கேக், கேக் அலங்கரிப்பு.. ஸ்விட்டான சுவிஸ்

'கேக்' கலையை ஆராய்ச்சி பண்ண அவர் கேக்கலைங்கிறது நமக்குத் தெரியாதா என்ன? :)

:icon_b: அப்பாடா எப்படியோ ஒரு கேக் கிடைக்கப் போகுது(போகுதில்ல?). யாரும் 'கேக்'காம இருந்தா சரி...
 
கேட்டாலும் கேக்காமல் விட்டாலும் கேகா விட்டிற்கு வந்தால் கேக் கட்டாயம் கிடைக்கும்.
 
ரெம்ப நன்றி டாக்டர் சார்.

சுகர் இருந்தாலும் எப்பவாச்சும் கொஞ்சூண்டு இனிப்பு ஆசைக்கு சாப்பிடுவதில் தப்பில்லையென்றே நினைக்கிறேன். எப்போதாவது நடைபெறும் விசேசங்களில் ஒரு சிறிய துண்டு இனிப்பு சாப்பிடுவதால்
எதுவும் பெரிதாக பாதிப்பு வராது.

இன்சுலின் பாவிப்பவராக இருப்பின் ஒரு டோஸ் அதிகமாய் எடுக்க வேண்டி வரும். உங்கள் டாக்டரிடம் கேட்டுபாருங்கள்.
எனக்கு 25 வருட அனுபவம் ஹெகா அவர்களே...தினமும் மூன்று இன்சுலின் ஊசி நானே போட்டுக்கொள்கிறேன். ஆகவே டாக்டரிடம் கேட்கவேண்டியதில்லை. நானே ஒன்று அல்லது இரண்டு யுனிட் இன்சுலின் அதிகம் எடுத்துக்கொள்வேன்.:)
 
நிச்சயமாய் வாருங்கள் மதி அவர்களே..

சுவிஸ் வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களின் பிரதானமானதும் முக்கியமானதுமான இடத்தில் நாம் வசிக்க்கிறோம்..


5476426.jpg



இந்த இடம் பல திரைப்படங்களில் பார்த்து ரசித்திருப்பீர்கள்.. இங்கிருந்து எமது வசிப்பிடம் சில நூறு மீற்றர்களே..

சுவிஸ் வருபவர்கள் இங்கே தங்கள் உறவினர்கள் இல்லாத பட்சத்தில் முன்கூட்டியே எம்முடன் தொடர்பு கொண்டால் தங்குமிட மற்றும் சுற்றுலா ஒழுங்குகளை இலகுவாக்கியும் தருவோம்.
அழகிருக்குமிடத்தில் ஆபத்துமிருக்குமல்லவா... இருந்தது...

கடந்த வருடம் செப்டம்பரில் எனது நண்பனும் நானும் குடும்பங்களாக பேர்ன் நகர் சென்றிருந்தோம். திரும்பி வருகையில் மிலான் நகருக்கு குறுகிய பாதையைக் காட்டியது எனது வழிகாட்டிக் கருவி.

சரி. விரைவாகச் சென்றிடுவோம் என்று, அதன் படியே மகிழுந்தைச் செலுத்தத், திரும்பும் திசையெல்லாம் இருகண்கள் போதாதென்ற அழகு.
பார்த்து, ரசித்து, நின்று, புகைப்படம் எடுத்து என்று நன்றாகத்தான் இருந்தது பொழுது.

மிலான் நகர் நோக்கிய பயணத்தில் தூரம் குறுகி வர, அடையும் நேரத்தில் மட்டும் பெரிதாக மாற்றமில்லை. எப்படியும் கருவி அடையுமிடம் அழைத்துச் சென்றுவிடும் என்ற நம்பிக்கையில், திரும்பிச் சென்று வழமையான தெரிந்த பாதையில் செல்ல (பேர்னிலிருந்து சூரிச் எடுத்து லுசர்ன் ஊடாக) எழுந்த எண்ணத்தை எழ எழ அடித்துப் போட்டுவிட்டுத் தொடர்ந்தோம்.

அழகான உங்கள் இடம் தாண்டியதும், அழகு இன்னும் கூடியது.
வளைந்து செல்லும் ஈரமான கறுத்த மலைப்பாதையின் ஏற்றத்தில், பசுமை போர்த்தி, வெள்ளிப் பனி முடி வைத்த மலைகள் கண்ணைக் கவர்ந்தன. பசுமை மட்டுமே கண்ணுக்குத் தெரிய ரசித்தபடியே, பனிச்சிகரங்களைப் பற்றி வியந்தபடியே பயணித்தோம்.

'இந்தக் கோடையிலும் அந்தச் சிகரத்தில் பனி கரையாதிருக்கின்றதே' இது நான்.
நண்பன் ஐஸ்லாந்திலிருந்து வந்தவன்.
அதனால், அங்கும் இங்குமான பனிச்சூழல் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தான்.
அங்கு 20 பாகை செல்சியஸ் என்றாலே கோடை என்று குதிப்பார்களாம்.

நாம் யாருமே எதிர்பாராத அதிர்ச்சி எம்மை நெருங்குவதை அறியாமலே, சென்றோம்... இல்லையில்லை, மலையேறினோம்...

மலையின் ஏற்றம் அதிகரித்தது. வளைவுகள் அபாயகரமாகச் சட் சட்டெனத் திரும்பின. குளிரூட்டி போடாதபோதும் குளிர் உறைக்கத் தொடங்கியது. வெப்பமாக்கியை இயக்கி மகிழுந்தினுள் வெப்பத்தைப் பேணியபடித் தொடர்ந்தோம்.

ஈரப்பதன் மிகுந்த சூழல், துளித்துளி மழையாக, மலையும் ஏற்றக்கோணத்தை அதிகரித்தது.
துளித்துளி மழையும் கொஞ்சம் திண்மமாக மகிழுந்தின் முன்கண்ணாடியில் மோதிச் சிதற நிலைமையின் தீவிரம் உறைத்தது.
மழைத்தூறல் பனிச்சாரலாகியது.
இன்னும் சற்று ஏறப் பனிச்சாரல் பனிப்பொழிவாகத் தடித்தது. பச்சைக்குத் திடீரென நரை விழுந்தாற்போல, அனைத்தும் பனிப்போர்த்துக் கொண்டன.

குளிர்காலத்தில், பனிக்காலச் சக்கரங்கள் இல்லாமல், சுவிஸில் மகிழுந்து ஓட்டுதல் சட்டரீதியாகவே மறுக்கப்பட்டதொன்று.
கோடை விடுமுறைக்குச் சென்ற நமக்குத் தெரியுமா, கோடையிலும் சுவிஸில் பனி கொட்டும் என்று...
நம் மகிழுந்தின் சக்கரமோ சாதாரணம். அந்தப்பயம் வேறு அடிமனதில் விரல் காட்டி வெருட்டியது. உயரமான இடங்களில் வாகனமோட்டியிருக்கின்றேன். ஆனால், இப்படியான மலைப்பிரதேசத்தில் பனிப்பொழிவில் வாகனமோட்டுவது முதல் முறை. அதுவும் இரண்டாவதாய் வெருட்டியது.

நாம் சிலாகித்த வெள்ளிப் பனிமுடிச் சிகரமொன்றில் நகர்கின்றோம் என்பது விறைக்கச் செய்தது.

ஏறிச்செல்ல, முன்னிருந்து, பாதையின் பனியொதுக்கும் வாகனம் வந்துகொண்டிருந்தது. அதன் அருகே சென்றதும் சைகை செய்து நிறுத்திக் கேட்டேன். தொடர்ந்தும் செல்லலாமா என்று. கடுமையான பனிப்பொழிவு இல்லை எனவும் தொடரலாம் எனவும் அவ்வாகனச் சாரதி சொல்லத் தெம்பு கொஞ்சமாய்க் கொம்பு நீட்டியது. வழிகாட்டிக் கருவியும் பிரதான நெடுஞ்சாலைக்கான தூரத்தைக் கொஞ்சமாய்க் காட்டியதால் திரும்பிச் செல்லுதல் என்பதையே நினைக்காது பயணம் தொடர்ந்தோம்.

இந்த வளைவோடு பாதை இறங்கத் தொடங்கும், அந்த வளைவோடு பாதை இறங்கத் தொடங்கும் என்று தொடர்ச்சியாக எதிர்பார்த்தபடி, மிக நெருக்கமான தொடர்ச்சியான முழங்கை வளைவுகள் நிறைந்த பாதையில் பனியூடாக நகர்ந்தோம்.

ஒரு வழியாக, மகிழுந்தின் ஓட்ட நிலை மாறியது. இயந்திர வலுவிலிருந்து, இறக்கக் கோணத்தினால் கிடைத்த வலுவில் மகிழுந்து விரைந்து இறங்கத் தொடங்கியது. பனி ஆகையால் மகிழுந்தைக் கட்டுப்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தி இறங்கினோம்.

பனிப்பொழிவு பனிச்சாரலாகியது. தொடர்ந்தும் இறங்க மழைத்துளிகள் குளிரோடு வரவேற்றன.
கூடவே பிரதான் நெடுஞ்சாலையும் நம் மகிழுந்தைத் தனக்குள் அழைத்துக்கொண்டது.

முன்னரே, பாதையைப் பற்றிச் சொல்லாமல் விட்ட ஈர மழைத்துளிகளிற் கோபம் கொண்டு, அவை தந்த குளிர் விரட்டவும்,
திடீரெனத் திகில் தந்த நிலையிலிருந்து வெளியாகவும்
அடுத்து வந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிற்றுண்டிச் சாலையில் சூடாக கொட்டைவடிநீர் (நன்றி பாரதி அண்ணா) அருந்தி, மீண்டும் பயணம் தொடர்ந்து நம்மிடம் சேர்ந்தோம்.

அன்றிலிருந்து முடிவெடுத்தேன்.
இண்டர்லாகன் போவதானாலும், திரும்பி வருகையில் பேர்ன் சென்று வருவேனேயன்றி, இப்படி வானேறி வருவதில்லை என்று...
 
ஆஹா அக்னி சார்.


காலநிலை மாற்றம் என்பது சமீப காலங்களில் நாம் எதிர்பாரததே.. டிசம்பர் சீஷனில் 20 பாகை வெயிலும் யூன் யூலையில் யாரும் எதிர்பாராத பனிப்பொழிவும் சில வருடங்களாக தொடர்கிறது. நீங்கள் வந்த போதாவது பரவாயில்லை வெறும் ஐஸ் மழை பொழிந்தது. சில நேரங்களில் ஹாகல் எனப்படும் ஆலங்கட்டி மழைபெய்து மரங்களை விழுத்தியும், வாகன் விபத்துகளை உருவாககியும், தரிப்பிடத்தில் நிறுத்தப்ட்டிருக்கும் வாகன கண்ணாடிகளை உடைத்தும் வீட்டு யன்னல்களை உடைத்தும் பயங்கர சேதங்களை உருவாக்கி விடுகின்றது.


நீங்கள் பயணம் சென்றதான பேர்ண்னிலிருந்து இனரலாகன் ஊடாக லூசேன்,மிலான் செல்லும் பாதை மலையில் அடிவாரத்தின் ஒருபக்கத்திலிருந்து அடுத்த பக்கம் மலைமேல் ஏறி மீண்டும் கீழே இறங்கி செல்லும் குறுகிய பாதை.

இன்ரர்லாகனிலிருந்து சூரிச், லுசேன் செல்ல பேர்ணுடான வேகவீதியை விட அப்பாதை குறைவான கிலோமீற்றர்கள் கொண்டது. அதிக வளைவுகள் கொண்டதால் தலை சுத்தி வாந்தி வருவது போலிருக்கும். அதனால் பழகிய நாங்களே அப்பாதையை அதிகம் பயன் படுத்துவதில்லை. சுவிஸில் இதை விடவும் அதீதமாக அபாயகரமான மலைபாதைகள் உண்டு. அல்ப்ஸ் மலைத்தொடர்களுக்கிடையில் இருக்கும் நாடல்லவா..பக்கதடுப்புகள் இல்லாமல் மிக குறுகிய பாதைகள் உண்டு.


சுவிஸில் வேறு இடங்களில் இருப்பவர்களே இன்ரர்லாகன் நோக்கி வரும் போது வரும் வளைவுப்பாதைகண்டு கலங்குவர். இரவில் வண்டி ஓட்ட தயங்குவர். எமக்கு அது பழகி விட்டது.

அப்புறம் முக்கியமானது பயணத்தில் நீங்கள் கண்ட வெண்மையான பனிமலை தொடர் .. அது அல்ப்ஸ்மலைதொடர்.. அம்மலைதொடரில் இருக்கும் பனிகட்டிகள் எப்போதுமே உருகுவதில்லை ஐஸ்போர்த்தியே இருக்கும்.

அடுத்ததடவை சுவிஸ் வரும் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் பயணத்தில் JungFrau, Schliththoorn, Grindelwald போன்ற இடங்களை சேர்த்து கொள்ளுங்கள். Zweisimmen எனுமிடம் சென்று கேபிள் மூலம் மலைஉச்சிக்கு பயணமானால் அழகாக மூன்று நான்கு மலைதொடர்கள் 35 பாகை வெயிலிலும் உருகாது வெண்மை நிறத்தால் நம் கண்களை குளிர்விப்பதோடு உடலையும் சில்லிட வைக்கும் .

மேலே இருக்கும் இடங்களுக்கும் இன்ரர்லாகன் லூசேன் போக்குவரத்துக்கும் ரயில்,பேருந்து பயணங்கள் மாலை 5 மணிக்கு பின் இல்லை. குறுகிய பயணங்கள் கூட கட்டாயமாக் எட்டு மணிக்கு பின் இல்லை.

புதிய இடம் பார்க்க புறப்பட முன்னர் அந்த இடத்தில் கால நிலையை முன்கூட்டியே கண்டு பயண திட்டம் வகுப்பது நன்று.ஐஸ்மழை மட்டுமல்ல சில நேரங்களில் புயல் கூட வீசலாம், மலையிலிருந்து கற்கள் உருண்டு பாதைகள் மேல் விழும வாய்ப்பிருப்பதால் பாதைகளை தடைசெய்யவும் செய்வார்கள். மேக மூட்டம் இருந்தாலும் தடை செய்வார்கள்.

அதனால் பயணதிட்டத்தை கால நிலையை முன்வைத்து திட்டமிடுங்கள். பயணம் இனிக்கும்.

பிரான்ஸ்,ஜேர்மன் போன்ற இடங்களிலிருந்து சப்கவுசன், பாசல் மூலமாக சுவிஸ் வருபவர்களுக்கும், இததாலி மிலானிலிருந்து வருபவர்களுக்கும் வழிகாட்டும் கருவி காட்டும் பாதை லுசேன் இனரர்லாகனாகவே இருக்கும். ஆனால் முதல் முதலாக வருபவர்கள் அதை தவிர்ப்பது நல்லது.

வழிகாட்டும் கருவியில் செட்டிங்கில் வேகவீதி என முன்னாடியே செட் செய்து விட்டால் அது பேர்ண் ஊடாக இன்ரர்லாகன் வரும் பாதையை காட்டும். அது லூசேன் பாதையினை விட கிட்டதட்ட 50-60 கிலோ மீற்றர்கள் தூரம் அதிகமாயிருக்கும்.
 
ஒரு அசாத்தியப் பயண அனுபவம் வாயிலாக அக்னியின் எழுத்துக்களை மீண்டும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு துணிகரப் பயணத்தின் துடிப்புகளை அதே உணர்வோடு வெளிப்படுத்திய வரிகள். அதிலும் கீழ்க்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் அக்னி.

அழகிருக்குமிடத்தில் ஆபத்துமிருக்குமல்லவா... இருந்தது...


வழமையான தெரிந்த பாதையில் செல்ல (பேர்னிலிருந்து சூரிச் எடுத்து லுசர்ன் ஊடாக) எழுந்த எண்ணத்தை எழ எழ அடித்துப் போட்டுவிட்டுத் தொடர்ந்தோம்.


பச்சைக்குத் திடீரென நரை விழுந்தாற்போல, அனைத்தும் பனிப்போர்த்துக் கொண்டன.


தெம்பு கொஞ்சமாய்க் கொம்பு நீட்டியது.


கூடவே பிரதான் நெடுஞ்சாலையும் நம் மகிழுந்தைத் தனக்குள் அழைத்துக்கொண்டது.


முன்னரே, பாதையைப் பற்றிச் சொல்லாமல் விட்ட ஈர மழைத்துளிகளிற் கோபம் கொண்டு, அவை தந்த குளிர் விரட்டவும்,
திடீரெனத் திகில் தந்த நிலையிலிருந்து வெளியாகவும்
அடுத்து வந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிற்றுண்டிச் சாலையில் சூடாக கொட்டைவடிநீர் (நன்றி பாரதி அண்ணா) அருந்தி, மீண்டும் பயணம் தொடர்ந்து நம்மிடம் சேர்ந்தோம்.


அன்றிலிருந்து முடிவெடுத்தேன்.
இண்டர்லாகன் போவதானாலும், திரும்பி வருகையில் பேர்ன் சென்று வருவேனேயன்றி, இப்படி வானேறி வருவதில்லை என்று...


அக்னியின் தமிழை மீண்டும் மன்றத்தில் காணத் தூண்டிய ஹேகாவுக்கு நன்றி.
 
அப்புறம் முக்கியமானது பயணத்தில் நீங்கள் கண்ட வெண்மையான பனிமலை தொடர் .. அது அல்ப்ஸ்மலைதொடர்..
நெஞ்சில் வீசியது அல்ப்ஸ் மலைக் காற்றாயிருக்குமோ என்று நினைத்தேன். உறுதிப்படுத்திவிட்டீர்கள்.

பொதுவாகவே நான் வழிகாட்டிக் கருவியை சராசரி பயணத்திற்காகவே ஒழுங்குபடுத்தியிருந்தேன். பல முறை பேர்ண் சென்றிருந்தாலும், பேர்ண் சென்றுவிட்டு சூரிச் சென்று வருவதே வழக்கம். அதனால் இந்தப் பாதையின் திகில் தெரியவில்லை (முன்னப்பின்ன செத்தாத்தானே சுடுகாட்டப்பத்தித் தெரியிறதுக்கு...). எது எப்படியோ இந்த அனுபவம் குளிர்காலத்தில் தவிர்க்கவேண்டிய ஒரு பாதையை அடையாளப்படுத்திவிட்டது.

சென்ற கோடை விடுமுறைக்கு முன்னர், மாதமொருமுறையேனும் சூரிச்சிலிருக்கும் நண்பனிடம் சென்றுவருவேன்.
அதற்குப் பின்னர் உலகப் பொருளாதார நெருக்குவாரத்தின் பலன், வேலை தேடுவதே வேலை என்றாகிவிட, உலாக்களுக்கு இடைவேளை விட்டாயிற்று.

நிச்சயம் நீங்கள் குறிப்பிட்ட இடங்களைப் பார்க்க வருவேன்.

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஹேகா அக்கா...

பாராட்ஒரு அசாத்தியப் பயண அனுபவம் வாயிலாக அக்னியின் எழுத்துக்களை மீண்டும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி.
நன்றி கீதம் அக்கா...
அநாயாசமாக எழுதித் தள்ளும் உங்களிடமிருந்து கிடைத்த இந்தப் பாராட்டுப், பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது.
 
மிக அருமையான படங்களும் விளக்கங்களுமாகத் தொடங்கி ஸ்விஸின் அழகினைப்போற்றும் மிக அருமையான திரி.. தொடருங்கள் ஹேகா.. நாங்களும் ஆல்ப்ஸ் மலையடிவாரத்தைப் பற்றி அறிந்துகொள்கிறோம்..!
 
ஆஹா...அருமையான பயணக்கட்டுரை. இன்னும் விரிவாகக் கொடுங்கள் அக்னி.(என் மேல் கோபமா.....ஹி...ஹி....இருக்காதென்றே நினைக்கிறேன்)
 
நன்றி கீதம் அக்கா...
அநாயாசமாக எழுதித் தள்ளும் உங்களிடமிருந்து கிடைத்த இந்தப் பாராட்டுப், பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது.

அநாயாசமாகவா? நானா? ஆஹா... இந்தப் பாராட்டு எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

முன்போல் எழுதும் முனைப்பும் மிகுகிறது. நன்றி அக்னி.
 
செல்ல முடியாவிட்டாலும் சென்று வந்த உணர்வு. மேலும் தொடருங்கள். ஆவலுடன்.....!!!
 
ஆஹா...அருமையான பயணக்கட்டுரை. இன்னும் விரிவாகக் கொடுங்கள் அக்னி.(என் மேல் கோபமா.....ஹி...ஹி....இருக்காதென்றே நினைக்கிறேன்)
நன்றி சிவா.ஜி...
(ஹி ஹி... அப்பிடியே நினச்சுட்டிருங்க. தனிமடல்ல நான் இறுதியா அனுப்பின மடலுக்குப் பதிலப் போடுங்க. அப்புறம், ஹி... ஹி... ஹி...)
அநாயாசமாகவா? நானா? ஆஹா... இந்தப் பாராட்டு எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

முன்போல் எழுதும் முனைப்பும் மிகுகிறது. நன்றி அக்னி.
அப்போ நானா...
கீதம் அக்கா, நானொன்றும் இல்லாததைச் சொல்லவில்லை என்பது உங்கள் படைப்புக்களைத் தொடர்ந்த அனைவருக்கும் புரியும்.
செல்ல முடியாவிட்டாலும் சென்று வந்த உணர்வு. மேலும் தொடருங்கள். ஆவலுடன்.....!!!
நன்றி நண்பரே.
திரியை முழுவதுமாகப் பாருங்கள். சுவைக்கும் அழகுகள் அதிசயிக்க வைக்கும்.

கே(க்)கா அக்கா,
திரியைத் திசைதிருப்பிவிட்டேனா?
வேண்டுமானால், எனது அந்தப் பதிவைத் தனித்திரியாக்கிடலாமா?
 
அக்னி....ரொம்ப சுடாதீங்க....இங்க ஏற்கனவே...கோடை ஆரம்பித்துவிட்டது....!!!

(உங்க தனி மடல்...கிடைக்கலையே....)
 
கே(க்)கா அக்கா,
திரியைத் திசைதிருப்பிவிட்டேனா?
வேண்டுமானால், எனது அந்தப் பதிவைத் தனித்திரியாக்கிடலாமா?


இல்லையே சுவாரஷ்யமாகத்தன இருந்தது. கேக் சுவையை விட பயண அனுபவ சுவை அதிகம்.
 
ஆல்ப்ஸ் மலையின் கோடைக்கால அழகைப் பதியலாமே ஹேகா.. ஆவலுடன் காத்திருக்கிறேன்..!
 
டிப்ஸ் ..கேக் வேகுவதற்காக ஓவனில் வைக்கபட்ட பின்னர் அடிக்கடி திறந்து பார்க்க கூடாது.
சூப்பர் டிப்ஸ்...
நல்ல சுவைவான கேக் ..செய்து பார்த்தேன்..
 
நினைத்து பார்த்தேன்! நினைவுகள் சுகமானவை!
அந்த நாள் மீண்டும் வராதோ?
 
Back
Top