dhilipramki
New member
வளரும் செயற்கை உயிர் தகரும் கடவுள்
**எச்சரிக்கை**முற்போக்கு சிந்தனை பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம் தோழர்களே**
உலகில் வெறும் ஆன்மீக நம்பிக்கையின் பாற்பட்ட, ஆதாரமற்ற சிந்தனைகளை உடைத்து அறிவியல் வரலாற்றில் புதுப்புது பக்கங்கள் கடந்த காலங்களில் உருவாகி வந்துள்ளன. அத்தியாயம் படைத்திட்ட அந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் பல தரப்-பட்டவை, அவை அன்றாட நிகழ்ச்சிகளை, பழக்க வழக்கங்-களை பயனற்றவை ஆக்கிவிடும். சில கண்டுபிடிப்புகள் மனித சமுதாயத்தையே உலுக்கிப்போடும் வலிமை வாய்ந்தவை. அத்தகைய உலுக்கிப்போட்ட _ -கடந்த கால கண்டுபிடிப்பு. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு மனித இனம் என்பது சிறு உயிரினங்-களிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி இன்றைய நிலையாகும். இதற்கு அடுத்தாற்போல கடவுள் படைப்புத் தத்துவத்தையே புரட்டிப் போடுகின்ற அளவில் செயற்கை முறையில் உயிர்செல் உருவாக்கப்பட்ட செய்தியும் அந்த செல் இனப்பெருக்கம் செய்துள்ள முறையும் மாபெரும் பிரமிப்பை உருவாக்கியுள்ளன.
அமெரிக்காவில் ஜே. கிரெய்க் வெண்டர் ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சார்ந்த அறிவியலாளர்களின் அரும் பணியால் செயற்கையாக உயிர் செல்கள் உருவாக்கப்-பட்டுள்ளன. இதுவரை செயற்கையில் உயிரினங்களை ஒத்த திண்மையுடன் கூடிய வடிவங்கள் உருவாக்கப்-பட்டிருந்-தாலும், அந்த வடிவங்களில் மனிதனால் உயிரை உருவாக்க முடியவில்லை. அமெரிக்க அறிவியலாளர்கள் உருவாக்கிய செயற்கை செல்களில் உயிர் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர்உருவாக்கப்பட்டதன் அடையாளமாக செயற்கையாக அமைக்கப்பட்ட செல்கள் இனப் பெருக்கம் செய்து, ஒன்று பலவாகி உள்ள அதிசயம் நடைபெற்றுள்ளது. ஆன்மிகவாதி-கள் நினைக்க மறுத்த ஒரு செயலை, பகுத்தறிவாளர்கள் முடிக்க நினைத்த செயலை இப்பொழுது அமெரிக்க நாட்டு அறிவியலாளர்-கள் நிறைவேற்றி அறிவியல் வரலாற்றில் புத்தாக்கப் பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டனர். மானிடம் முழுவதற்கும் பொது-வான இந்த அறிவியல் உண்மையை வெளிக் கொணர்ந்த அறிவிய-லாளர்-கள் குழாமில் இந்திய வம்சாவளியினைச் சார்ந்தோர், மூவர் இருப்பது பெருமையினையும் மகிழ்ச்சியினையும் தரவல்லது.
கடவுள் உயிர் கொடுத்தார் எனும் நம்பிக்கையினைத் தவிடு பொடி ஆக்கியுள்ள செயற்கை உயிர் செல் உருவாக்கப்பட்ட செய்தியினை நாடெங்கும் ஊரெங்கும், வீதியெங்கும் பிரச்சாரம் செய்து மனித இனத்திற்கு பகுத்தறிவின் மேன்மையினை, அறிவியலின் ஆக்கத்தினை புரிய வைத்திட வேண்டும் ஒத்த அமைப்புகளும் இந்த அரிய, அவசியப் பணியில் அக்கறை காட்ட வேண்டும்.
கடவுள் படைப்பு நம்பிக்கைத் தகர்ப்பின் முழு வெற்றிக் காலம் நெருங்கிவிட்டது. அறிவியல் ஆக்கத்தின் முழு வீச்சு வெளிப்பட்டு விட்டது. கடந்த காலத்தில் அறிவியல் கண்டு-பிடிப்புகள் பற்றி குறை செல்லப்பட்டன. காலம்-தான் கண்டுபிடிப்புகள் என மனித இனத்திற்கு நிறைவுகள் பலவற்றைத் தரவல்லவை நிரூபித்-துள்ளது. இப்பொழுது கண்டுபிடிக்கப்-பட்டுள்ள செயற்கை உயிர் செல் உருவாக்கமும் எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பகுத்தறி-வின் துணை கொண்டு மானிட மேம்பாட்டிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆட்படுத்திக் கொள்வதில்தான் மனிதரின் அறிவுடைமை அடங்கியுள்ளது. அறிவியல் வளரட்டும்! பகுத்தறிவுப் பயன்பாடு பெருகட்டும்!
மானிடம் மேலும் தழைக்கட்டும்!
உங்கள் மனதை புண்படுத்தவில்லை என்று நினைக்கிறேன் ! நன்றி!!