ஹேகாவின் சமயலறை... தேங்காய் சட்னி

புளியந்தீவு. ஆண்டனிஸ் ஸ்ட்ரீட். வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றது.

ஓ அப்படியா,

எனக்கும் புளியந்தீவு எங்கே என்பது தெரியவில்லை.மட்டக்களப்பு தொடங்கி கல்முனை வரை ஓரளவு ஊர்கள் தெரியும். ஆட்கள் மட்டும் தெரியவே தெரியாது, யாரையாவது தெரியுமா என கேட்டு விடாதீர்கள்..:icon_rollout:

ஆரையம்பதி பக்கமோ..

ஊரை விட்டு கிளம்பி 40 வருடங்களெனில் மாலுபாண் சாப்பிடும் போது உங்கள் வயது என்னவாயிருக்கும் ஜயந்த்..:smilie_abcfra:
 
இதிலிருந்து நீங்கள் மட்டக்களப்பு என்று தெரியுது. :lachen001: ஆனால் அவர் கிளப்பியதிலிருந்து தெரிலயோ... சொந்த ஊரை யாராவது பிழையா உச்சரிப்பாங்களா??? இல்லாட்டி ரொம்பநாளாகியிருக்கும்...

நான் பல தடவை மட்டக்களப்பு ஆரயம்பதி கல்முனை அக்கரைப்பற்று பகுதிக்கு சென்று வந்திருக்கிறேன். (பாசிக்குடாவுக்கும்...) எனக்கு கிழக்கு மாகாணத்தில் பிடித்ததே அந்த ஊர் மக்களின் உபசரிப்புத்தான். நம்மூரில் அது அந்தளவில் கிட்டாது. (நான் யாழை சொன்னேன்)

அட சரியாக சொல்லி விட்டீர்கள் அன்பு ரசிகன், விரோதியாயினும் உள்ளே அழைத்து சிரித்த முகமாய் இனமத, மொழி ஜாதி வித்தி்யாசமின்றி எல்லோரையும் வரவேற்பர், உபசரிப்பர்.

அங்கே கிடைக்கும் உணவின் சுவையும்,அவர்களின் கைப்பக்குவமும், கூட எங்கும் கிடைக்காது.

பாசிக்குடா இப்போது சுற்றுலாவுக்கு ஏற்ப நிரம்ப வசதி செய்யபட்டிருக்கிறது.

ஆரையம் பதி,கிரான்குளம் முந்திரிகைபழத்துக்கும், முந்திரிகை விதை யான கஜூவுக்கு பெயர்பெற்றது. வறுத்த கஜூவின் சுவை அலாதியானது.

அதே போல் அப்பகுதியில் கிடைக்கும் ஒரு வகை இறால்கூனி, மீன் வகைகளும் எங்கும் கிடைக்காததே..
 
தேங்காய் சட்னி

எங்கள் அம்மா தோசைக்கும், உழுந்து வடைக்கும் தொட்டுகொள்ள மிக சுவையான தேங்காய் சட்னி செய்வார். இந்த தேங்காய் சட்னி மட்டுமே தோசைக்கு போதுமானதாய் இருக்கும் படி அதன் வாசனையும், சுவையும் இருக்கும்.

அதே செய்முறை கீழே

தேங்காய் சட்னி​

DSCF0114.jpg

ஒரு தேங்காயில் துருவிய தேங்காய் பூ ..
15 தொடக்கம் 20 காய்ந்த மிளகாய் .. இது அவரவர் கார அளவிற்கேற்ப மாறுபடும்.
சின்ன வெங்காயம்.. 15 தோல் உரித்து கழுவி எடுக்கவும்.
சின்ன சீரகம் ஒரு சின்ன கரண்டி
கறிவேப்பிலை மூன்று முழு இலையினை உதிர்த்து கழுவிகொள்ளவும்
புளி அளவாக கரைத்து கொள்க
உப்பு சுவைக்கு ஏற்ப
தாளிக்க எண்ணெய்

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் இட்டு சூடானதும் முதலில் காய்ந்த மிளகாயை பொரித்து எடுக்கவும், பின்னர் அதே சூட்டில் சின்ன வெங்காயத்தினை போட்டு பாதி தளிகையின் நேரம் கறிவேப்பிலை, சின்ன சீரகம் இட்டு உடனே எடுக்கவும். சின்ன சீரகம் ரெம்ப நேரம் சூட்டில் இருந்தால் கறுத்து கசப்பாகி விடும்.

மிக்சியில் தேங்காய்ப்பூ, பொரித்தெடுத்த காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயக்கலவையுடன் புளிக்கரைசலையும் உப்பையும் அளவாக சுவைக்க்கேற்ப இட்டு சிறிதளவு நீரும் இட்டு மைபோல அரைத்தெடுக்கவும்.

அடுத்த தடவை தோசை செய்யும் போதாவது,வடை செய்யும் போதாவது தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இப்படி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
 
தேங்காய் சட்னி

எங்கள் அம்மா தோசைக்கும், உழுந்து வடைக்கும் தொட்டுகொள்ள மிக சுவையான தேங்காய் ..............

சீனிச்சம்பல் மற்றும் மாசிச்சம்பல் எப்போது?
 
Last edited:
காய்ந்த மிளகுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தால் சட்னி வெண்ணிறமாக இருக்கும். [ஒரு துண்டு இஞ்சியும் சேர்ப்பார்களோ?]
 
தேங்காய் சட்னி

எங்கள் அம்மா தோசைக்கும், உழுந்து வடைக்கும் தொட்டுகொள்ள மிக சுவையான தேங்காய் ..............

சீனிச்சம்பல் மற்றும் மாசி சாம்பல் எப்போது?

அதுவா வரும் போது வரும்.

அதுக்கின்னும் வேளை வரவில்லையே..
 
காய்ந்த மிளகுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தால் சட்னி வெண்ணிறமாக இருக்கும். [ஒரு துண்டு இஞ்சியும் சேர்ப்பார்களோ?]

அட,

இது தேங்காய் சட்னியில் இன்னொரு வகை கௌதமன் அவ்ர்களே.
ஆனால் மேலே சொன்னசெய்முறைபோல் மணம், குணம் இருக்காது. சுவை இருக்கும்.
 
ஓ அப்படியா,

எனக்கும் புளியந்தீவு எங்கே என்பது தெரியவில்லை.மட்டக்களப்பு தொடங்கி கல்முனை வரை ஓரளவு ஊர்கள் தெரியும். ஆட்கள் மட்டும் தெரியவே தெரியாது, யாரையாவது தெரியுமா என கேட்டு விடாதீர்கள்..:icon_rollout:

ஆரையம்பதி பக்கமோ..

ஊரை விட்டு கிளம்பி 40 வருடங்களெனில் மாலுபாண் சாப்பிடும் போது உங்கள் வயது என்னவாயிருக்கும் ஜயந்த்..:smilie_abcfra:

மட்டக்களப்பு டவுன். ஒன்பது வயது.
 
ஒன்பது வயதில் ஊரை விட்டு கிளம்பி இப்போது 40 வருடமாச்சா:smilie_abcfra:

இன்னும் அபோது சாப்பிட்ட மாலுபாண் நினைவில் உண்டா!!

ஆச்சரியமான் நினைவாற்றல் உங்களுக்கு.
 
உளுந்து வடைக்கு ஓட்டை போடுகிறோம்; ஆனால் மசால் வடைக்கு போடுவதில்லை. என்ன காரணம்?
 
தோசைக்குத் தொட்டுக்கொள்ள நாங்கள் செய்யும் தேங்காய் சட்னி :

பொட்டுக்கடலை : 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் : 1 கப்

உப்பு : தேவைகேற்ப

எலுமிச்சம்பழச் சாறு...தேவையானால், 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் : தேவைக்கேற்ப..1 அல்லது 2

தாளிக்க, எண்ணை கடுகு, பெருங்காயம்

முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலையை பொடித்துக்கொண்டு, பின் மிளகாய், தேங்காய்த் துருவல், சேர்த்து அரைத்து எடுத்தபின் உப்பு, எலுமிச்சம்பழ சாறு சேர்த்து, சிறிது எண்ணையில் கடுகு, பெருங்காயம் தாளித்து எடுத்து சட்னியில் கலக்கவும். சுவையான சட்னி தயார்...
 
தெரியவில்லையே...
 
அருமையான் குறிப்பு அம்மா..

நிச்சயம் ஒரு நாள் வீட்டில் செய்து பார்த்து விடுகிறேன். இன்னும் இன்னும் உங்களுக்கு தெரிந்த சட்னி வகைகளை எனக்கு சொல்லி கொடுங்கள். மகிழ்வேன்.
 
உளுந்து வடைக்கு ஓட்டை போடுகிறோம்; ஆனால் மசால் வடைக்கு போடுவதில்லை. என்ன காரணம்?
உளுந்து வடைக்கு ஓட்டை போடுவதால் அது நான்கு வெந்துவிடுகிறது. மசால் வடை ஓட்டை போடாமலேயே நான்கு வெந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் இரண்டு மாவுகளின் தன்மையே. உளுந்தம்மாவு மிகவும் நன்றாக அரைக்கப்பட்டு மிருதுவாக இருக்கும். மசால் வடைக்கு அரைக்கப்பட்ட மாவோ, முழுமையாக அறைக்கபடாமல் திப்பி,திப்பியாக இருக்கும். பருப்பு அரைகுறையாக பொடிக்கப்பட்டது போல் இருக்கும். இதில் ஓட்டை போட்டு வேகவைத்தால், பருப்புத் துகள்கள் உதிர்ந்து எண்ணையில் கலந்து கருகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே மசால் வடைக்கு ஓட்டை போட மாட்டார்கள். எதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.:)
 
தயாளன் ஐயா, நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
 
ஹாங், இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கறது
 
Back
Top