கேக், கேக் அலங்கரிப்பு.. ஸ்விட்டான சுவிஸ்

Hega

New member
ப(B)ட்டர் கேக்

.

தேவையான பொருட்கள்.

கோதுமை மா-250 கிராம்,
பட்டர் 250கிராம்,
முட்டை 5 ,
சீனி 250கிராம்,
பேக்கிங்பவுடர், ஒன்றரை தே.கரண்டி,
வனிலா ஒன்றரை தே.கரண்டி,

செய்முறை.

1. பட்டரையும் சீனியையும் பீடடரால் நன்றாக அடிக்கவும்.

2.பட்டர் சீனி கலவையுடன் முட்டையை சேர்த்து அடிக்கவும்-(முட்டையை முதலில் வேறொரு பாத்திரத்தில் முட்டைக்கோது இல்லாதபடி உடைத்தெடுத்து கொள்ளவேண்டும்)

3.பட்டர்,சீனி,முட்டை கலவையில் விரலால் தொட்டுப்பார்த்தால் சீனி கரைந்திருக்க வேண்டும்.

4.சீனி கரைந்து கிரீம் போல் ஆனதும் கோதுமை மா, பேக்கிங்பவுடர், வனிலா சேர்த்து (பீட்டரால் மெதுவாக) கலந்து விடவும். ஒரு துளி அன்னாசி எசன்ஸ் சேர்த்து கொண்டால் கேக் வாசனையாக இருக்கும்.

5.பேக் பண்ணும் தட்டில் அதற்குரிய பட்டர் பேப்பர் போட்டு கேக் கலவையை ஊற்றவும்.

6.பின்னர் முன் சூடு செய்த ஒவனில் (180 டிகிரி சூட்டில்)40,45நிமிடங்கள் பேக் பண்ணவும்.(கேக் நன்றாக ஊதிவர ஒவனை அடிக்கடி திறக்க கூடாது)

7.40,45 நிமிடங்களின் பின் ஒவனை திறந்து சிறு குச்சியால் நடுவில் குத்தி பார்த்து குச்சியில் கேக் ஒட்டவில்லயென்றால் வெளியெ எடுத்து ஆற விடவும்.

சுவையான கேக் தயார்.

டிப்ஸ் ..கேக் வேகுவதற்காக ஓவனில் வைக்கபட்ட பின்னர் அடிக்கடி திறந்து பார்க்க கூடாது.
 
Last edited:
பேக் பண்ணும் தட்டில் ஊற்ற முன்னர்,
250g பேரீச்சம் பழத்தை, விதையகற்றி, ஓரளவு அரைத்து,
கேக் கலவையுடன் நன்றாகக் கலந்து அடித்துப்,
பின்னர் பேக் பண்ணிப் பாருங்கள்...

மிகவும் சுவையான கேக் தயார்...
 
இவ்வளவுதானா !! டிரையல் பாத்துட்டா போச்சி.. !! :) நன்றிகள் ஹேகா..
 
பேக் பண்ணும் தட்டில் ஊற்ற முன்னர்,
250g பேரீச்சம் பழத்தை, விதையகற்றி, ஓரளவு அரைத்து,
கேக் கலவையுடன் நன்றாகக் கலந்து அடித்துப்,
பின்னர் பேக் பண்ணிப் பாருங்கள்...

மிகவும் சுவையான கேக் தயார்...

நன்றி இது வேறொரு வகை கேக் மெதட்டாக வரும்.

நான் மேலே பதிந்தது நர்மல் பட்டர்கேக், பேரிச்சை சேர்த்தால் அது பேரிச்சைகேக் ஆகிரது.
 
நான் கேக் கேக் ஐசிங் பிறந்த நாள், திருமண வைபவங்களுக்கான கேக் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இங்கே செய்து வருகிறேன்.

சமீபத்தில் செய்த கேக் அலங்காரம் ஒன்று இங்கே

DSCF2215.jpg
[/IMG]
 
கேக் பிரமாதமாக இருக்கிறது ஹேகா. கால்பந்து மைதானத்தில் உங்கள் கற்பனைத்திறன் பிரதிபலிக்கிறது. பாராட்டுகள்.
 
நாம சாதாரணமாக செய்யும் குதப்பி (அட கேக் தாங்க...) இது தான்....

இதுக்கு வனிலாவுக்கு பதில் நெக்டோ எசன்ஸ் (சிவப்பு நிறத்துக்கு) நெல்லி எசன்ஸ் (பச்சை நிறத்துக்கு) ஆரஞ்சு எசன்ஸ் சேரந்த்து வரி வரியாக ஊற்றினால் குதப்பியின் குறுக்கு வெட்டு பல நிறத்தில் வரும். (எனக்கு பொழுது போகாத நேரத்தில் செய்து விளையாடுவது... :D)

வேகும் நேரத்தில் முக்கால் மணிநேரத்தின் பின் வெளியில் எடுத்து அதன் மேல் தடித்த தகர பால் (Tin Milk) மெலிதாக ஊற்றி விட்டால் வெந்து வரும் போது மேற்பகுதி ஒரு வெள்ளை நிறத்தில் இருப்பதோடு மொறுமொறுப்பாகவும் இருக்கும்....

இதுலயே அரைவாசி மாவுக்கு பதிலாக பாண் (bread) ஐ அதே நிறையின் 2 மடங்கில் எடுத்து ஊறவிட்டு நன்றாக புழிந்து நீரை அகற்றியபின் கஜூ கடலை போன்றவற்றை இணைத்து நன்றாக அரைத்து மா சேர்க்கும் போது இதையும் சேர்த்து அடிக்கலாம்.... கொஞ்சம் வித்தியாசமான சுவை தரும். அந்த பாண் கலவைக்கு முடிந்தால் சிவப்பு திராட்சை சாறு (Red wine :D) சிறிது சேர்க்கலாம்.
(இன்னும் கனக்க இருக்கு. சொன்னா சிரிப்பீங்க... அதனால இதோட நிறுத்திடுறேன்... :D :D :D)
 
நிச்சயமாக சிரிக்க மாட்டேன் , இன்னும் இன்னும் சொல்லுங்கள்
 
நன்றி இது வேறொரு வகை கேக் மெதட்டாக வரும்.

நான் மேலே பதிந்தது நர்மல் பட்டர்கேக், பேரிச்சை சேர்த்தால் அது பேரிச்சைகேக் ஆகிரது.
ஆமாம் கேக்கா... ச்சே... ஹேகா... (சும்மா சும்மா...)

உங்ககிட்ட கேக் ஆர்டர் பண்ணினா ஏதாச்சும் டிஸ்கவுண்ட் மன்ற மக்களுக்குக் கிடைக்குமா...

அக்னி: அணிக்கு பத்துவீரர்கள் மட்டும் கிரவுண்ட்ல இருக்கிறாங்களே... கீப்பர்ஸ் இரண்டுபேரும் வெளிய நிக்கிறாங்களே... அதிலயும் ஒருத்தர் பந்தோட நிக்கறாரே...
அன்புரசிகன்: ஒருவேளை இருவருக்கும் ரெட்கார்ட் கொடுத்திட்டாங்களோ...
ஓவியன்: ரெட் கார்ட் யார் கொடுத்திருப்பார்? அவரக் காணோமே...

ஹேகா: விட்டா பவிலியனும் பார்வையாளர் பத்தாயிரம் பேரும் எங்கேன்னும் கேப்பீங்களே... :sauer028:

மிக நேர்த்தியான வடிவமைப்புக்களும் அலங்கரிப்புக்களும்...
:icon_b: :icon_b: :icon_b:

*****
ரசிகரே குதப்பி சொதப்பி வராதவரைக்கும் சிரிக்கமாட்டோம்...
 
Last edited:
நன்றி நீங்கள் வசிக்கின்ற நாட்டை தெரிவித்திருக்கின்றீர்கள் Hega
 
ஹாஹா அக்னி சார் சிரித்து விட்டேன்

உன்னிப்பான உங்கள் கவனிப்புக்கு ஸ்பெஷல் நன்றி

பொதுவாக கால்பந்தாட்ட மைதான பொம்மைகள் கிடைப்பது இங்கே கஷ்டம். இருப்பதை வைத்து சமாளித்தேன்.

ரெம்ப நன்றி
 
:nature-smiley-006:
நன்றி நீங்கள் வசிக்கின்ற நாட்டை தெரிவித்திருக்கின்றீர்கள் Hega

அட இது என்ன மகா பெரும் இரகசியமோ வியாசன் சார் .. பலருக்கு தெரிந்த விடயம் தானே..:nature-smiley-007:

அமரன் சாரின் பக்கத்தூர். சுவிஸ்தான் நம்ம ஊர். இங்கே வந்து காலூன்றி 22 வருடமாகிறது
 
கேக் செய்யும் மெதட்டை விதவிதமாய் அன்பு ரசிகன் அவர்கள் பகிரபோவதால் நான் கேக் அல்ங்கரிப்புக்களினை மட்டும் இங்கே பகிர போகிறேன்

ஓக்கேயா
 
அற்புதம்....கண்ணாடிபோல ஜொலிக்கும் கேக்கை முதல்முறையாய் பார்க்கிறேன்....உங்களுக்குள் உட்கார்ந்திருக்கும் கலைஞியை வியக்கிறேன் தங்கையே.

பாராட்டுக்கள்ம்மா ஹேகா.
 
அற்புதம்....கண்ணாடிபோல ஜொலிக்கும் கேக்கை முதல்முறையாய் பார்க்கிறேன்....உங்களுக்குள் உட்கார்ந்திருக்கும் கலைஞியை வியக்கிறேன் தங்கையே.

பாராட்டுக்கள்ம்மா ஹேகா.

அதே... அதே...

இன்னும் கொடுங்க..

இப்படியே போனால் அக்னியைக் கூட்டிட்டு விரைவாக வீட்டுக்கு வந்திடுவேன்..
 
Back
Top