ஹேகாவின் சமயலறை... தேங்காய் சட்னி

Hega

New member
மாலுபாண்

பாண் செய்ய தேவையான பொருட்கள்;

கோதுமை மா 500கிராம்.
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1/2 தே.கரண்டி


பாண் செய்யும் முறை;

சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், ஈரத்துணியால் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.



கறி செய்ய தேவையான பொருட்கள்;


மீன் (ப்ரெஷ் மீன் அல்லது ரின்னில் அடைக்கப்பட்டது.)
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப


கறிசெயயும் முறை;

ப்ரெஷ் மீன் என்றால்:சுத்தம் செய்யப்பட்ட மீன், மஞ்சள் துள், உப்பு சேர்த்து அவித்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு, வெங்காயம் வதக்கி உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.
அடிப்பிடிக்காதபடி அடிக்கடி கிளறி கிழங்கு பாதிவெந்ததும் பிசைந்த மீன்,மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்..
கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.



பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும். கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.


பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது
 
Last edited:
மாலு பண்ணும் லக்ஸ்பிறே டீயும், சைவ மங்கையர் பள்ளிப் பெண்களும்...

அது பல பொன்மாலைப் பொழுது..
 
Hega! உங்கள் குறிப்பு பாத்ததும் பண்ணலாம் போல இருக்கு. வீட்டில் சொல்லி செய்து பார்த்துவிட்டு.
ரேஸ்ராக இருந்தால் வந்து சொல்லுகின்றேன்.
 
Hega! உங்கள் குறிப்பு பாத்ததும் பண்ணலாம் போல இருக்கு. வீட்டில் சொல்லி செய்து பார்த்துவிட்டு.
ரேஸ்ராக இருந்தால் வந்து சொல்லுகின்றேன்.

உண்மையை ஒத்துக்கொள்ள தைரியம் வேணும்.. :)
 
Hega கொடுத்துள்ள குறிப்புகளின்படி மீன் மசாலா தயார்செய்து பாணுள் வைக்காமலேயே அவற்றை உருண்டைகளாக்கி அடித்துவைத்துள்ள முட்டை மஞ்சள் கருவில் புரட்டி பிரெட் துகள்களில் மேலும் புரட்டியெடுத்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். நான் ட்யூனா மீனைக்கொண்டு அடிக்கடி செய்வதுண்டு.

அடுத்தமுறை பாணுடன் செய்துபார்க்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி Hega.
 
மாலு பண்ணும் லக்ஸ்பிறே டீயும், சைவ மங்கையர் பள்ளிப் பெண்களும்..

அது பல பொன்மாலைப் பொழுது..

அமரன் உதெல்லாம் எங்கை நடந்தது? உண்மையை சொல் தைரியம் வேணும் இப்பதான் எங்கையோ வாசித்தமாதிரி இருக்கின்றது

Hega! நன்றி சமைத்ததும் பகிர்கின்றேன் சுவையை பற்றி
 
மாலு பண்ணும் லக்ஸ்பிறே டீயும், சைவ மங்கையர் பள்ளிப் பெண்களும்...

அது பல பொன்மாலைப் பொழுது..


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஞாபகம் வருதே.ஞாபகம் வருதேன்னு பாடத்தோன்றுகிறதா.. அமரன் சார்.
 
Hega கொடுத்துள்ள குறிப்புகளின்படி மீன் மசாலா தயார்செய்து பாணுள் வைக்காமலேயே அவற்றை உருண்டைகளாக்கி அடித்துவைத்துள்ள முட்டை மஞ்சள் கருவில் புரட்டி பிரெட் துகள்களில் மேலும் புரட்டியெடுத்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். நான் ட்யூனா மீனைக்கொண்டு அடிக்கடி செய்வதுண்டு.

அடுத்தமுறை பாணுடன் செய்துபார்க்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி Hega.


ஆமாம் கட்லட் என்பதும் அதுதானோ கீதம் அக்கா.
 
ஒரு காலத்தில் எனக்கு அவசர உணவாக இருந்துதவிய மாலு பண் செய்யும் முறையினை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...

மாலு பண்ணும் லக்ஸ்பிறே டீயும், சைவ மங்கையர் பள்ளிப் பெண்களும்...

உண்மையை ஒத்துக்கொள்ள தைரியம் வேணும்.. :)

நீங்க ரொம்ப.................. தைரியசாலிதான அமரூ..!! :cool:
 
மாலு(மரக்கறி) பாண்


DSCF0013-4.jpg



பாண் செய்ய தேவையான பொருட்கள்;

கோதுமை மா 500கிராம்.
ஈஸ்ட்-.20 கிராம்
சீனி 1/2 தே.கரண்டி

பாண் செய்யும் முறை;

சீனி ஈஸ்ட்-. வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து வைக்கவும்
கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டு உப்பு ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், ஈரத்துணியால் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

கறி செய்ய தேவையான பொருட்கள்;

வெங்காயம் 500 கிராம்
உருளைக்கிழங்கு 2 (சேர்க்காமலும் செய்யலாம்)
காரட் 2
லீக்ஸ் 1 சிறிதாக
கோவா சிறிதாக
பீன்ஸ் 100 கிராம் (நடுவால் கீறீ சிறிய துண்டுகளாக வெட்டியெடுக்கவும்.)
சோயாபீன்ஸ் 100 கிராம்
தக்காளிப்பழம் 2
பூண்டு, இஞ்சி, சீரகம் கடுகு கறிவேப்பிலை மிளகாய் தூள் சுவைக்கேற்ப


கறி செய்யும் முறை

காய்களை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டியெடுக்கவும்
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும்
கடுகு, சீரகம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு வெங்காயம் வதக்கி
லீக்ஸ் கோவா சேர்த்து பிரட்டியதும்
நறுக்கிய காரட் பீன்ஸ் சேர்த்து மூடி வேகவிடவும்
காரட் பீன்ஸ் பாதிவெந்ததும் உருளைக்கிழங்கு
மிளகாய்த்தூள் உப்பு, சேர்த்து மூடி வேகவிடவும்
காய்கறி நன்றாக அவிந்து சேர்ந்த்தும்
சுடு நீரில் ஊறவைத்தெடுத்த சோயாபீன்ஸ்
தக்காளிப்பழம் சேர்த்து வாசனை போகும் வரை பிரட்டி மூடி வேகவிடவும்.
கறி நன்றாக சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.


பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கைகளில் வைத்து தட்டையாக தட்டி நடுவில் கறி வைத்து மூடி உருண்டைகளாக்கவும்.

கடைசியாக முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்து பூசி ஒவனில் 200_220 டிகிரி சூட்டில் 25-- 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணி
கோல்ட் கலரில் வந்ததும் வெளியே எடுக்கவும்.

மாலு(மரக்கறி) பாண் ரெடி.


பாண் நன்றாக ஊதி வர ஒவனை அடிக்கடி திறக்கக்கூடாது.


நான் ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் தாளிப்பதற்கு சேர்க்கும் எண்ணையிலேயே செய்து முடிக்கலாம்.
(தண்ணீர் சேர்க்காமல்) காய்களையும் அவித்து எடுக்கலாம்
 
Last edited:
கட்லட்

DSCF0089-3.jpg



தேவையான பொருட்கள்....

மீன் சுவைக்கேற்ப
உருளைக்கிழங்கு..... 500 கிராம்
வெங்காயம்..... பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய்..... 7
மிளகு உப்பு சுவைக்கும் , தேவைக்கும் ஏற்ப
எண்ணெய் பொரிப்பதற்கு

பிஸ்கட் (ரஸ்க்) தூள் எனப்படும் பனியர் மா
முட்டை 1
கோதுமைமா சிறிதளவு


செய்முறை

1.மீன் பிரெஸ் மீனாக இருந்தால் அதை சுத்தம் செய்து உப்பும் மஞ்சளும் இட்டு அவித்து முள்நீக்கி எடுக்கவும்.

2.உருளைக்கிழங்கை அவித்து தோலை உரித்து பிசைந்து கொள்ளவும்.

3.வெங்காயம், பச்சை மிளகாயை சின்னதாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு( அதிகம் எண்ணெய் வேண்டாம்).நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தில் இருக்கும் நீர் வற்றிப்போகும் வரை வதக்கினால் போதும்.

4.மீன், வெங்காயக்கலவையை உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து பிசையவும் .

5.1.ஒரு தட்டில் கோதுமைமாவைக்கொட்டி பரப்பி எடுத்துக்கொள்ளவும்.
11.அகலமான பாத்திரத்தில் முட்டையை நன்றாக நுரைவரும் வரைஅடித்து வைத்துக்கொளளவும்
111.பிஸ்கட் தூளை இன்னொரு தட்டில் பரப்பி எடுத்துக்கொள்ளவும்

6.ஏற்கனவே தயர் செய்யப்பட்ட கலவையை மோதகம் பிடிப்பதுபோல் இரு உள்ளம் கைகளுக்கிடையில் வைத்து நன்றாக அழுத்தி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கோதுமை மாவில் பிரட்டிய்பின் முட்டைக்கலவையில் மூழ்க வைத்து பிஸ்கட்தூளில் சேர்த்து பிரட்டவும்.
செய்முறையை இலகுவாக்க கலவை முழுவதையும் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து கோதுமை மாவின் மேல் வரிசையாக அடுக்கியபின் ஒவ்வொன்றாக முட்டைகலவையில் இட்டு அதன்பின் உடனே பிஸ்கட் தூளில் பிரட்டி எடுக்கலாம்.

8.இறுதியாக அடுப்பில் அழமான அகலமான வாணலியை வைத்து எண்ணெய் கொதித்ததும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளைப்போட்டு மெதுவாக உடையாதபடி தங்க நிறத்தில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.



டிப்ஸ்..... கோதுமைமாவில் பிரட்டுவதால் கட்லட் இலகுவில்வெடிக்காது.
வெங்காயத்தை வதக்கி சேர்ப்பதால் சிக்கிரம் கெட்டுப்போகாது
.
 
மாலுபாண்... இரண்டு வகைகலும் நல்லாவே செய்முறைகளோடு தந்து செய்வதற்க்கு ஆசையை வளர்த்து விட்டுட்டிங்க..

அடுத்து மீன் கட்லட் செய்முறை தந்து அறிய தந்துள்ளிர்கள்..

எல்லாம் மீன்கள் வைத்து செய்வதால் நமக்கும் நல்லதுதான்...

பாராட்டுக்கள் ..

இன்னும் மீன்கள் வைத்து செய்யும் டிஷ் இருந்தால் கொண்டு வந்து பறிமாறுங்க..:)
 
மாலுபாண்

DSCF0012.jpg


அமரன் சார் லக்ஸ்பிறே டீ நீங்களே போட்டுக்கோங்க.
 
உழுந்து வடை


உழுந்து வடை என்றதும் அட ரெம்ப இலகுவானதாச்சே என தோன்றும். கடையில் சாப்பிடும் போது மொத்து மொத்தென மெதுமையாய் இருக்கும் வடை வீட்டில் செய்து பார்த்தால் கல்லுபோல் கடினமாய் தெரியும். கலவை வெந்தும் வேகாமலும் இருக்கும்.

கடையில் கிடைப்பது போலவே மெதுமையாய், பெரியதாய் வடை வீட்டிலும் செய்யலாமே..

எப்படி என பார்க்கலாமா..


DSCF0092.jpg
 
போன வாரம் லா சப்பல் என்ற இடத்தில் இருக்கும் சிலோன் பேக்கரியில் மாலுபான் சாப்பிட்டேன். என்னதான் இருந்தாலும் சிங்கள பேக்கரி மாலு பானுக்கு இணையாக ருசிக்கவில்லை..
 
இந்த கலப்படத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மீன் எப்ப மரக்கறி ஆச்சு.:)



அட முதல் பதிவில் மீன் பெயருக்கேற்ப மாலுவில் பாண்.

அடுத்து தொடர்வது மரக்கறி பிரியர்களுக்கானதாக்கும்...:cool:
 
போன வாரம் லா சப்பல் என்ற இடத்தில் இருக்கும் சிலோன் பேக்கரியில் மாலுபான் சாப்பிட்டேன். என்னதான் இருந்தாலும் சிங்கள பேக்கரி மாலு பானுக்கு இணையாக ருசிக்கவில்லை..


இங்கே வாருங்கள், வருமுன் அறிவித்து வாருங்கள்

இலங்கையில் சாப்பிடுவது போலவே இங்கும் சாப்பிடலாம்.

ஆனால் ஒன்று தெரியுமா.. நாம் அங்கிருந்தகாலங்களில் ருசித்ததுபோல் இன்றைய கால உணவுவகை அங்கே கடைகளில் ருசிப்பதில்லை. உதாரணம் இந்த மாலுபானும், கொத்து ரொட்டியும். முன்னர் கொத்து ரொட்டி என்றால் அதன் வாசனையே தனி, இப்போ சக்கென சுவையே இன்றி போனது.
 
உழுந்து வடை

வடையின் சுவை உழுந்தின் தரத்திலும் உண்டு
அதனால் நல்ல தரமான் உழுந்தாய் வாங்கிக்கொள்ளவும்




உழுந்து ஒருகிலோ
வெங்காயம் பெரியது ஒருகிலோ
பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் காரத்துக்கும்,சுவைக்கும் ஏற்ப
சின்ன சீரகம், பெரிய சீரகம்
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க சூரியகாந்தி எண்ணெய்


உழுந்தை ஆறுமணி நேரமாவது ஊறவிடவும்.
பெரியவெங்காயம், ப,மிளகாய், கறிவேப்பிலையை சின்னதாக நறுக்கவும்,
காய்ந்த மிளகாயை மிக்சியில் தூளாக்கி கொள்ளவும்

உழுந்து ஊறுயதும் நன்றாக கழுவி மிக்சியில் இட்டு நீர் அதிகம் விடாமல் மைபோல் அரைக்கவும், உழுந்து நன்றாக அரைபட வேண்டும். தோசைக்கு அரைப்பதை விடவும் மையாக அரைக்கவும். உழுந்து அரைபட்டால்தான் வடை மெதுமையாகவும், சிறிதளவு கலவையில் ஊதி பெரிதாகவும் வரும்.

அரைத்த உழுந்துடன் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, சின்ன சீரகம், பெரிய சீரகம்,காய்ந்த மிளகாயும் சேர்த்து அளவாய் உப்பிட்டு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயிட்டு சூடாகியதும் உழுந்து கலவையை உருண்டைகளாக் பிடித்து நடுவில் துவாரமிட்டு பொரித்தெடுக்கவும்.

எணணெய் வடைக்கு மேலாய் இருக்க வேண்டும்.அப்போது தான் நீங்கள் போடும் அளவைவிட வடை இருமடங்கு பெரிதாய் ஊதி வரும். வடைகளை எண்ணெயில் இடும்போது அதிக சூட்டிலும் வடை மிதக்க ஆரம்பித்தபின் மிதமான் சூட்டிலும் வைத்து பெரிக்கவும்.


வடை ஒரே அளவில் வர ஐஸ்கிரிம் உருண்டைகள் போட பாவிக்கும் கரண்டியால் வடை போடலாம். கலவையில் அதிகம் கைபடாது என்பதால் நீர்த்தன்மையாதல் குறைவாயிருக்கும்.

இந்த அளவில் கடைகளில் கிடைப்பது போல் 35, 40 வடைகள் செய்யலாம்.
சிறிய அளவெனில் 60 வடை செய்யலாம்.

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
 
Back
Top