ஹேகாவின் சமயலறை... தேங்காய் சட்னி

மாலு(மரக்கறி) பாண்
வை திஸ் கொல வெறி.... இது பயங்கர தில்லாலங்கடியா இருக்கு... சிங்களவங்களில் கோபம் இருந்தாலும் இப்படி பொய் பேசப்படாது....
(அது எலவெலு பன்) :D :D :D

உழுந்து வடை

வடையின் சுவை உழுந்தின் தரத்திலும் உண்டு
அதனால் நல்ல தரமான் உழுந்தாய் வாங்கிக்கொள்ளவும்

உழுந்து ஒருகிலோ
வெங்காயம் பெரியது ஒருகிலோ
பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் காரத்துக்கும்,சுவைக்கும் ஏற்ப
சின்ன சீரகம், பெரிய சீரகம்
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க சூரியகாந்தி எண்ணெய்

நன்றாக அரைப்பது தான் அந்த மென்மையின் ரகசியமா??? நான் நினைத்தது கோதுமைமா கலவையால் என்று... உங்களின் முறைப்படி கோதுமைமாவையே காணவில்லை. ஒருக்கா செஞ்சிடவேணும்....
 
வடையைப் படத்தில் பார்த்தவுடனேயே எச்சில் ஊறுகிறது. செய்முறையும் சிறப்பாக உள்ளது. ஆனாலும் ஜானகி அம்மையாரின் விமர்சனத்திற்காகக் காத்திருக்கிறேன்.
 
வை திஸ் கொல வெறி.... இது பயங்கர தில்லாலங்கடியா இருக்கு... சிங்களவங்களில் கோபம் இருந்தாலும் இப்படி பொய் பேசப்படாது....
(அது எலவெலு பன்) :D :D :D

நன்றாக அரைப்பது தான் அந்த மென்மையின் ரகசியமா??? நான் நினைத்தது கோதுமைமா கலவையால் என்று... உங்களின் முறைப்படி கோதுமைமாவையே காணவில்லை. ஒருக்கா செஞ்சிடவேணும்....

கோதுமை மா சேர்ப்பதால் உழுந்து கெட்டிப்படும். அதனால வடை அதன் மெதுமையை இழக்கும், தனி உழுந்து இட்லிக்கு அரைப்பதை விட நீர்த்தன்மை குறைவாய் அரைக்கவும். நீர் விடாமல் அரைத்தாலும் உழுந்து வடை கடினமாகும். மிக்சி பழுது படும்.

அரைக்கும் போது மிக்சி தானாக சுத்தும்படி நீர்ப்பதம் இருக்கலாம். நன்றாக அரைபட்டால் வெண்ணிறமாய் கோதுமைமாவுபோல் மையாய் இருக்கும்.
 
வடையைப் படத்தில் பார்த்தவுடனேயே எச்சில் ஊறுகிறது. செய்முறையும் சிறப்பாக உள்ளது. ஆனாலும் ஜானகி அம்மையாரின் விமர்சனத்திற்காகக் காத்திருக்கிறேன்.

நிச்சயமாய் ஜானகி அம்மாவின் கருத்தும் வேண்டியதே.:icon_b:

ஜானகி அம்மா வேறு செய்முறை சொன்னாலும் மகிழ்வேன். அவை எனக்கு பயன் தரும்.

நான் இங்கே ஹேஹாஸ்ன் ஈவண்ட் மனேஜ்மெண்ட் எனும் பெயரில் கேட்டரிங், பார்ட்டி சேவிஸ் அண்ட் ஆல் பார்ட்டி அரேஞ்மெண்ட் செய்வதால் பல நேரம் 1000,1500 வடைகள் கூட ஒரு நாளில் செய்வோம். 1000 பேர் கல்ந்து கொள்ளும் விருந்திற்கு எப்படியும் 1500 வடை தேவைப்படும் அல்லவா.
 
வடை மாவு நீர்க்காமல் இருக்க ஒரு ஸ்பூன் அரிசிமாவு சேர்க்கலாம். அதிகம் எண்ணெய் குடிக்காது.
 
செய்முறைகள் அனைத்தும் சிறப்பு. கைப்பக்குவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாய் இருக்கும். அதன்படி இங்கே ஹேகாவின் கைப்பக்குவம் அசத்துகிறது. பாராட்டும் நன்றியும் ஹேகா.
 
ஆஹா அப்படியா,

அடுத்த தடவை செய்யும்போது அரிசி மா சேர்த்து முயற்சித்து பார்க்கிறேன் அக்கா

சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல் நான் காட்டிகொடுக்கும் செயல்முறையில் என் கண்காணிப்பில் எம்மிடம் வேலை செய்பவர்கள் வடை செய்வதால் இதுவரை நீர்ப்பதம் பிராப்ளம் ஆகவில்லை.
 
அடடா, எல்லோரும் மன்னிக்கவும்.

இதுவரை உழுந்து என்றே உளுந்தை எழுதினேன். உழுந்தல்ல ஹேகா அது உளுந்தென தனிமடலிட்டு கற்பித்த கீதம் அக்காவுக்கு நன்றி. :nature-smiley-007:

இனிமேல் உழுந்து வடை உளுந்து வடையென எழுதப்படும்.:nature-smiley-009:
 
ஆயிரம் பேர்க்கு அசால்ட்டாக வடை செய்பவருக்கு நான் என்ன பெரிதாகச் சொல்வது...?

ஒரு ரகசியம்...மொறு மொறு வடைக்கு.....மாவு அரைக்கும்போது உப்பு சேர்க்காமல், அரைத்து எடுத்தபின் உப்பு சேர்த்தால், மாவு நீர்த்துப் போகாமல் மொறு மொறுவென்று, உள்ளே மெதுவாக வரும்.

மாவு நீத்துப் போனால், அரிசிமாவுக்குப் பதில் கார்ன்ப்ளோர் மாவு [ சோளமாவு ] கொஞ்சம் சேர்க்கலாம்.

எண்ணையில் பொரிக்கும் எந்த பதார்த்தத்திற்கும், அடுப்பில் வைத்த சூடான எண்ணையில் ஒரு ஸ்பூன் எடுத்து, கலவையில் கலந்துகொண்டால், கரகரப்பான பதம் வரும்....இது பஜ்ஜி, பக்கோடாவிற்கும் பொருந்தும்.
 
உளுந்து வடையில் சிலர் முட்டைக் கோஸ் சேர்ப்பதும் உண்டு. அதை சாப்பிட்டும் இருக்கிறேன். ஒரு முக்கியமான சந்தேகம் உளுந்து வடையின் நடுவில் ஓட்டை போடுவதேன்? (நகைச்சுவைக் கேள்வியல்ல.. ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது)
 
மட்டக்கிளப்பில் மாலுப்பாண் சாப்பிட்ட மலரும் நினைவுகள் !!!!!
 
மட்டக்கிளப்பில் மாலுப்பாண் சாப்பிட்ட மலரும் நினைவுகள் !!!!!

ஊரில் சாப்பிட்ட உளுந்து வடை ஞாபகம் இல்லை. ஆனால் ஊர்தாண்டி சாப்பிட்ட பாண் ஞாபகம் வருது... :eek:
 
மட்டக்கிளப்பில் மாலுப்பாண் சாப்பிட்ட மலரும் நினைவுகள் !!!!!

அட நீங்கள் மட்டக்களப்பா, மட்டக்களப்பில் எங்கே..:smilie_abcfra:

ஊர் விட்டு வந்து ரெம்ப வருடமாகி விட்டதா..
 
உளுந்து வடையில் சிலர் முட்டைக் கோஸ் சேர்ப்பதும் உண்டு. அதை சாப்பிட்டும் இருக்கிறேன். ஒரு முக்கியமான சந்தேகம் உளுந்து வடையின் நடுவில் ஓட்டை போடுவதேன்? (நகைச்சுவைக் கேள்வியல்ல.. ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது)

தெரியவில்லையே, நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்.:icon_b:
 
பிறந்த மண்

ஊரில் சாப்பிட்ட உளுந்து வடை ஞாபகம் இல்லை. ஆனால் ஊர்தாண்டி சாப்பிட்ட பாண் ஞாபகம் வருது... :eek:

பிறந்து வளர்ந்த மண்ணை மறக்க முடியுமா ?!?!?!
இங்கே மாலுப்பாண் கிடைக்காதே !!!
 
அட நீங்கள் மட்டக்களப்பா, மட்டக்களப்பில் எங்கே..:smilie_abcfra:

ஊர் விட்டு வந்து ரெம்ப வருடமாகி விட்டதா..

புளியந்தீவு. ஆண்டனிஸ் ஸ்ட்ரீட். வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றது.
 
அட நீங்கள் மட்டக்களப்பா, மட்டக்களப்பில் எங்கே..:smilie_abcfra:

ஊர் விட்டு வந்து ரெம்ப வருடமாகி விட்டதா..

இதிலிருந்து நீங்கள் மட்டக்களப்பு என்று தெரியுது. :lachen001: ஆனால் அவர் கிளப்பியதிலிருந்து தெரிலயோ... சொந்த ஊரை யாராவது பிழையா உச்சரிப்பாங்களா??? இல்லாட்டி ரொம்பநாளாகியிருக்கும்...

நான் பல தடவை மட்டக்களப்பு ஆரயம்பதி கல்முனை அக்கரைப்பற்று பகுதிக்கு சென்று வந்திருக்கிறேன். (பாசிக்குடாவுக்கும்...) எனக்கு கிழக்கு மாகாணத்தில் பிடித்ததே அந்த ஊர் மக்களின் உபசரிப்புத்தான். நம்மூரில் அது அந்தளவில் கிட்டாது. (நான் யாழை சொன்னேன்)
 
புளியந்தீவு. ஆண்டனிஸ் ஸ்ட்ரீட். வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றது.

புளியந்தீவிலிருந்துகொண்டு களப்பை கிளப்பிவிட்டியளே....

ஆமா நாற்பது வருசம் என்றால் நீங்கள் எனக்கு தாத்தாவா???? :icon_rollout:
 
புளியந்தீவிலிருந்துகொண்டு களப்பை கிளப்பிவிட்டியளே....

ஆமா நாற்பது வருசம் என்றால் நீங்கள் எனக்கு தாத்தாவா???? :icon_rollout:

கண்டிப்பாக இல்லை (!!!) உங்கள் தாத்தாவிற்கு எத்தனை வயதாகின்றது ?
 
Back
Top