வாடகை வீடும் நுகர்வோர் மன்றங்களும்

சரியான பதில் கூறினால் மனம் வருத்தப்படுவீர்கள் என்று அமைதியாக இருந்துவிட்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கயின் அடிப்படையில் வாடகைக்கு என் தகப்பனார் குடி சென்ற வீட்டில் இன்று நான் தலைஎடுத்துவிட்ட நிலையில் இரசீது கேட்டேன் என்றால் நான் கடைமயில் தவறிவிட்டடேன் என்றும் வீட்டு சொந்தக்கரரின் சொத்தை கொள்ளை அடித்துவிட்டேன் என்றும் கூறுவதில் இருந்து நுகர்வோரை நோகடிக்கும் நுகர்வோர் மன்றங்களின் போக்குத்தான் தெரிகிறது. இரசீது கேட்பதில் உள்ள சிக்கல்களை பற்றி அல்லவா இங்கு விவாதிக்க வேண்டும்? இன்று ரூ10000 வாங்குபவர் அதற்க்கு இரசீது கொடுக்கமாட்டார் என்பது மட்டும் அல்லாமல் அரசாங்கத்துக்கும் எந்த வரியும் செலுத்தப் போவதில்லை. அடிப்படையில் நிலைமை நுகர்வோரை சூரையாட வசதியாக இருக்க நுகர்வோர் நீதிமன்றங்கள் என்பதும் வக்கீல்களிடம் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குவதற்கு என்பதாகவே உள்ளது என்பதல்லவா என் கருத்து. வக்கீல்களின் வில்லங்க போக்கை விசாரிக்காத நுகர்வோர் நீதி மன்றம் என்பது Fraud
 
20 வருடங்கள் ஒரு குடும்பம் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அவர்களைக் கிளப்புவது ப்ரம்மப் ப்ரயத்னம். தில்லியில்.

இவ்வளவு அத்தாட்சிகள் இருக்கும் போது .... சராசரி மனிதனிடம் இவைகளில் ஒருசில கட்டாயம் இருந்தாக வேண்டும் .... தாங்கள் ஏன் கோர்ட்டுக்குச் செல்லவில்லை?
===கரிகாலன்
மந்தைவெலி டெல்லியில் இல்லை. மேலும் தன் மகன் குடும்பம்... என்று கூறப்பட்ட காரணத்திற்க்கு எந்த கோர்டிலும் அப்பீல் இல்லை. 20 வருட உறவு என்பதிற்க்கு நான் கொடுத்த மரியாதை என்பதும் ஒரு உண்மை
 
நானும் 32 வயதுவரை வாடகைவீட்டில் குடியிருந்தவன் தான். இப்போது வாடகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரு கடையை 7 வருடங்களாக வாடகைக்கு எடுத்திருப்பவர்கள்...நான் அதை மாற்றியமைத்துக் கட்டப்போகிறேன்...அதனால் தயவுசெய்து காலி செய்யுங்கள் என்று சொன்னால்....இவ்வளவு முதல் போட்டுவிட்டோம்....உடனே காலி செய்ய முடியாது(இவ்வளவுக்கும் நான் அவர்களுக்கு மூன்றுமாதம் அவகாசம் கொடுத்தேன்) இதே ஏரியாவில் இதைப்போலவே(இளிச்சவாய ஓனர்) கிடைத்த பிறகு காலி செய்கிறேன் என்று சொல்கிறார்கள். வெறும் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு பல லட்சங்கள் மதிப்புள்ளக் கடையை சொந்தமாக்கிக்கொள்ள...வக்கீல் தேடுகிறார்கள்.

லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...2G விற்றோ சம்பாதித்துக் கட்டியதல்ல அந்தக் கட்டடம்...பிற்கால வருமான ஆதாரத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது. இதற்கு உரிமை கொண்டாடும் அவர்களைப் போலத்தான் இருக்கிறது உங்கள் பதிவும். சந்தை நிலவரத்தை மனதில் கொள்ளாமல்....அதிக வாடகைக்காக காலி செய்யச் சொல்கிறர்கள் என்று சொல்வதே அடிப்படைத் தவறு....அதற்கும் மேல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க நினைப்பது....அடேங்கப்பா.....என்னத்த சொல்றது....?
வாடகையில் வரும் வருமானம் உழைத்து வரும் வருமானம் என்பது தாங்கள் எவ்வாறு பண்பட்டவர் என்பதை காட்டுகிறது! சந்தை மதிப்பு என்பது இது நாள் வரை அங்கு தன் உழைப்பால் கடை நடத்துபவர் முயற்சியில் உயர்ந்தது. அடுத்தவர் உழைப்பை சொந்தம் கொண்டாடும் நீங்கள்தான் தமிழகத்தின் தலைசிறந்த ஓனர்!! லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...இல்லாமல் எப்படி சார் சொந்த வீடும் கடையும் கட்ட முடியும்? கொள்ளை அடிக்கிறோம் என்று கூட தெரியாமல் கொள்ளை அடிக்கும் உங்களைப்போன்ற அப்பாவி ஓனர் இருக்கவே முடியாது சார்!!
 
Back
Top