உண்மைதான், ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விடயம் முதலாவது போட்டியில் ஷஹீர் விளையாடவில்லை, அந்த போட்டியில் இந்திய அணியினால் தென்னாபிரிக்க அணியினரின் ஓட்டக் குவிப்பினைத் தடுக்க முடியவில்லை. இரண்டாவது போட்டியில் ஷஹீர் வீழ்த்திய விரைவு விக்கெட்டுக்களுடன் ஸ்ரீசாந்தும் ஹர்பஜனும் உசாரடைந்ததன் விளைவுதான் இரண்டாவது போட்டியின் வெற்றி....
தென்னாபிரிக்க அணியினரின் முதலாவது இன்னிங்ஸின் பதினொராவது பந்து பரிமாற்றத்துள் தென்னாபிரிக்க அணியினரின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பியிருந்தார் ஷஹீர்....
இந்த போட்டியில் லக்ஸ்மன் நன்றாக விளையாடியிருந்தாலும்,பந்து வீச்சாளர்களால் கிடைத்த வெற்றி இதுவென நான் கருதுகிறேன்...
ஜகீர் ஒரு நல்ல விளையாட்டாளர். ஹர்பஜனை காரரும் கொஞ்சம் நல்லாத்தான் விளையாடினாரு. சிரிசாந்துபொட்டுக்காரரும் இந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.