வாங்க பேசலாம் - ஒரு பார்வை

sarcharan

New member
சன் தொலைக்காட்சியில் திரு.ராஜா மற்றும் திருமதி .பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒளிபரப்புகின்றார்கள்.இதுபற்றி மக்களே உங்களது கருத்துக்களை பதியுங்களேன்..
 
எதேச்சையாய் ஒருமுறை காணும் வாய்ப்புக் கிட்டியது... நன்றாக இருப்பதாகவே தோன்றியது.. ஆமாம்.. இதைப்பற்றி ஏன் கேட்குறீங்க சார்சரண் அண்ணா..?!
 
இருவரும் தங்களின் பேச்சுதிறமையால் அனைவரையும் கவர்ந்தவர்கள். வள்ளுவர் சொன்னது போல்

கேட்டாரை பிணிக்கும் தகையவாய் கேளாரையும்
வேட்ப மொழிவதாம் சொல்

என்ற பேசும் இலக்கணத்திற்கு நல்லதொரு சான்றாக திகழ்பவர்கள். இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை கேட்பதற்காகவே நிகழ்ச்சியை நிறைய பேர் பார்ப்பார்கள்.

இப்போதைக்கு இதுவே என் கருத்து. நண்பரே சுகந்தப்ரீதன் அவர்களின் கேள்விக்கு இதுவரை பதில் சொல்லவில்லையே ஏன்? வாங்க பேசலாம் என்று அழைத்துவிட்டு பேசாமல் இருப்பது ஏன்? பதில் சொல்லுங்கள்.
 
Back
Top