாவிட்டாலும் உங்களுக்காக ரசம் சம்பந்தமா நம்ம கூகிள்ல
தேடி பார்த்தேன் அதில் பருப்பு ரசம்,தக்காளி ரசம், மைசூர் ரசம்,கிராம்பு ரசம், எலுமிச்சைரசம்,பூண்டு ரசம் என விதவிதமாக செய்முறையோடு ஏகபட்ட தளங்கள்
உள்ளன.ஆனால் அதை எடுத்து இங்கு பதியலாமா என்றால் (காப்பி, பேஸ்ட்) விதிமுறை தடுக்கிறது.

ஹா ஹா யார் பெத்த புள்ளையோ, ஒரு விதமான பயத்தோடயே மன்றத்துல சுத்திட்டு இருக்கு....:lachen001::lachen001:

மச்சி முரளி....

கூகுளி்ல் தேட எனக்கு தெரியாதா..:sauer028::sauer028::sauer028:

அதில் இருக்கும் முக்கால்வாசி பதார்த்தங்கள் செய்முறைகள் எல்லாம்.....

எதோ ஆர்மி ஆபிஸரின் கட்டளைகள் போல இருக்கும்,

தக்காளி தேவையான அளவு, உப்பு தேவையான அளவு,... கொதித்தவுடன் பாசிபருப்பை தேவையான அளவு போடவும்.( அந்த தேவையான அளவு எவ்வளவு தெரிந்தால் நான் ஏண்டா இத படிக்கப்போறேன் பக்கி)...... வேண்டுமானால் துவரம் பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம், பாசிபருப்பையும் கூட........ அப்புறம் முன்பே சொல்லி இருந்ததை போல (சொல்லி இருக்கவே மாட்டான்).. அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்......... அனைத்தையும் கூட்டி வைத்து அரை மணி நேரத்தில் சுட சுட தயாராக இருக்கும் எலி மருந்து....

சில நேரங்களில் பூனைக்கூட செத்துப் போயிடும்........ குழந்தைகள் கையில் படாதபடி இந்த பதார்த்தத்தை வைக்கவும்.......

இப்படி தான் ஒன்றுக்கு ஒன்று முறையில்லாத படி இருக்கும் முரளி.......

எனக்கு தேவை அனுபவ ரீதியான ரசம்,... அருமையான ரசம்.........

இன்று மதியமும் ரசம் வைத்து தோற்றுப் போனேன்........ கேவலமாக இருந்தது....... கொஞ்சம் பால் இருந்தால் அதை கூற்று காப்பியாவது போட்டு சாப்பிட்டு இருப்பேன்.......

அப்புறம் உன்னோட காதல் ரசம் எல்லாம் எனக்கு வேண்டாம், அது நாங்களே நல்ல வைப்போம்... இல்லைன்னாலும் பரவாயில்லை.... அந்த ரசத்தை பொறுத்தவரை வைக்க தெரிந்தவனை விட வைக்க தெரியாதவனுக்கு தான் லாபம் ஜாஸ்தி... ஏய்யா என்ன இப்படி பேசவைக்கிறீங்க........ எஜமா இந்த முரளி பய எப்பவுமே இப்படித்தான், குத்து எஜமா குத்துங்க....
 
தக்ஸ்

இப்பதான் தெரியுது ஜானகி மேடம் ஏன் இந்த பதிவ பாத்துட்டு ரசம் சம்பந்தமான
செய்முறையை சொல்லாமல் போனாங்கன்னு. இதுக்கே இப்படி நக்கல் அடிக்கறிங்க
அவங்க சொன்ன செய்முறை நல்லா இல்லாம போனா எப்படி நக்கல் அடிப்பிங்க
அதான்:lachen001::lachen001::lachen001:
 
ஜானகி அம்மாவை இத்திரிக்கு அன்புடன் அழைக்கின்றேன்...
அனுபவரசம் கிடைக்கும்...

ஒரு விடயத்தை இப்படிச் சுவாரசியமாகக் கூடக் கேட்கலாமா,
என ஆச்சரியப்படுத்துகின்றீர்கள்... ரரா (ர வரிசையில இன்னுமொருவரா... இப்பவே கண்ணக்கட்டுதே...)

தாய்க்குலங்களே,
சுவையான ரசம் கொஞ்சம் ஊற்றுங்களேன்... எனக்கும்...
 
ஐயோ பாவம், கல்யாணமாகாத பிள்ளை இப்படி ரசத்துக்கு ஏங்குதே, நாம் வேணுமின்னா கொஞ்சம் உதவி பண்ணலாம்னு வந்தா.... நல்ல ரசம் வைக்கக் கத்துத்தரணுமாம். எனக்கு ரசம் வைக்கத் தெரியும். நல்ல ரசம்? கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் ரங்கராஜன் அவர்களை எங்கள் வீட்டுக்கு ஒருநாள் உணவு உண்ண அன்போடு அழைக்கிறேன். வந்து சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்க, நல்ல ரசமா இல்லையான்னு, பிறகு செய்முறை சொல்றேன். முரளிராஜா சொல்லுவதுபோல் ரசத்தில் ஏகப்பட்ட வகையறா இருக்கு. நீங்க ரசிச்சது எந்த ரசம்னு தெரியலையே...
 
ஐயோ பாவம், கல்யாணமாகாத பிள்ளை இப்படி ரசத்துக்கு ஏங்குதே, நாம் வேணுமின்னா கொஞ்சம் உதவி பண்ணலாம்னு வந்தா.... நல்ல ரசம் வைக்கக் கத்துத்தரணுமாம். எனக்கு ரசம் வைக்கத் தெரியும். நல்ல ரசம்? கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் ரங்கராஜன் அவர்களை எங்கள் வீட்டுக்கு ஒருநாள் உணவு உண்ண அன்போடு அழைக்கிறேன். வந்து சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்க.

ரங்கராஜன்
தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் அவசர உதவிக்கு 108:D:D
 
முரளி ராஜா said:
அப்ப எனக்கு தெரிஞ்ச அனுபவரசம் காதல்ரசம்தான்:lachen001:

அதையும் போட்ட நல்லாருக்கும் அதையும் நாங்கள் பருகுவோமுல்ல..

அக்னி said:
ஜானகி அம்மாவை இத்திரிக்கு அன்புடன் அழைக்கின்றேன்...
அனுபவரசம் கிடைக்கும்...
அனுபவ சமையலை பற்றி கூற அன்பவஸ்தர் அருமையான தேர்வு
 
தக்ஸ்

இப்பதான் தெரியுது ஜானகி மேடம் ஏன் இந்த பதிவ பாத்துட்டு ரசம் சம்பந்தமான
செய்முறையை சொல்லாமல் போனாங்கன்னு. இதுக்கே இப்படி நக்கல் அடிக்கறிங்க
அவங்க சொன்ன செய்முறை நல்லா இல்லாம போனா எப்படி நக்கல் அடிப்பிங்க
அதான்:lachen001::lachen001::lachen001:

மச்சி எதுக்கு தேவையில்லாம் என்னை ஜானகி மேடம் கிட்ட மாட்டி விடுற......

பாவம் அவங்க... இந்த பயபுள்ளகிட்ட வாயி குடுக்க கூடாதுனு ஒதுகிட்டாங்க, அவங்கள ஏய்யா இப்படி மாட்டி விடுறீங்க பாவம்........
 
ஐயோ பாவம், கல்யாணமாகாத பிள்ளை இப்படி ரசத்துக்கு ஏங்குதே, நாம் வேணுமின்னா கொஞ்சம் உதவி பண்ணலாம்னு வந்தா.... நல்ல ரசம் வைக்கக் கத்துத்தரணுமாம். எனக்கு ரசம் வைக்கத் தெரியும். நல்ல ரசம்? கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் ரங்கராஜன் அவர்களை எங்கள் வீட்டுக்கு ஒருநாள் உணவு உண்ண அன்போடு அழைக்கிறேன். வந்து சாப்பிட்டுப் பாத்து சொல்லுங்க, நல்ல ரசமா இல்லையான்னு, பிறகு செய்முறை சொல்றேன். முரளிராஜா சொல்லுவதுபோல் ரசத்தில் ஏகப்பட்ட வகையறா இருக்கு. நீங்க ரசிச்சது எந்த ரசம்னு தெரியலையே...

மக்களே கேளுங்கள் இந்த கொடுமையை......

கீதம் அக்கா ரசத்திற்காக நான் லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டு, ஆஸ்திரேலியா போக வேண்டுமாம்.......

சரி அவ்வளவு செலவு செஞ்சி புள்ள வரானே, எதாவது கறி கஞ்சி ஊத்தலாம்லலல..... ரசம் ஊத்துவாங்களாம், நாங்க சாப்பிடணுமாம்........அதுவும் நல்ல சுவையான ரசம்மா இருக்கும்மான்னு, எந்த ஊர்சிதமும் கிடையாதாம்....... அதுவும் ஒருநாள் மட்டும் தான் ஊத்துவாங்களாம்....

ஏன் க்கா என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது.... இல்ல தெரியாம தான் கேட்கிறேன் எப்படி தெரியுது.......

கீதம் அக்கா : :sauer028::sauer028::sauer028: நீ ரசம் சாப்பிட்டாலும் எனக்கென்ன, விஷம் சாப்பிட்டாலும் எனக்கென்ன...... போடா அங்குட்டு.... உன் வாயிக்கு ரசம் கிடைக்காது...... உன்னையெல்லாம் கலைஞரின் இளைஞன் படத்தை தொடர்ந்து மூணு ஷோ பார்க்க வைக்கணும்டா......
 
ஏதோ ரசம் வைப்பது பற்றி ரசமாகச் சொல்கிறாரே என்று படித்தால்....ஒரே ரசாபாசமாக இருக்கிறதே...!

பல் பிடுங்கப் போனதால் மன்றம் வரமுடியாத என் சொல்லைப் பிடுங்க என்றே குறியாக ஒரு கூட்டம் இருப்பதை அறிந்துகொண்டேன்.

அநுபவ ரசம் வேண்டுமென்றால்.... குறைந்தது 2 ஈயச்சொம்பாவது உருக்கி இருக்க வேண்டும்....4 தடவையாவது, ரசத்தைத் தீயவிட்டு, அக்கம் பக்கத்தவர் வயிறெரிச்சலை கொட்டிக் கொண்டிருக்க வேண்டும்.... 50 பேரிடமாவது ரசம் பற்றி அலசி இருக்க வேண்டும்....தயாரா..?

எப்படியோ போகட்டும்... பாசத்துடனும், நேசத்துடனும், நான் சொல்லும்படி செய்து பாருங்கள்...

சுமார் 2 டம்ளர் தக்காளி ரசம் செய்யத் தேவையானவை :

பழுத்த, பெரிய தக்காளி....2 அல்லது 3

வெந்த பருப்பு ஜலம்.......1 டம்ளர்

மிளகு...1/4 டீ ஸ்பூன்; சீரகம்...1/4 டீஸ்பூன்

எலுமிச்சம்பழம்...1 மூடி; உப்பு...3/4 டீஸ்பூன்

தாளிக்க..நெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

மேலே தூவ... கொத்தமல்லித் தழை

செய்முறை :


தக்காளிகளை நன்கு அலம்பியபின், ஒரு பாத்திரத்தில் சிறிது ஜலத்தில் கொதிக்கவிட்டு, கொஞ்சம் வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.

பின், தோலியை நீக்கி, கையில் கசக்கியோ, மிக்ஸியில் அரைத்தோ எடுத்த்க்கொள்ளவும்.

ஒரு ரசச் சொம்பில், இதனுடன், 1 டம்ப்ளர் ஜலம் விட்டு, மிளகு, சீரகத்தை உடைத்துப் போட்டு, உப்பும் போட்டுக் கொதிக்கவிடவும்,

நன்கு கொதித்து, சுண்டியபின், வெந்த பருப்பு ஜலத்தைவிட்டு, விளாவி, நுரைத்துவரும்போது....கவனிக்கவும்..கொதிக்கவிடக்கூடாது...அடுப்பிலிருந்து இறக்கவும்

எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிடவும்.

சிறிது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, ரசத்தில் விடவும்.

வாசனை மூக்கை எட்டுகிறதா...?இறைவனை வேண்டிக்கொண்டு, ருசி பார்க்கவும்.

ருசியாக இருந்தால், மற்றவகை ரசங்களின் குறிப்பும் தொடரும்...
 
Last edited:
இறைவனை வேண்டிக்கொண்டு, ருசி பார்க்கவும்.

ருசியாக இருந்தால், மற்றவகை ரசங்களின் குறிப்பும் தொடரும்...

இது சொந்த பக்குவம் மாதிரி தெரியவில்லையே

பக்கத்தாத்து மாமி கிட்ட கேட்டு சொன்ன மாதிரியில்ல தெரியுது:D:D

ஆண்டவா தக்ச காப்பாத்து:lachen001:

ஆமாம் அந்த எலுமிச்சை பழம் எதுக்கு
அது சம்பந்தமான் விளக்கமே இல்லையே
ரசம் வைத்து அதை சாப்பிட்ட பிறகு
எலுமிச்சையை தலையில் தேய்த்து கொள்ளவேண்டுமா:D:D
 
ரசம் வைக்க டிப்ஸ் கிடைக்கும் முன்பு ரசத்தின் ஏக்கம் மிகவும் பரிதாபமாக சொல்லி இருக்கிறார்.
உன்மைதான் ரசத்தின் சுவைக்கு ஈடு எதுவுமே இல்லை. நான் சின்ன வயசில் ஒரு கதையில் படித்திருகிறேன். மிக பெரிய பனக்காரியை ஒருத்தன் லவ்வு செஞ்சு கல்யானமும் செஞ்சுக்குவான். ஆனா கொடுமை அவளுக்கு சமைக்க தெரியாது. பிரட் சான்ட்விச் அது இது என்னன்னவோ செஞ்சு தருவா. முதலில் ரசிச்சு சாப்பிட்டவன் பிறகு ஏங்குவானாம். அப்ப அதுல ஒரு வசனம் வரும் என்ன தான் மார்டன் உனவு சாப்பிட்டாலும் புறங்கையில் ஒழுகி போகும் ரசத்தை நக்கும் டேஸ்டுக்கு எதுவுமே ஈடாகாது என்று. எனக்கு ரொம்ப பிடிச்ச வரி இது.

நல்ல வேலை ஜானகி மேடம் மட்டும் வந்து ரசத்தை எப்படி வக்கறதுனு சொல்லி கொடுத்துட்டாங்க. இனி என்ன நிறைய ரசம் வச்சு பழகி எஞ்சாய் பன்னுங்கோ.
நன்றீ ஜானகி
 
என்ன நடக்குது இங்க?:sprachlos020::sprachlos020:

ஒரு ரசத்துக்கு இவ்வளவு பெரிய போரா?:eek:

தனி ஒரு மனிதனுக்கு ரசம் இல்லையெனில்
தயிர் ஊத்தி சாப்பிடுவோம்;)

கவலைபடாத பங்காளி:)

சீக்கிரம் நான் ஒரு குறிப்புத் தருகிறேன்;):aetsch013:

(மாப்ள நீ பிசியா? இல்ல ஒருத்தன் சிக்கிருக்கான், நீயும் வரியா?) :D:D
 
முரளிராஜா அவர்களே...விட்டுப் போனதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.....திருத்திவிட்டேன்.

[ இந்த 'ரா' ணாக்களின் கண்களிலிருந்து எதுவுமே தப்பாது...ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சரியான அளவாக இருக்கவேண்டுமே என்பதற்காக, மீனாட்சி அம்மாள் புத்தகத்தைப் புரட்டியதைக் கண்டுபிடித்துவிட்டாரே...! கேஸ் போட்டுவிடுவாரோ...?]

சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கு........மல்லிகா பத்ரிநாத் சமையல் புத்தகங்கள், மீனாட்சி அம்மாள் புத்தகங்கள் சுலபமான செய்முறைகளுடன் வெளிவந்துள்ளன....அளவு, திட்டம் எல்லாம் சரியாக இருக்கும். புரட்டிப் பாருங்கள்.
 
நிவாஸ் அவர்களே, நீங்கள் இடித்து அனுப்பிய அவுள் [ அவல் ] இப்போதுதான் கிடைத்தது....அதனால், ஞாயிறு ஸ்பெஷல்....அவல் புட்டு...இன்றுதான் பதிவாகிறது.
 
Back
Top