அணைக்காமல் அணையுங்கள்!!!

நீங்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பல இடங்களில் கீழ்காணும் சொற்தொடரைக் காணலாம்:

draft_lens11401471module104814511photo_1275832163fred-may-please-turn-off-


பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாடுத் தளங்கள், தன்னியக்க வங்கி இயந்திரம், எரிபொருள் கிடங்குகள், எனப் பல இடங்களில் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்லி வற்புறுத்தும் வாசகங்கள் இருக்கும்!!!


cde16dbd5408c395918f0ef79264b292.image.150x150.jpg


நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி வந்தால், கண்டிப்பாக உங்கள் அலைபேசியை அணைக்க சொல்வார்கள்!!!

images


ஏன் அவர்கள் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்....

* அலைபேசியில் பேசுவது பிறருக்கு இடையூராக இருக்கலாம்
* அலைபேசியின் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அங்கே உள்ள மின்னணு சாதனங்கள் சரி வர இயங்காமல் போகலாம்..

images


Warning%20Cell%20Phones.jpg


சரி இதெல்லாம் ஏன் சொல்கிறாய் ?தலைப்புக்கும் நீ எழுதியவைக்கும் என்ன தொடர்பு என்று பலர் வினவலாம்!!!

why1.gif


அவற்றுக்கான பதில் கீழே!!!
 
கீழே... இன்னும் இல்லே... காத்திருக்கின்றேன்... திரி மீண்டும் மேலே வர...

நல்லதொரு பகிர்வாக அமையும் என்று எதிர்ப்பார்க்கின்றேன்...
 
பிறருக்கு இடையூறாக இருக்கும் என்றால் அலைபேசியை அமைதி முறையில் வைப்போம் (Silent)

silence+please%28hall%29.JPG


silent-mode.png


அமைதி முறையில் அலைபேசி இருக்கும் போது, அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தால் ஒலி மூலம் அறிவிப்பதற்கு பதிலாக அதிர்வுகள் மூலம் அறிவிக்கும் . இதன் மூலம், அலைபேசி வைத்து இருப்பவர் தகவல் அறிந்து கொண்டு வெளியே சென்று பேசி வரலாம்..

அதற்கான திட்டம் இது!!!

சரி, மின்னணு சாதனங்கள் உள்ள அறையில் என்ன செய்வது?
அலைபேசியை அணைத்து விடுவது மட்டும் தான் ஒரே வழியா?


மேலும் பேசுவோம்!!
 
Last edited:
அப்படி வைத்தாலும் அது ஆபத்துதானே நண்பரே.
நண்பரே
பொதுவாக இது மாதிரியான அறிவிப்புகள் பெட்ரோல் பங்க், எரிவாயு உருளை வழங்கும் இடம் போன்ற இடங்களில் அதிகமாக காணக்கூடும். அதன் காரணம் அலைபேசியின் கதிர்வீச்சானது அதிகமானால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால்தான்.
அத்தகைய சமயங்களில் அணைத்து வைப்பதே சரியான முறை. நீங்கள் சைலன்ட் மோடில் வைத்தால் உங்களுக்கு வரும் அழைப்பு மற்றவர்களுக்கு கேட்காதே தவிர அதிலிருந்து வரும் கதிரின் அளவானது குறையாது.நீங்கள் சொல்லும் முறை அலுவலகங்களுக்கு வேண்டுமானால் பொருந்தகூடும். எரிவாயு உருளை ஏஜென்சி வைத்திருந்த என் நண்பன் வாயு கசிந்த ஒரு எரிவாயு உருளையை சரிசெய்து கொண்டிருந்த பொழுது அவனுக்கு அச்சமயம் வந்த அலைபேசி அழைப்பின் கதிர்வீச்சால் உருளை வெடித்து மாய்ந்து போன சம்பவம் இன்னும் என் கண் முன்னே
நிற்க்கிறது.
 
Last edited:
முரளிராஜாவை நான் ஆமோதிக்கின்றேன்.
ஆனால், நானும் அலைபேசியை அணைக்காமல், அமைதிப்படுத்துவதே அதிகம்.
மாறவேண்டிய இயல்பு என்று அடிக்கடி நினைப்பதுண்டு...
 
நம்மவர்கள் பலருக்கு அலைபேசி இல்லாமல் சில நிமிடங்கள் வாழ்வதே வரலாற்றுச் சாதனையாக உள்ளது!!
அந்த அளவிற்கு அலைபேசி மோகம் உள்ளது!!

சரி, தலைப்புக்கு வருவோம்...

மின்னணு சாதனங்கள் உள்ள அறையில் நுழையும் போது என்ன செய்வீர்கள்?
அலைபேசியை அணைக்க போகிறீர்களா?


gsmarena_s089.jpg


இனி அது தேவை இல்லை!!

உங்கள் அலைபேசியை அணைக்காமலே அணைத்த மாதிரி செய்யலாம்
(அப்பாடா ஒரு வழியாக தலைப்புக்கு வந்து விட்டேன்!! :))

உங்கள் அலைபேசியில் "FLIGHT MODE" (சில அலைபேசிகளில் Offline Mode/ Airplane Mode) என்று இருக்கும்.. அதை இயக்குங்கள்!!!

images


images


நோக்கியா அலைபேசி:
Settings --> Profiles --> FLIGHT MODE
கருவிகள் --> சுய விவரங்கள் --> FLIGHT MODE

இப்போது திரையைப் பாருங்கள்!!
உங்கள் அலைபேசி சேவை சக்தி (Network Signal Strength ) மாயமாக போய் இருக்கும் !!


இந்த முறையில் நீங்கள் அலைபேசி சேவை சார்ந்த எந்த வேலையையும் செய்ய முடியாது.. எனவே, அதிர்வலைகள் கிளம்ப வாய்ப்பு இல்லை!!

ஆனால், பிறவற்றை (இசை, விளையாட்டு, நிழற்படம்,படக் கருவி) முதலியவற்றை எந்த தங்கு தடையும் இன்றி செய்யலாம்.. அவற்றால் எந்த பாதிப்பும் வராது!!
இசையைக் கேட்க தலையணி ஒலிவாங்கியைப் பயன்படுத்தவும் !! யாருக்கும் தொந்தரவாகவும் இருக்காது!!

அப்புறம் என்ன, இனி அலைபேசியை அணைக்காமலேயே அதை அணைத்து கொஞ்ச வேண்டியது தான்!!

பி. கு:
விமானங்களில் "FLIGHT MODE" இல் அலைபேசியைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று அறிகிறேன்!!
மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்!!
 
Last edited:
நல்ல தகவல் நன்றி - இன்று வரை விமானங்களில் அனுமதி இல்லை - ஓமன்ஏற் (omanair) என்ற ஓமன் நாட்டு விமானத்தில் தான் உலகத்திலேயே முதன் முறையாக அந்த வசதி உள்ளது
 
wi-fi அலைகளை இம்முறைமூலம் தடுக்க முடியாது.
network தொடர்பானவை மட்டுமே இதன்மூலம் தடுக்கப்படும்.

இப்பொழுதெல்லாம்,
குறித்த இடங்களில் அலைபேசியின் அலைவரிசைகள் தன்னியக்கமாகவேத் தடுக்கப்படுகின்றன.
பரவலாக இன்னும் இல்லையென்றாலும் விரைவில் அனைத்திடங்களிலும் செயலாக்கப்படலாம்.

தகவலுக்கு நன்றி...
 
Back
Top