சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரை நம் நினைவுக்குக் கொண்டுவந்த ஜானகி அவர்களுக்கு நன்றி.
விவேகானந்தரின் பொன்மொழிகள் சிலவற்றையும் நினைவுக்குக்கொணர்வோம்.
எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.
யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.
பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் தத்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.
பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.
விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பதன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.