நமது நினைவிற்கு....

மன்றத்து உக்கிராண அறைக்குள் சென்று தகுந்த திரியைத் தேடிக்கொடுத்த உங்கள் நல்லார்வத்திற்கும், பொறுமைக்கும் மிக்க நன்றி
 
ஏப்ரல்..21...பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்...

அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, எழுச்சிமிக்க அவரது பாடல்களை நினைவு கூறுவோமாக....

கனியிடை ஏறிய சுளையும்
முற்றல் கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறியத் தேனும்
காய்ச்சுப்பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்
தென்னை நல்கிய குளிரிளநீரும்
இனியென என்பேன் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்?
 
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று அன்னாரை நினைவு கூறுவோமாக...

" மானுடர் உழாவிடினும், வித்து நடாவிடினும், வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்

வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள், வகைவகையா நெற்கற்புற்கள் மலிந்திருக்குமன்றே ?

யானெதற்கும் அஞ்சுகிலேன்; மானுடரே நீவீர் என் மதத்தைக் கொண்மின்; பாடுபடல் வேண்டா

ஊனுடலை வருத்தாதீர், உணவியற்கை கொடுக்கும், உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் !

பாரதி
 
ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் இந்துமதம் பற்றி எழுச்சிமிக்க உரையாற்றி, உலகளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய நாள்...அன்னாருக்கு நன்றி கூறுவோமாக...
 
Back
Top